பிப்ரவரி 21ல் கட்சியை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்கும் கமல்

பிப்ரவரி 21ல் கட்சியை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassanதான் அரசியலுக்கு வருவது உறுதி. விரைவில் கட்சி மற்றும் அதன் விவரங்களை அறிவிப்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இதனிடையில் சபாஷ் நாயுடு மற்றும் விஸ்வரூபம் 2 உள்ளிட்ட சினிமா படங்களின் பணிகளில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில் தற்போது தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார் கமல்.

அடுத்த மாதம் பிப்ரவரி 21ம் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது சுற்றுப்பயணத்தை தான் பிறந்த ஊரான தனது பூர்வீகமான ராமநாதபுரம் மண்ணிலிருந்து தொடங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளர்.

Kamalhassan going to launch his new political party on 21st Feb 2018

கமல்ஹாசனின் அரசியல் கட்சி பற்றிய அறிக்கை இதோ…

kamal political party

நாடோடிகள்2 படத்தில் அஞ்சலியுடன் இணைந்தார் அதுல்யா

நாடோடிகள்2 படத்தில் அஞ்சலியுடன் இணைந்தார் அதுல்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anjali and Athulya Ravi teamsup with Sasikumar in Nadodigal 2நாடோடிகள் படத்தின் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது என்பதை பார்த்தோம்.

இப்படத்தை நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இதை சமுத்திரகனி இயக்கி முக்கிய வேடத்தில் நடிக்க, நாயகனாக சசிகுமாரும் நாயகியாக அஞ்சலியும் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு நாயகியாக அதுல்யா நடிக்கவிருக்கிறாராம்.

இசையை ஜஸ்டின் பிரபாகரன் மேற்கொள்ள ஒளிப்பதிவை என்.கே.ஏகாம்பரம் செய்கிறார்.

Anjali and Athulya Ravi teamsup with Sasikumar in Nadodigal 2

 

விஜய்சேதுபதி பிறந்தநாளில் சீதக்காதி-யின் சர்ப்ரைஸ் பர்ஸ்ட் லுக்

விஜய்சேதுபதி பிறந்தநாளில் சீதக்காதி-யின் சர்ப்ரைஸ் பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seethakaathi first look released on Vijay Sethupathis birthdayஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆறு படங்களையாவது ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

தற்போது பாலாஜி தரணீதரன் இயக்கும் ‘சீதக்காதி’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் விஜய்சேதுபதியின் 25வது படமாக உருவாகிவருகிறது.

இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்யநாதன் ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

இப்படம் பற்றி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியதாவது…

“சீதக்காதி படம் எல்லாம் வகையிலும் வித்தியாசமாக உருவாகி வருகிறது.

விஜய்சேதுபதியின் கேரக்டரை அந்தளவு அற்புதமாக உருவாக்கி வருகிறார் டைரக்டர் பாலாஜி தரணீதரன்.

இப்படத்தில் விஜய்சேதுபதியின் லுக் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைசாக இருக்கும்.” என்றார்.

இந்நிலையில் இன்று ஜனவரி 16ஆம் விஜய்சேதுபதியின் பிறந்தநாளில் இப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் வயதான தோற்றத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். அவர் இந்தியன் தாத்தா ஸ்டைலில் அமர்ந்திருப்பது ரசிகர்களை பெரிதும கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Seethakaathi first look released on Vijay Sethupathis birthday

ரஜினியின் 2.0 படத்தின் கேரள உரிமை பாகுபலியை தாண்டியது

ரஜினியின் 2.0 படத்தின் கேரள உரிமை பாகுபலியை தாண்டியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 movie Kerala rights bagged by August Cinemas at huge priceஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’.

இதன் இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 15 மொழிகளில் என ஒரே நேரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

மலையாள பதிப்பின் விநியோக உரிமையை கடும் போட்டிக்கு இடையே ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிறுவனம் விடுத்துள்ள விளம்பரத்தில் படத்தின் வெளியீட்டு தேதி 2018 ஏப்ரல் 27 வெளியீடு’ என தெரிவித்துள்ளனர்.

இதன் கேரள உரிமை மட்டும் ரூ.16 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

வசூலில் இந்தியளவில் சாதனை படைத்த பாகுபலி படத்தின் கேரள உரிமை ரூ.10.5 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் பிருத்விராஜ், ஆர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகிய மூவரும் இந்த ஆகஸ்ட் சினிமா நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை அவர்கள் கேரளா முழுவதும் 500க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

2point0 movie Kerala rights bagged by August Cinemas at huge price

பாண்டிராஜ்-கார்த்தி இணையும் கடைக்குட்டி சிங்கம்; சூர்யா தயாரிக்கிறார்

பாண்டிராஜ்-கார்த்தி இணையும் கடைக்குட்டி சிங்கம்; சூர்யா தயாரிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi starrer Kadaikutty Singam first look launched by Suriyaபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்துக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என பெயரிட்டு இருக்கிறார்கள்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இப்படத் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா வெளியிட்டார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்கு தெலுங்கில் சின்ன பாபு என பெயரிட்டுள்ளனர்.

இதில் கார்த்திக்குடன் சாயிஷா, சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டது.

இந்த பட போஸ்டரில் இடம்பெற்றுள்ள ‘பயிர் செய்ய விரும்பு’ என்ற வாசகம் சமூகவலைத்தளத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Karthi starrer Kadaikutty Singam first look launched by Suriya

எழுத்தாளர் ஞாநி காலமானார்; ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

எழுத்தாளர் ஞாநி காலமானார்; ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth pays tribute to his friend and strong critic Gnani Sankaranசிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்த எழுத்தாளர் ஞாநி, இன்று அதிகாலை மரணமடைந்தார்.

அவருக்கு வயது 64. செங்கல்பட்டில் பிறந்த ஞாநியின் இயற்பெயர், சங்கரன். எழுத்தாளர், நாடக்ல்ப கலைஞர், அரசியல் விமர்சகர் என்று பல்வேறு தளங்களில் பணியாற்றியுள்ளார்.

அவர், சமகால அரசியல்குறித்த விமர்சனங்களையும், கருத்துகளையும் ஊடகங்களில் வெளிப்படுத்திவந்தார்.

இந்த நிலையில், உடல் நலக்குறைபாடு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உடல், பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக கே.கே.நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடல், மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக அளிக்கப்படுகிறது.

ஞாநியின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். ஞாநியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ’ஞாநி என்னுடைய நண்பர், நான் அவரது ரசிகர். தனக்குச் சரியெனத் தோன்றியதைப் பயமின்றி பேசக்கூடியவர், எழுதக்கூடியவர் ஞாநி. அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது’ என்றார்.

Rajinikanth pays tribute to his friend and strong critic Gnani Sankaran

rajini gnani

More Articles
Follows