BREAKING நாங்க அப்ப எடுத்த டார்ச்சுக்கு இப்பதான் மோடி வர்றார். – கமல்

BREAKING நாங்க அப்ப எடுத்த டார்ச்சுக்கு இப்பதான் மோடி வர்றார். – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal statement about Modis latest speech on Corono Warகொரோனாவைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தார் நம் பிரதமர் நரேந்திர மோடி,

இந்த உத்தரவு அமலுக்கு வந்து இன்று மார்ச் 3ஆம் தேதியோடு 10 நாட்கள் ஆகிவிட்டது.

இந்த நிலையில் வீடியோ வாயிலாக மோடி நாடு மக்களிடையே உரையாற்றினார்.

அதில், ‘ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்புக்கு நன்றி. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தி கொண்டிருப்பதற்கு நன்றி.

வீட்டில் இருந்தாலும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். கொரோனா தொற்றின் இருளை வெளிச்சம் கொண்டு விரட்ட வேண்டும்.

வருகிற ஏப்ரல் 5-ல் இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் உங்கள் வீட்டு விளக்கை அணையுங்கள்.

அதற்கு பதிலாக டார்ச், அகல்விளக்கை ஏற்றவேண்டும்.” என பேசியிருந்தார் மோடி.

இந்த நிலையில் மோடியின் பேச்சுக்கு தற்போது இரவில் பதிலடி கொடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

அதில்….
பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.

Kamal statement about Modis latest speech on Corono War

Kamal Haasan

@ikamalhaasan

 பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/1246088638766567425?ref_src=twsrc%5Etfw">April 3, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

 

தமிழை அடுத்து தெலுங்கிலும் ரீமேக்காகும் ‘அய்யப்பனும் கோஷியும்’

தமிழை அடுத்து தெலுங்கிலும் ரீமேக்காகும் ‘அய்யப்பனும் கோஷியும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ayyappanum koshiyumமலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘அய்யப்பனும் கோஷியும்.’.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த் படம் வெளியானது. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பீஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர்.

இரண்டு ஆர்மி அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக இப்படத்தில் சொல்லியிருந்தனர்.

இப்படத்தை பல இந்திய மொழிகளில் ரீமேக் போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் பெற்றுள்ளார்.

தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியிருக்கிறாராம்.

இவர் ‘ஜெர்சி’, ‘அலா வைகுண்டபுரம்லு’ ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீஜூமேனன் கேரக்டரில் பாலகிருஷ்ணாவையும், பிருத்விராஜ் கேரக்டரில் ராணா டகுபதியையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம்.

பாஜக. தொழிலதிபரின் மகனை மணக்கும் கீர்த்தி சுரேஷ்..?

பாஜக. தொழிலதிபரின் மகனை மணக்கும் கீர்த்தி சுரேஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy sureshமலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஹிந்தியில் ஒரு பட வாய்ப்பு இவரை தேடி வந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் அப்பட வாய்ப்பை இழந்தார் கீர்த்தி.

தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கிய கேக்டரில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் கீர்த்தி விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பாஜகவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனை கீர்த்தி திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து உறுதியான தகவல் இல்லை. கீர்த்தி சுரேஷ் அவர்களும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.

மோடி ஐயா.. கொரோனாவ வெளக்கமாத்தால அடிச்சி துரத்துங்க.. – சூரி

மோடி ஐயா.. கொரோனாவ வெளக்கமாத்தால அடிச்சி துரத்துங்க.. – சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sooriகொரோனா நோய் பரவலை தடுக்க அது விழிப்புணர்வு வீடியோக்களை பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் காமெடி நடிகர் சூரி அவரது பாணியில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அது வைரலாகி வருகிறது.

அதில் தனது மகனை குளிப்பாட்டுவது போலவும் பாத்ரூமை க்ளீன் செய்தும் வருகிறார். இடை இடையே விழிப்புணர்வை ஏற்படுத்து பேசுகிறார்.

’மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். வீட்டுக்குள் இருந்தால் கொரோனா கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள். அது வாஸ்தவம் தான்.

ஆனா வீட்டுக்குள் இந்த பக்கிகள் தொல்லையை தாங்கல. எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்றோம்.

எப்படியாவது அந்த கொரோனாவை வெளக்கமாத்தாலே அடித்து துரத்தி விடுங்கள்.

அந்த சீனா பிரதமருக்கு ஒரு போன் போட்டு கொரோனா பிரச்சினைக்கு மூல காரணமாக இருந்த அந்த வவ்வாலையும் பாம்பையும் சாப்பிட்ட பக்கி பயல்களை இனிமேல் சாப்பிடுவியா என வெளக்கமாத்தாலே அடிக்க சொல்லுங்கள். அப்பத்தான் அவர்களுக்கு புத்தி வரும் என பேசியுள்ளார் சூரி.

சத்தியமாக சொல்கிறேன் நம்ம வீட்டின் கழிப்பறையைப் கழுவும் போதே நம்முடைய மூச்சு முட்டுகிறது.

ஆனா சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் ஒவ்வொருவரின் கஷ்டம் எப்படி இருக்கும் என்பது இப்போ தான் எனக்கு புரிந்தது.

உண்மையாகவே சுத்தமானவர்கள் அவர்கள்தான். நீங்கள் எப்போதுமே நன்றாக இருக்கவேண்டும்’ என்று தூய்மைப் பணியாளர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துள்ளார்.

குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.. ஏஆர். ரஹ்மான் உருக்கமான வேண்டுகோள்

குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.. ஏஆர். ரஹ்மான் உருக்கமான வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahmanடெல்லியில் நடைபெற்ற ஒரு குறிப்பிட்ட மத கூட்டத்தில் பங்கேற்றவர்களில் கொரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ளதாக தகவல்கள் வந்தன.

இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான் கூறியிருப்பதாவது:

தன்னலமின்றி, உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்தியா முழுக்க பணியாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்லவே இந்த செய்தி.

நமது உயிரைக் காப்பாற்ற அவர்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர்.

கடவுள் உங்கள் மனதில் இருக்கிறார். அதுதான் பரிசுத்தமான கோயில்.

இப்போது மத வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடி குழப்பத்தை ஏற்படுத்த சரியான நேரமல்ல. அரசு சொல்லும் அறிவுரையைக் கேளுங்கள்.

தனிமையில் சில நாட்கள் இருந்தால் நமக்கு பல வருடங்கள் ஆயுள் கிடைக்கும். இந்தத் தொற்றைப் பரவி சக மனிதருக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்.

புரளிகளைப் பரப்பி இன்னும் பதட்டத்தையும், கவலையையும் பரப்பும் நேரமல்ல”

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தன் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடுப்பு பத்த வைக்கவே வழியில்ல இதுல..; மோடியை சாடிய ‘ஆடை’ டைரக்டர்

அடுப்பு பத்த வைக்கவே வழியில்ல இதுல..; மோடியை சாடிய ‘ஆடை’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aadai director slams Modis Lights off speech in Corono Warகொடிய நோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதனால் இந்திய மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு 10 நாட்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் உரையாற்றினார்.

அப்போது, ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்திய மக்களின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துரைக்க இவ்வாறு அவர் செய்ய சொல்லியிருக்கிறார்.

இதுகுறித்து ’மேயாத மான்’ ’ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

Rathna kumar
@MrRathna

வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது

Aadai director slams Modis Lights off speech in Corono War

More Articles
Follows