கமலை கொல்லனும்; அவர் படத்தை பார்க்கக் கூடாது… இந்து மகாசபா

கமலை கொல்லனும்; அவர் படத்தை பார்க்கக் கூடாது… இந்து மகாசபா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hindu-mahasabhaபிரபல தமிழ் வார இதழில் கமல்ஹாசன் எழுதி வரும் தொடர் கட்டுரையில், இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அந்தக் கட்டுரையில், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர்.

ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டடனர் என்று கூறி உள்ளார்.

இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்றும் கமல்ஹாசன் அந்தக் கட்டுரையில் கூறி இருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு பா.ஜனதா மற்றும் சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து இந்து மகா சபா அமைப்பின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா கூறியதாவது…

இந்துக்களின் மன உணர்வை காயப்படுத்துபவர்கள் இந்த மண்ணில் வாழக்கூடாது.

கமலை சுட்டுக் கொல்லனும். அப்போதுதான் மற்றவர்களுக்கு இது பாடமாக அமையும்.

கமல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடிக்கும் படங்களை இந்துக்கள் பார்க்கக் கூடாது. அந்த படங்களை புறக்கணிக்க வேண்டும்.

இந்து மத உணர்வுகளை புண்படுத்தியவர்களுக்கு மன்னிப்பே கிடையாது” என கூறியுள்ளார்.

Kamal should be shot dead for his Hindu Terror remark says Hindu Mahasabha

சிம்பு-சந்தானம் கூட்டணியில் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்

சிம்பு-சந்தானம் கூட்டணியில் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Harish Kalyan crooned in Simbu music for Sakka Podu Podu Rajaநடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக திறமைக் கொண்ட சிம்பு முதன்முறையாக இசையைமப்பாளர் அறிமுகமாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’.

இப்படத்தை ‘விடிவி’ கணேஷ் தயாரிக்க, சேதுராம் இயக்கியுள்ளார்.

சந்தானம், வைபவி சாண்டில்யா, விவேக், ரோபோ சங்கர், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ‘சக்க போடு போடு ராஜா’விற்கான டைட்டில் பாடலை ஹரிஷ் கல்யாண் பாடியிருக்கிறாராம்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீடு அண்மையில் நடந்து முடிந்த நிலையில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Harish Kalyan crooned in Simbu music for Sakka Podu Podu Raja

நான் சொன்னா அதை செய்ய 5 லட்சம் பேர் உள்ளனர்… கமல் பேச்சு

நான் சொன்னா அதை செய்ய 5 லட்சம் பேர் உள்ளனர்… கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

5 Lakhs peoples are there to do my words into action says Kamalசென்னையில் விவசாய சங்க ஒருங்கிணைப்பு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துக் கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது…

நான்உழவன் மகன் இல்லை. ஆனால் உழவனின் மருமகன்.

நான் ஓட்டு சேகரிக்க இங்கு வரவில்லை. நான் தமிழகத்திற்கு சோறு சேகரிக்க வந்துள்ளேன்.

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் என்னை பொறுக்கி என்றார். அறிவு, ஞானத்தை நான் எங்கு வேண்டுமானாலும் பொறுக்குவேன்.

திருடனை நாம் துரத்தும்போது அவன் நம்மை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலைதான் இன்று உள்ளது.

எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்தான் என்பதை மறந்து விட்டீர்கள்.

தமிழகமும் மராட்டியமும்தான் இந்தியாவில் அதிகளவில் வரி கட்டும் மாநிலங்களாக உள்ளது.

மற்ற மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஹைட்ரோ கார்பனை விட விவசாயம் மிகவும் முக்கியமானது.

கிணறு இன்று தற்கொலை செய்யும் இடமாக மாறிவிட்டது.

ஒரு ஆற்றையே காணாமல் போக செய்துவிட்டார்கள் அரசு அதிகாரிகள்.

குளங்களை, ஏரிகளை சரிசெய்ய நான் இணைவேன்.

நான் சொல்வதை செய்வதற்கு 36 ஆண்டுகளாக 5 லட்சம் பேர் உள்ளனர்.

அவர்கள் குழுவாக பிரிந்து விவசாயிகளை சந்தித்து உதவிக்கு வருவார்கள்.” இவ்வாறு பேசினார் கமல்ஹாசன்.

5 Lakhs peoples are there to do my words into action says Kamal

புதிய கடவுளை அறிமுகப்படுத்தி வணங்க சொன்ன கமல்ஹாசன்

புதிய கடவுளை அறிமுகப்படுத்தி வணங்க சொன்ன கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan introduced New God and asked farmers to worshipசென்னையில் விவசாய சங்க ஒருங்கிணைப்பு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…

என்னைப் பார்த்து, ட்விட்டரில் இருந்து சாக்கடை அள்ள வாருங்கள் என்கிறார்கள். ஒரு ஆள் எத்தனை சாக்கடைகளை அள்ள முடியும்.

அருகில் உள்ள கேரளா மாநிலம் கூட நாம் சோறு போடுவோம் என காத்து கொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகளுடன் கைகோர்க்க நான் இங்கு வந்துள்ளேன்.

சினிமா இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் இருக்க முடியாது.

நான் பகுத்தறிவாளன். கடவுள் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள்.

நீங்கள் அத்துடன் சேர்ந்து புதிய கடவுள் ஒன்றையும் வணங்க வேண்டும்.

மழை, ஏரி, ஆறுகளை வணங்க கற்றுக் கொள்ளுங்கள்.” என்று கமல் பேசினார்.

Kamalhassan introduced New God and asked farmers to worship

மெர்சல் 2… விஜய்க்காக காத்திருக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

மெர்சல் 2… விஜய்க்காக காத்திருக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay with producer hema rukmaniஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை தன் 100வது படைப்பாக தயாரித்தது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.

இப்படத்திற்கு பாஜக.வின் எதிர்ப்பு கிளம்பியதால் படம் வேறு விதத்தில் இந்தியா முழுக்க பிரபலமானது.

படம் வெளியாகி 2 வாரங்களை கடந்துள்ளநிலையில் ரூ. 200 கோடி வசூலையும் அள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் 2ஆம் பாகம் வெளிவருமா? என கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய் சார் ஓகே சொன்னால் மெர்சல் 2 படத்தை தயாரிக்க காத்திருக்கிறோம் என தயாரிப்பு நிறுவனமே கூறிவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மேலும் தன் அடுத்த படமும் விஜய் உடன்தான் என ஒரு பேட்டியில் அட்லி தெரிவித்திருந்தார்.

எனவே மெர்சல் 2 படம் உருவாக நிச்சயம் வாய்ப்புள்ளது என நம்பலாம்.

விஜய்-முருகதாஸ் படத்திற்கு யாரும் எதிர்பாராத இசையமைப்பாளர்.?

விஜய்-முருகதாஸ் படத்திற்கு யாரும் எதிர்பாராத இசையமைப்பாளர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sam cs musicமெர்சல் படத்தை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுநாள் வரை யுவன் அல்லது அனிருத் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் சாம் பற்றிய பேச்சுவார்த்தை எழுந்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

Music composer Sam CS may score music for Vijay 62

More Articles
Follows