வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் ரூ. 5 லட்சம் பெற்ற கமல்ஹாசன்

வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் ரூ. 5 லட்சம் பெற்ற கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன்.

இவர் நிறைய தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும் கமலுக்கும் கேரளாவுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு.

கே பாலச்சந்தர் தனக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்றால் நான் மலையாள சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பேன் என்று ஒருமுறை கூறியிருந்தார் கமலஹாசன்.

கேரளாவிலும் கமல்ஹாசனுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் எம்ஜி. சோமன் பவுண்டேஷன் என்ற நிறுவனம் வாழ்நாள் சாதனையாளர் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கியுள்ளது.

இத்துடன் ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையும் கேரளாவின் கலாச்சாரத்துறை அமைச்சர் வி என் வாசவன் நேற்று கேரளா திருவல்லா பகுதியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

Yesterday Ulaganayagan #KamalHaasan was honoured with the MG Soman Foundation LIFE TIME ACHIEVEMENT AWARD. The award, comprising a purse of Rs 5 lakh, was presented by cultural affairs minister VN Vasavan at Thiruvalla, Kerala

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2023 இல் தொடங்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காரைக்காலில் 10 நாள் ஷெட்யூலை படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீண்ட கால அட்டவணைகளுடன் இந்த படத்தை விரைவாக படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

கிரிக்கெட் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்கு இசை புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

மறுபுறம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது அடுத்த படமான ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்.

இந்திய திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘தளபதி 68’ ஹீரோ மற்றும் இயக்குனர் சம்பளம்

இந்திய திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘தளபதி 68’ ஹீரோ மற்றும் இயக்குனர் சம்பளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு நாட்களுக்கு முன்பு விஜய், அட்லீ மற்றும் சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன் ஆகியோர் நேரில் சந்தித்து ‘தளபதி 68’ படத்தை இறுதி செய்ததாக கூறப்படுகிறது.

அட்லிக்கு சம்பளமாக ஐம்பது கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நூற்றி ஐம்பது கோடி ரூபாய் சம்பளத்தில் விஜய் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாயகன் மற்றும் இயக்குனருக்கு ஏற்கனவே 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘தளபதி 68’ படத்திற்காக இருநூறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா வரலாற்றில் மிகவும் துணிச்சலாக ஸ்டண்ட் செய்யக்கூடியவர் டாம் குரூஸ் – சூர்யா பிரமிப்பு

சினிமா வரலாற்றில் மிகவும் துணிச்சலாக ஸ்டண்ட் செய்யக்கூடியவர் டாம் குரூஸ் – சூர்யா பிரமிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குரூஸ் இப்போது வரவிருக்கும் ‘மிஷன் இம்பாசிபிள் 7’ இல் இருந்து ஒரு புதிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

இது 9 நிமிடங்களுக்கு மேல் நீளமானது. அதில் அவர் சினிமா வரலாற்றில் மிகவும் ஆபத்தான ஸ்டண்ட் செய்துள்ளார்.

குரூஸ் அசுர வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வதைக் காண முடிகிறது.

அதன்பின் உயரமான பாறையிலிருந்து தனது பாராசூட்டைக் கொண்டு குதித்தார்.

தமிழ் சூப்பர் ஸ்டார் சூர்யா, “நம்பமுடியவில்லை!!! Woooowww!!!!” என்று இத்தகைய வீடியோவிற்கு பிரமிப்புடன் பதிலளித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கும் டைரக்டர் கங்கனா

பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கும் டைரக்டர் கங்கனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் இரும்பு பெண்மணி என்றால் அது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தான். இவரது ஆட்சி காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம் ‘எமர்ஜென்சி’.

இந்த அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகும் படமே ‘எமர்ஜென்சி’.

இதில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்து படத்தை இயக்கவும் செய்கிறார் நடிகை கங்கனா ரனாவத். இவர்தான் ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ‘எமர்ஜென்சி’ படத்துக்காக பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்குமாறு மக்களவைச் செயலருக்கு கங்கனா கடிதம் எழுதியிருக்கிறார்.

இதுவரை எந்த படமும் நாடாளுமன்றத்தில் படமாக்கப்பட்டதில்லை. மேலும் அங்கு தனியாருக்கு கேமரா கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது. எனவே கங்கணாவுக்கு அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.?

கூடுதல் தகவல்..

தமிழில் பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் – வடிவேலு நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

விக்கி – நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு

விக்கி – நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினரின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்த படம் ‘கனெக்ட்’.

இதில் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபீஸா நடித்துள்ளனர்.

இந்த படம் கரோனா காலகட்டத்தில் நடக்கும் கதை. ‘கேம் ஓவர்’ பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.

டிசம்பர் 22 ஆம் தேதி ‘கனெக்ட்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

99 நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்திற்கு இடைவேளை இல்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எனவே இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

படத்தின் இடைவேளையின் போது தான் தங்களுக்கு கேண்டீனில் வியாபாரம் நடைபெறும். அந்த வியாபாரத்தை விட்டுத்தர முடியாது என்பதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இடைவேளை இல்லாத இந்த படத்திற்கு அவர்களே (தியேட்டரில்) இடைவேளை விடுவார்கள் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

More Articles
Follows