தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெஜ்ரிவால் ஆகியோருடன் சந்திப்பு என தன் அரசியல் பயணத்தை படுவேகமாக நகர்த்தி வருகிறார் கமல்ஹாசன்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 4) சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது அலுவலகத்தில் நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் கமல்.
இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நற்பணி மன்றத்திலிருந்தும் 2 பேர் கமலுடன் ஆலோசனை செய்ய உள்ளே அனுப்பப்பட்டு இருந்தனர்.
இதுகுறித்து அவரது ரசிகர்கள் கூறியதாவது…
எங்கள் ஆண்டவர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளார். அவருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.
அவரை முதல்வர் நாற்காலியில் அமரவைப்போம்.’ என்றனர்.
மேலும் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொது இடங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளை தொடர கமல் வலியுறுத்தினாராம்.
அரசியல் குறித்து தங்களிடம் கமல் எதுவும் பேசவில்லை என்றும் அடுத்த மாதம் 7-ஆம் தேதி கமல் பிறந்தநாளையொட்டி முக்கிய அறிவிப்பு வர வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Kamalhassan consulting with fans about his political entry