தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அடுத்தாண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தன் அரசியல் பிரசாரத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் கமல்ஹாசன்.
மதுரையில் பல்வேறு இடங்களுக்கு சென்றார். பொதுக்கூட்டம் நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்திப்பை நிகழ்த்தினார் கமல்.
அவர் பேசும்போது…” இந்த சட்டசபை தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
மேல்மட்டத்தில் இருந்து தொடரும் ஊழலை ஒழிப்போம். எனக்கு வரும் கூட்டத்தை பார்த்து அமைச்சர்கள் உறக்கம் இல்லாமல் உள்ளனர்.
ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்கிறதா? என்ற கேள்விக்கு கமல் பதிலளிக்கையில்… ” ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்யமாட்டார்கள்.
ரஜினியை வைத்து சினிமா வேண்டுமானால் செய்வார்கள்” என பதிலளித்தார் கமல்ஹாசன்.
Kamal responds to Rajini and BJP politics