Breaking: காவிரியை கேட்டால் துணை வேந்தரை தருகிறீர்களா..? கடுப்பாகும் கமல்

Breaking: காவிரியை கேட்டால் துணை வேந்தரை தருகிறீர்களா..? கடுப்பாகும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகத்திற்கு தமிழரை நியமித்து இருக்கலாமே என இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

துணைவேந்தராக நியமிக்க தமிழகத்தில் தகுதியான பேராசிரியர்கள் இல்லையா? கர்நாடகாவை சேர்ந்தவரை துணைவேந்தராக நியமிப்பது தமிழக உரிமையை பாதிப்பதுபோல் உள்ளது எனவும் கண்டனங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தன் ட்விட்டர் பதிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துணை வேந்தர் நியமனத்தை கண்டிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவுகள்…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 55m55 minutes ago

We asked for water from Karnataka and we get a vice-chancellor from Karnataka instead. The gulf between people and the government cannot be more obvious. Are they taunting us so we react adversely? I wonder what their game plan is

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 36m36 minutes ago

கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?

தமிழக அரசுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை; முடிவுக்கு வருமா சினிமா ஸ்டிரைக்.?

தமிழக அரசுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை; முடிவுக்கு வருமா சினிமா ஸ்டிரைக்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Govt will arrange Tripartite talks to resolve Tamil Cinema Strikeக்யூப் டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் திரையுலகினர் கடந்த மார்ச் 1 முதல் வேலை நிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர்.

இதனால் புதுப்படங்கள் வெளியாகவில்லை, சூட்டிங் மற்றும் சினிமா நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திரையுலகைச் சேர்ந்த பல்வேறு சங்கங்கள் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் சுமூகமான தீர்வு ஏற்படவில்லை.

இதனிடையில் சினிமா துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று கடம்பூர் ராஜூவை, விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

அந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு 2 நாளில் ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

எனவே விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

TN Govt will arrange Tripartite talks to resolve Tamil Cinema Strike

விக்ரமை அடுத்து மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹரி

விக்ரமை அடுத்து மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hari and suriyaதமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளியானாலும் ஒரு படத்தின் தொடர்ச்சியாக மற்றொரு படம், அதன் தொடர்ச்சியாக 3வது பாகம் என்ற பெருமையை பெற்ற படம் சிங்கம்.

2010-ம் ஆண்டு ‘சிங்கம்’, 2013ம் ஆண்டு ‘சிங்கம் 2’, 2017ம் ஆண்டு ‘சி 3’ என 3 படங்களிலும் சூர்யாவை சிங்கமாக மாற்றினார் டைரக்டர் ஹரி.

தற்போது விக்ரம் நாயகனாக நடிக்கும் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சாமி ஸ்கொயர்’ படத்தை இயக்கி வருகிறார் ஹரி.

இதனை முடித்துவிட்டு மீண்டும் சூர்யாவை ஹரி இயக்க உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அது ‘சிங்கம்’ படத்தின் 4வது பாகமாக இருக்குமா? என்பதுதான் தெரியவில்லை.

செல்வராகவன் இயக்கும் ‘என்ஜிகே’ படம் மற்றும் கே.வி. ஆனந்த் படங்களை முடித்துவிட்டு இந்த படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.

எங்க படத்த சவுண்ட் இல்லாம ரிலீஸ் செய்யட்டுமா.? கார்த்திக் சுப்பராஜீக்கு டிக்டிக்டிக் தயாரிப்பாளர் கேள்வி

எங்க படத்த சவுண்ட் இல்லாம ரிலீஸ் செய்யட்டுமா.? கார்த்திக் சுப்பராஜீக்கு டிக்டிக்டிக் தயாரிப்பாளர் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shall i mute sound and release Tik Tik Tik movie asks Producer to Karthik Subbarajவசனங்களே இல்லாமல் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள மெர்குரி படத்தை இயக்கி தயாரித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

தற்போது சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வருவதால், கடந்த 35 நாட்களாக எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகவில்லை.

இருந்தபோதிலும் தடையை மீறி மெர்குரி படத்தை ஏப்ரல் 13ல் வெளியிடுவேன் என அறிவித்தார் கார்த்திக் சுப்பராஜ்.

மேலும் மெர்க்குரி சைலண்ட் படம் என்பதாலும், படத்திற்கு ரத்தம், வியர்வை சிந்தி உழைத்த படக்குழுவினருக்காகவும் படத்தை வெளியிட்டாக வேண்டிய சூழலில் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் டிக் டிக் டிக் படத் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

“கார்த்திக்… இங்கே எல்லாரும் வியர்வையும் ரத்தத்தையும் கொடுத்துதான் படத்தை உருவாக்கி வருகிறோம்.

எங்கள் படத்திலும் 100க்கும் மேற்பட்டவர்கள் உழைத்துள்ளனர்.

நீங்கள் உங்கள் படத்தை சைலண்ட் (வசனங்கள் இல்லாத) படம் என்பதால் வெளியிடுவேன் என்கிறீர்கள்.

நாங்கள் எங்கள் படத்தில் சவுண்டை நிறுத்திவிட்டு சப்டைட்டில் போட்டு படத்தை வௌளியிடட்டுமா.?

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒற்றுமையை சீர் குலைக்கலாமா?

நாங்கள் எங்கள் படத்தின் ரிலீஸை இதுவரை 3 முறைக்கு மேல் தள்ளி வைத்துவிட்டோம். எங்கள் படமும் பணத்தால் தான் உருவாக்கப்பட்டது. காற்று மற்றும் தண்ணீரால் படத்தை உருவாக்கவில்லை” என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

இவரின் ட்வீட்டை அடுத்து தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் முடியும் வரை மெர்குரி படத்தை வெளியிட மாட்டேன் என அறிவித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

ஆனால் சைலண்ட் படம் என்ற போர்வையில் மற்ற மாநிலங்களில் இப்படத்தை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shall i mute sound and release Tik Tik Tik movie asks Producer to Karthik Subbaraj

mercury and tik tik tik

ஏப்ரல்-13ல் மெர்குரி ரிலீஸ்; கார்த்திக் சுப்பராஜின் கருத்தால் கடுப்பான திரையுலகம்

ஏப்ரல்-13ல் மெர்குரி ரிலீஸ்; கார்த்திக் சுப்பராஜின் கருத்தால் கடுப்பான திரையுலகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthik subbarajவசனங்களே இல்லாமல் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்குரி என்பதை பார்த்தோம்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்தத் தயாரிப்பில் இப்படத்தை எடுத்துள்ளார்.

கடந்த 36 நாட்களாக தமிழ்த் திரையுலகில் எந்தவொரு புதுப்படம் வெளியாகவில்லை.

ஆனால் தன் மெர்குரி திரைப்படம் ஏப்ரல் 13ல் ரிலீஸ் ஆகும் எனவும் அதன் ட்ரைலர் இன்று வெளியாகும் எனவும் அறிவித்திருந்தார்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, அதன்பின்னர் ட்ரைலரை வெளியீட்டை தள்ளி வைப்பதாகவும் ஆனால் படம் ஏப்ரல் 13ல் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

.

மேலும் மெர்க்குரி சைலண்ட் படம் என்பதாலும், என் படத்திற்கு ரத்தம், வியர்வை சிந்தி உழைத்த படக்குழுவினருக்காகவும் படத்தை வெளியிட்டாக வேண்டிய சூழலில் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

இதற்கும் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சற்று முன்பு விளக்கம் அளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

அதில்…ஸ்ட்ரைக் நிறைவடையும் வரை படத்தை வெளியிடமாட்டோம். ஆயிரக்கணக்கான திரையுலகினரைப் போலவே நாங்களும் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இது வசனங்களே இல்லாத படம் என்பதால் எல்லா மொழியினரும் இதை பார்ப்பார்கள். எனவே தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இதை வெளியிட உள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இதனையும் அவர் அறிவித்துள்ளார்.

மான் வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

மான் வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Salman khan convicted Blackbuck poaching caseபாலிவுட் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவரத்தை பார்ப்போம்.

கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு சினிமா சூட்டிங்கில் கலந்துக் கொண்டார் பாலிவுட் நடிகர் சல்மான்கான்.

அப்போது பாகாவாத் வனப் பகுதியில், சிங்காரா, பிளாக் பக் என்ற அரிய வகை மான்களை சல்மான்கான் வேட்டையாடியதாகவும், அவருடன் நடிகர் சாயிஃப் அலிகான் நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் உடனிருந்ததாகவும் இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

பல வருடங்களாக நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த 2007-ம் வருடம் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜோத்பூர் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது,

அதன்பின்னர் சல்மான்கான் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனாலும் இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.

கடந்த ஜனவரி மாதம், நடிகர்கள் தங்கள் தரப்பின் வாதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து, சென்ற மாதம் 28 -ம் தேதி, இந்த வழக்கின் முழு விசாரணையும் முடிக்கப்பட்டு, தீர்ப்பு ஏப்ரல் 5- ம் தேதி வழங்கப்படும் என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று காலை கூடிய ஜோத்பூர் நீதிமன்றத்தில், நடிகர்கள் அனைவரும் நேரில் வந்து ஆஜராகினர்.
அப்போது நடிகர் சல்மான்கான் குற்றவாளி என அறிவித்தார் நீதிபதி.

அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டையும் 10,000 ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடிகர் சயிஃப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Salman khan convicted Blackbuck poaching case

More Articles
Follows