தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல் முதல்வர், முதல் அமைச்சர் கமல் சந்திப்பு, செவாலியே கமல், அரசியல் பேச்சு கமல், கேரள முதல்வர் பினராயி விஜயன் கமல் சந்திப்பு
சூடான அறிக்கைகளால் தமிழக அரசியல் உலகை மேலும் அனலாக்கியவர் கமல்ஹாசன்.
இந்நிலையில் இவர் முதல்வரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இவர் சந்திப்பது கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களைத்தான்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு ஒரு விழாவுக்கு செல்லும் கமல்ஹாசன் அங்கு கேரள முதல்வரை அவரை இல்லத்தில் சந்திக்கிறாராம்.
(அப்போ கேரள முதல்வரை கமல் சந்திக்கபோறார் அப்படின்னு டைட்டில் போட்டு இருக்கலாமே? கேட்கிறீங்களா..? விஷயம் இருக்கு பாஸ்…)
கடந்த ஆண்டு கமல் செவாலியே விருதுபெற்ற போது பினராய் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஆனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்காத நிலையில் கீழே உள்ள கடிதத்தை கமல் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பினராயி விஜயன், வேற்று மாநில முதல்வர் அல்ல; அவர் என் மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்.
நீங்கள் மலையாள சினிமா பார்க்கும் எந்த ஒரு மலையாளியையும் கேட்டுப் பாருங்கள்.. கமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று?
Kamalhassan goint to Meet Chief Minister of Kerala