பிக்பாஸ் சீசன் 5 ஓவர்..; மீண்டும் ஆஸ்பத்திரியில் கமல்ஹாசன் அனுமதி

பிக்பாஸ் சீசன் 5 ஓவர்..; மீண்டும் ஆஸ்பத்திரியில் கமல்ஹாசன் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2021 நவம்பரில் அமெரிக்கா சென்று திரும்பினார் நடிகர் கமல்ஹாசன்.

திரும்பிய நாள் அன்றே நவம்பர் 22ம் தேதியன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் கமல்.

எனவே, சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா நம்மை விட்டு ஓடவில்லை. இங்கே தான் இருக்கிறது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தினார் கமல்ஹாசன்.

இவர் ஆஸ்பத்திரியில் இருந்த காலத்தில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

பின்னர் தீவிர சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து நேராக கமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தமிழக சுகாதாரத்துறையும் கமலிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.

இதன்பின்னரும் கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

105 நாட்கள் நடைபெற்ற நிலையில் நேற்று ஜனவரி 16 பிக்பாஸ் சீசன் 5 இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் ராஜூ வின்னராக அறிவிக்கப்பட்டு வெற்றிக்கோப்பையும் 50 லட்சத்திற்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.

பிரியங்கா இரண்டாவதாகவும், பாவ்னி மூன்றாவதாகவும் இந்த போட்டியில் வெற்றி பெற்றனர்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தன்னுடைய நினைவு பரிசை வழங்கினார் கமல். ராஜூவுக்கு பேனா, பிரியங்காவுக்கு மைக் ட்ராஃபி, நிரூப்க்கு தொப்பி, அமீருக்கு ஷூ, பாவ்னிக்கு கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்பட்டன.

பிக்பாஸ் 5 சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது வழக்கமான பரிசோதனை தான்.. இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Kamal Hassan admitted to Ramachandra Hospital for check-up

கமல் படத்தை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி் – பொன்ராம் இயக்கங்களில் ‘பிக்பாஸ்’ ஷிவானி

கமல் படத்தை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி் – பொன்ராம் இயக்கங்களில் ‘பிக்பாஸ்’ ஷிவானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதையின் நாயகியாக நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை சரவணனுடன் சேர்ந்து இயக்கி இருந்தார் இப்பட நாயகன் ஆர்ஜே பாலாஜி.

இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பாதாய் ஹோ’ (2018) என்ற படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்துள்ளார் ஆர்ஜே பாலாஜி்

இப்படத்துக்கு ‘வீட்ல விசேஷங்க’ என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே பெயரில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் 1994ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இதில் பிக்பாஸ் பிரபலம் ஷிவானி ஹீரோயினாக நடித்துள்ளார் என்பதை ஷிவானியே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ஷிவானி.

இத்துடன் விஜய் சேதுபதி – பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

ஷிவானி நாராயணன் நடிப்பில் தற்போது 3 படங்கள் உருவாகினாலும் இன்னும் எந்தப் படங்களும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Shivani team up with RJ Balaji and Director Ponram

உன்னை காணாது நான் இன்று நானில்லையே.. நடன கலைஞர் பண்டிட் பிர்ஜூ மஹாராஜ் மரணம்..; கமல் இரங்கல்

உன்னை காணாது நான் இன்று நானில்லையே.. நடன கலைஞர் பண்டிட் பிர்ஜூ மஹாராஜ் மரணம்..; கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் பிரபலமான கதக் நடன கலைஞர்களில் முக்கியமானவர் பண்டிட் பிர்ஜூ மஹாராஜ்.

இவலின் கலைச் சேவையை பாராட்டி, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதினை கடந்த 1986ல் வழங்கி இந்திய அரசு வழங்கி கௌரவித்துள்ளது.

இவருக்கு தற்போது 82 வயதாகிறது.

இந்த நிலையில் ஹார்ட் அட்டாக் காரணமாக நேற்று ஜனவரி 16 நள்ளிரவில் காலமானார்.

தனது பேரக் குழந்தைகளுடன் பண்டிட் பிர்ஜூ மஹாராஜ் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி வந்ததாக கூறப்படுகிறது.

இவர் கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்’ படத்தில் இடம்பெற்ற உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ என்ற பாடலுக்கு நடனம் அமைத்தவர்.

இந்த நிலையில் அவரது மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும், விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.

இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே,…
‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’

https://t.co/WC9bTUkjE2

Kamal Haasan’s condolence message to Kathak maestro Pandit Birju Maharaj

5 அழகிகளுடன் ஆட்டம் போடும் ‘அங்காடித் தெரு’ மகேஷ்.; இந்திய சினிமாவின் முதல் சூனியக்காரி.!

5 அழகிகளுடன் ஆட்டம் போடும் ‘அங்காடித் தெரு’ மகேஷ்.; இந்திய சினிமாவின் முதல் சூனியக்காரி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷ் பெயர் சொல்லும்படியான நல்லதொரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.

அப்படி அவர் வித்தியாசமான பாத்திரம் ஏற்றிருக்கும் படம்தான் ஏவாள். மகேஷ் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர் பெங்காலியில் சில படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்தவர்.தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம்.

இன்னொரு நாயகியாக கௌரி சர்மா நடித்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் சில படங்களில் தோன்றியவர். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்திய முன்னணி மாடலான மதுமிதாவும் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் பிருத்விராஜ் படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அக்ஷரா ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபல மாடல் பர்சிதா சின்காவும் இருக்கிறார். இவர் இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

இன்னொரு மாடல் ஆரத்தி கிருஷ்ணாவும் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் 3, தமிழில் 2 என்று படங்களில் நடித்துள்ளவர்.இவர் இப்படத்தின் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளார்.

இப்படி 5 கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார்.

இவர்களுடன் மிப்பு, பிரவீன்,மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்கி இருப்பவர் ஜித்தேஷ் கருணாகரன் .

RA1என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் இந்த ‘ஏவாள்’ படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆரத்தி கிருஷ்ணா மற்றும் ஆர்.எல் ரவி தயாரித்துள்ளனர்.

இணைத் தயாரிப்பு மது ஜி , மற்றும் எஸ் . எஸ்.பிரபு.

திரைக்கதை ரஞ்சித் ராகவன், வசனம் பாடல்கள் முருகன் மந்திரம், ஒளிப்பதிவு கிருஷ்ணா பி.எஸ், இசை ரெஜிமோன், படத் தொகுப்பு அனந்து எஸ். விஜய்.

படத்தின் கதை என்ன?
தனது காதலியின் திடீர் மரணத்துக்குக் காரணம் முகம் மறைத்துத் திரியும் சைக்கோ கொலைகாரன் என்ற உண்மை நாயகனுக்குத் தெரிய வருகிறது.

அவனைப் பழி வாங்க புறப்படுகிறான் நாயகன்.இதற்கிடையில் பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகள் விளையாடுகின்றன.இதன் பின்னணியில் பரபரப்பாகச் செல்கிற படம் தான் ‘ஏவாள்’.

படத்தின் திகில் காட்சிகள் நவீனத் தொழில்நுட்பத்தில் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்டுள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, பாலக்காடு, குட்டிக்காணு, பீர்மேடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

இப்படத்தில் ஒரு வாழ்வியல் பயணம் சார்ந்த பாடல், டூயட் பாடல் என்று இரு பாடல்கள் உள்ளன .படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் மோதும் காட்சிகள் பரபரப்பை ஊட்டும்.

இந்திய சினிமாவின் முதல் சூனியக்காரி படமாக உருவாகியுள்ள ஏவாள் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லரை பொங்கல் தினமான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும்.

RA1 Entertainments Proudly presents in association with AVS entertainments Angaadi Theru fame Mahesh starrer “Yevaal” – A first-of-its-kind Romantic Psycho-Thriller movie

இயக்குனர்களின் வரப்பிரசாதம் கார்த்தி..; வியப்பில் ‘விருமன்’ முத்தையா

இயக்குனர்களின் வரப்பிரசாதம் கார்த்தி..; வியப்பில் ‘விருமன்’ முத்தையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள். அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கான்னு யாரோ ஒருத்தர் அதை சுட்டிக்காட்டணும். நமக்கு நல்லது செய்யும் அந்த உறவு தான் நல்ல உறவு.

அந்த நேர்மையை பேச வருபவன் தான் “விருமன்”. தட்டிக் கேட்கிறவனாக “விருமன்” இருப்பான். “விருமன்” தான் கார்த்தி. குலசாமி பெயர். விருமன்னா தேனிப்பக்கம் பிரம்மன் என்று சொல்வாங்க. அதுதான் கதைக்களம்.” என்றார் டைரக்டர் முத்தையா.

மேலும் தொடர்ந்து,
சாதுவாகவும்.. முரடனாகவும் எப்படி வேணும்னாலும் கார்த்தியை காட்டலாம். அவர் டைரக்டர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதில் எல்லாமே உறவுகள் தான். இந்த மண்ணோட மனிதர்கள் முன்னாடி எப்படியிருந்தாங்க, இன்றைக்கும் அப்படித்தான் இருக்கணும்னு சொல்றவன்தான் விருமன். உறவுகள் சூழ ஒற்றுமையோடு இருந்து, அவர்களுக்கு பிரச்னைனா முன்னாடி நிற்கிறவன் விருமன்தான்.”

நான் எழுதினதைவிட, சொன்னதைவிட நடிச்சுக் காட்டியதைவிட, எதிர்பார்த்ததைவிட அனைவரும் அமர்க்களப் படுத்தியிருக்கிறார்கள். வன்முறை ஏரியாவைக் குறைச்சு, ஃபேமிலி, ஆக்‌ஷனில் கவனம் செலுத்தியிருக்கேன்.”
உறவுகளை மீறி வேறு எதுவும் இங்கே இல்லை. எங்கே போனாலும் இங்கேதான் வந்து சேரணும்.

விருமன் உங்களோட இணைஞ்சு நிர்பான். விருமனைப் பார்த்தால் எல்லோருக்கும், அவர்களுக்கு பிடித்தமான இருவரை நினைத்துக் கொள்வார்கள். மறந்துபோன உறவு மனசுல வரும். நியாயங்களை, உறவுகளை எளிதில் காணக்கூடிய மனிதர்களை முன் நிறுத்தி இருக்கேன். அவ்வளவுதான்.. ”

டைரக்டர் ஷங்கர் சாரோட பொண்ணு, தேன்மொழி என்கிற கேரக்டர்ல அசத்தியிருக்காங்க. செட்ல, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ்ன்னு பார்த்தாலே பெரிய மரியாதையாக இருக்கும்.

பந்தல் பாலுன்னு கருணாஸ், குத்துக்கல்லுன்னு ஒரு கேரக்டரில் சூரி நடித்திருக்கிறார். இவர்களுடன் வசுமித்ர, மனோஜ்,ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினின்னு நல்ல கேரக்டர்கள் நிறைய. அம்மாவாக சரண்யா. அவங்க தான் கதையே. குணம் கெட்ட மனுஷங்களால் இந்த குலமே அழியுது. அப்படி யாரும் இருந்திடக் கூடாதுன்னு சொல்ல இத்தனை பேரும் முன்னே நிக்க வேண்டியிருக்கு. வடிவுக்கரசி தேனி ஜில்லாவோட பழம்பெரும் கிழவியாக, மிடுக்கா நடை உடை பாவனையில் வாழ்ந்திருக்காங்க.” என்றார் டைரக்டர்.

நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிப்பான ‘கடைக்குட்டி சிங்கத்தின்’ பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கிராமத்து நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை இயக்குநர் முத்தையா இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. திட்டமிட்ட வகையில் படப்பிடிப்பு முடிந்ததில் படக்குழு உற்சாகமாக உள்ளது.

கார்த்தி, அறிமுகம் அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ராதிகா மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைத்துள்ளார். கலை: ஜாக்கி,
Pro: ஜான்சன், இணை தயாரிப்பு:ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.

படத்தின் இசை மற்றும் டிரெயலர் வெளியீடு குறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

Muthaiya talks about Karthi performance in Viruman

எகிற வைத்த 83… பிரபலங்கள் பாராட்டு.. பாலிவுட்டில் நடிகர் ஜீவா

எகிற வைத்த 83… பிரபலங்கள் பாராட்டு.. பாலிவுட்டில் நடிகர் ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பையை வாங்கிய கபில்தேவ் பற்றிய #83 படத்தில் நடித்ததின் மூலம் இந்தியா முழுக்க கொண்டாடப்படுகிறார் ஜீவா.

1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்று இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி அமைத்தது. இந்தியாவில் வரலாற்றின் பொன் தருணமாக அனைவராலும் போற்றப்படும் இதன் பின்னணியில் தான் #83 படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தில் நடிகர் ஜீவா கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்.

இதனால் இந்தியா முழுக்க கொண்டாடப் படுகிறார்,ஜீவா. இதையடுத்து ‘பேன் இந்தியா’ ஆர்டிஸ்ட் ஆனார் ஜீவா. எல்லா மொழிகளிலும் அறியப் படுகிற ஹீரோ ஆனதில் பரபரப்பாக காணப்படுகிறார்.

#83 படத்தின் அனுபவங்கள் குறித்து நடிகர் ஜீவா பகிர்ந்துகொண்டதாவது…

இந்தியா முழுவதும் #83 படம் பெரிய வெற்றியை குவித்திருக்கிறது.இதை ரசிகர்கள் கொண்டாடி பெருமிதமாக வருகிறார்கள். அதிலும் உங்கள் ஶ்ரீகாந்த் பாத்திரம் செய்யும் காமெடி மற்றும் உருக்கமான சீன் பெரிதாக பேசப்படுகிறது.
இந்த வரவேற்பை எப்படி உணர்கிறீர்கள் ?

எல்லோருமே பாராட்டுறாங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா உண்மையில் நான் இந்த படத்தில் எதுவும் காமெடி பண்ணல. ஶ்ரீகாந்த் சார் அந்த சூழ்நிலையில என்ன ரியாக்ட் பணணுவாரோ அத மட்டும் தான் செய்தேன். நிஜ வாழ்க்கையில ஶ்ரீகாந்த் சாருக்கு ஹியுமர் அதிகம். அது படத்தில் கரெக்டா ஒர்க் அவுட் ஆனது சந்தோசம். அது மக்களுக்கு பிடிச்சது இன்னும் சந்தோசம்.

#83 பட வாய்ப்பு எப்படி கிடைத்தது ?

CCL போட்டிகள் நமது நடிகர்களுக்கிடையே நடந்த போது நான் அதில் விளையாடினேன். எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி அந்த போட்டிகள் நடத்திய நிறுவனத்தின் ஒரு ஓனர்.
இந்தப்படம் எடுக்க திட்டமிட்ட போது, அவருக்கு என் ஞாபகம் வந்திருக்கிறது. CCL போட்டியின் போது நான் ஒரு கவர் டிரைவ் அடித்திருப்பேன். அது அப்படியே ஶ்ரீகாந்த் சார் விளையாடியது போலவே இருக்கும். அந்த ஷாட்டை, பல்வீந்தர் சிங்கும், விஷ்ணு இந்தூரியும் பார்த்து என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உண்மையில் அந்த போட்டியில் விளையாடியது தான் எனக்கு இந்த வாய்ப்பை வாங்கி தந்தது. அந்த பால் போட்ட பௌலருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

1983 ல் நடந்த உலக கோப்பை போட்டியை பார்த்திருக்கிறிர்களா?

நான் எல்லாம் சச்சின் காலத்து ஃபேன். அவர் கிரிக்கெட் விளையாடியதை தான் அதிகம் பார்த்திருக்கிறேன். இந்த போட்டி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்தது இல்லை. இந்த போட்டியின் சின்ன சின்ன கிளிப்ஸ், கொஞ்சம், கொஞ்சம் பார்த்திருக்கிறேன். முழுசாக பார்த்தது இல்லை.
ஆனால் கபில்தேவை கிரிகெட் உலகின் ஹீரோவாக எல்லோருக்கும் தெரியும். அந்த போட்டியில் விளையாடிய மற்ற 11 பேரை பற்றி எல்லாம் எல்லோருக்கும் தெரியாது. நான் ஸ்கூல் படிக்கும் போது ஒரு முறை பேட்டிக்காக ஶ்ரீகாந்த் சார் வீட்டுக்கு போயிருக்கிறேன். அப்போது அவர் செய்த சாதனைகள் தெரிந்து கொண்டேன். ஆனால் சச்சின், வாசிம் அக்ரம் காலம் தான் என்னோடது. அவர்கள் விளையாடியதை தான் நெருக்கமாக பார்த்திருக்கிறேன்.

1983ல் வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டது. அது இன்றும் இந்தியர்கள் மனதில் பெரும் தாக்கத்தை தந்து வருகிறது படத்தில்
அதை உருவாக்கும் அனுபவம் எப்படி இருந்தது ?

உண்மையிலேயே ரொம்ப பெரிய விசயம். பிரிட்டிஷ் அரசு 1947 சுதந்திரம் தந்த பின்னாடி மொத்த நாடும் ஒன்னு சேர்ந்து கொண்டாடியது இந்த போட்டியோட வெற்றியதான். அப்படி ஒரு வரலாற்றை எடுக்குறாங்க. அந்தப்படத்தில் நானும் ஒரு பங்காக இருந்திருக்கேன். அப்படிங்கிற உணர்வே சந்தோசமா இருக்கு. இது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.

ஶ்ரீகாந்த் பாத்திரத்தை செய்யலாம் என எப்படி முடிவு செய்தீர்கள் ?
முதன் முதல்ல இந்த வாய்ப்பு எனக்கு வந்தப்ப ஸ்ரீகாந்த் சார் உலக கோப்பையில என்ன பண்ணிருக்காருனு பார்த்தேன்.
செமி ஃபைனல்ஸ், ஃபைனல்ஸ் ரெண்டுலயும் ஸ்கோர் பன்ணிருக்காரு. அப்படினா கண்டிப்பாக க்ளைமாக்ஸ்ல நம்மள பெரிசா காட்டுவாங்க, இந்தியாவோட பெரிய டைரக்டர் கபீர்கான், அவரோட இயக்கத்துல நடிக்கலாம். அப்புறம், நான் ரண்வீர் சிங், தீபிகா படுகோன் ரெண்டு பேரோட ஃபேன். அவங்களோட சேர்ந்து நடிக்கலாம் என்ற எண்ணம் எல்லாம் தான் முக்கிய காரணம்.

முதல் முறையா கபீர் சார் பார்த்தப்ப அவர் படத்தோட இன்ஸிடென்ஸ் சொல்ல ஆரம்பிச்சிட்டார். ஆனா அதெல்லாம் உண்மையா நடந்ததுனு தெரிய வந்தப்ப இத கண்டிப்பா மிஸ் பண்ணிடக்கூடாதுனு தோணுச்சு. இந்த கேரக்டருக்காக பேச மும்பை கூப்பிட்டிருந்தாங்க. போயிட்டு திரும்ப வர்றப்ப சிவராம் கிருஷ்ணன் சாரை ஏர்போர்ட்ல பார்த்தேன்.

அவர் என்ன இங்கனு கேட்டப்ப #83 பத்தி சொன்னேன். அவர் உடனே ஶ்ரீகாந்த் சாருக்கு போன் போட்டு, ஜீவா உன் ரோல் பண்றான்னு சொல்லிட்டாரு. அவர்கிட்ட பேசினேன். வா மீட் பண்ணலாம் சொல்லி வீட்டுக்கு வரச்சொன்னாரு. அவர் நேர்ல பார்த்த பிறகு நடிக்க முழு தைரியம் வந்துடுச்சு.

#83 பட அனுபவம் எப்படி இருந்தது ?
அட்டகாசமான அனுபவம், ஒரு இண்டர்நேஷனல் படம் பண்ண மாதிரி இருந்தது. நீங்க பார்க்கும் போதே அத உணர்ந்திருப்பீங்க. முழுப்படப்பிடிப்பும் லண்டன்ல தான் நடந்தது. எல்லா காட்சியிலும் அவ்வளவு கூட்டம் இருக்கும் ஆனாலும் துல்லியமா அந்த கூட்டத்த கண்ட்ரோல் பண்ணி பிரமாண்டமா எடுத்தாங்க. அந்த அனுபவமே ரொம்ப புதுசா இருந்தது. படப்பிடிப்பெல்லாம் லார்ட்ஸ் மைதானம், ஓவல் மைதானம் போய் எடுத்தோம். தெருவுல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்த பையனுக்கு லார்ட்ஸ் மைதனாத்த பார்க்கறதே கனவு தான்.
ஆனா நான் நேர்ல அங்க கிரிக்கெட் விளையாடினதெல்லாம் ஏதோ மாயாஜாலம் மாதிரி தான் இருந்தது. லார்ட்ஸ்ல விளையாடுனதுல என்னோட ஃபிரண்ட்ஸ் எல்லோருக்கும் பொறாமை. எல்லோருமே அதப்பத்தியே கேட்டுட்டு இருந்தாங்க மொத்தமா இந்தப்படமே ரொம்பவும் புதுசா இருந்தது.

ஷீட்டிங்ல பண்ண கலாட்டாக்கள் ஏதாவது ?

எக்கசக்கமாக இருக்கு. லண்டன் போன மொத நாளே ஹோட்டல் மொத்தத்தையும் காலி பண்ணி பெரிய கலாட்டா நடந்தது. முதல் நாள் ஷீட்டிங் எல்லோரும் ஹோட்டல் வந்தப்புறம், நான் அங்க இருந்த டீமோட சேர்ந்து ரிகர்சல் பண்ணேன். படத்துல ஒரு சீன் வரும் ஶ்ரீகாந்த் தொடர்ந்து சிகரெட் பிடிக்கிற மாதிரி, அந்த காட்சிக்காக டீமோட சேர்ந்து சிகரெட் பிடிக்க அந்த புகையால ஹோட்டல்ல அலாரம் அடிச்சு, 11 மாடில இருந்து எல்லோரையும் காலி பண்ணிட்டாங்க . அப்புறம் மெதுவா கபீர் சார்கிட்ட நாங்க தான் காராணம்னு சொன்னோம். இந்த மாதிரி படம் முழுக்க கலாட்டா நடந்துட்டே தான் இருந்தது.

படத்துல மிக முக்கியமான இடத்துல ஒரு நீளமான டயலாக் படத்தோட மொத்த கருவையும் சொல்ற டயலாக் உங்களுக்கு இருந்ததே அதப்பத்தி ?

படம் ஆரம்பிச்சதிலிருந்தே அதப்பத்தி தான் மொத்த டீமும் பேசிட்டு இருந்தாங்க, சரியா பண்ணிடுவீங்கள்லனு கேட்டுக்கிட்டே இருந்தாங்க, முத நாள் ஷீட் எல்லாம் ஒன் டேக்ல நல்லா போயிடுச்சு. திடீர்னு கூப்பிட்டு அந்த டயலாக் பேச சொன்னாங்க எனக்கு சுத்தமா வரல எல்லொருக்கும் பயம். அப்புறம் நான் கபீர் சார்ட்ட அதெல்லாம் பார்த்துக்கலாம் நான் ரெடியாகிடுவேன்னு சொல்லி அந்த டயலாக்க தனியா பயிற்சி செஞ்சு ரெடியானேன்.
ஆனாலும் எல்லோருக்கும் ரொம்பவும் பயம் இருந்தது. ஏன்னா அந்த காட்சில நிறைய கூட்டம் இருக்கும் பெரிய செட்டப், ஆனா அத எடுத்தப்ப ஒரே டேக்ல ஒகே பண்ணிட்டேன். எல்லோரும் பாராட்டுனாங்க. படம் பார்த்துட்டு எல்லோரும் பாராட்டுறது இன்னும் சந்தோசம்.

பாலிவுட் பட அனுபவம் எப்படி இருந்தது? தமிழிலிருந்து வித்தியாசமாக இருந்ததா ?

படம் பார்த்தாவே உங்களுக்கு என்ன வித்தியாசம்னு தெரியும். அவங்களோட செட்டப் பெரிசு. பட்ஜெட் ஜாஸ்தி. அதனால அவங்களோட ஒர்க்கும் பெரிசா இருக்கு. நமக்கு இங்க அந்த பட்ஜெட் கிடைச்சா நாமளும் அவங்க மாதிரி வேலை பார்க்கலாம் அவ்வளவுதான்.

நீங்கள் கிரிக்கெட் அதிகம் பார்ப்பிர்களா உங்களுக்கு பிடித்த வீரர் யார் ?

இப்ப ஷீட்டிங்கால அதிகம் பார்க்க முடியல ஆனா தொடர்ந்து பார்ப்பேன் நான் கிரிக்கெட் ரசிகன் தான் பாஸ். இப்ப யார்கிட்ட கேட்டாலும் தோனிதான் ஃபேவரைட் பிளேயர்னு சொல்லுவாங்க. எனக்கும் அவரப்பிடிக்கும். ஆனா அவர தாண்டி விராட் கோலி ரொம்ப பிடிக்கும். அப்புறம் ரோகித் சர்மா சொல்லலாம்.

#83 உலககோப்பை விளையாடிய வீரர்கள் பற்றி தெரியுமா? அவர்களை சந்தித்தீர்களா ?

படத்துக்காக சந்திச்சதுதான். கபில் சார், கவாஸ்கர் சார், மொகிந்தர் சார் எல்லோரையும் படத்துக்காக பார்த்தோம். கபில் சார் நிறைய பேசினார். கவாஸ்கர் என்னோட விளையாட்ட பார்த்துட்டு.. எங்கிருந்து பிடிச்சீங்க.. அப்படியே ஶ்ரீகா ( ஸ்ரீகாந்த் ) மாதிரியே விளையாடுறான்னு சொன்னார். ரொம்ப சந்தோசமா இருந்தது.

படத்தில் உங்க பாத்திரத்திற்காக ஹோமொர்க் செய்தீர்களா ?

பெரிசா எதுவும் பண்ணல. ஶ்ரீகாந்த் சார் நிறைய சொன்னார். அவர்கூட இருந்தா போதும். அவரே எல்லாம் சொல்லி தந்துடுவார். அவர் வீட்டுக்கு போய் அவரோட இருந்து முழுக்க வீடியோ எடுத்துட்டு வந்தேன். ஒவ்வொரு சீன் பண்ணும் போதும் அத போட்டு பார்த்துப்பேன் அவ்வளவுதான்.

நாயகன் ரன்வீர் எப்படியானவர் ? அவருடன் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது ?

ரண்வீர் ஒரு புரபசனல். முன்னாடியே கல்லிபாய் பார்த்து அவருக்கு நான் ஃபேன். ஆனா இந்தப்படத்துல அவர் முழுக்க முழுக்க கபில் தேவா தான் இருந்தார். ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரோட வேலை பார்த்தது சூப்பரா இருந்தது. நிறைய பேசினோம். நிறைய சொல்லிக்கொடுத்தார்.

தீபிகா படுகோனே உடன் காட்சிகள் நடித்த அனுபவம் ?
தீபிகா மேம் கூட காட்சிகள் ரொம்ப கம்மி தான். அந்த அனுபவமெல்லாம் சூப்பரா இருந்தது. என்ன நிறைய சப்போர்ட் பண்ணாங்க. தமிழ் படம் பத்தியெல்லாம் பேசினாங்க.

பிரபலங்களிடமிருந்து ஏதும் பாராட்டுக்கள் கிடைத்ததா ?

எக்கசக்கமா, படம் வந்ததிலிருந்து தினமும் எதிர்பாராத இடத்திலிருந்து பாராட்டு வந்திட்டே இருக்கு. கிரிக்கெட் வீரர் அஷ்வின் எல்லாம் போன் பண்ணி பாராட்டினாரு. நிறைய பாராட்டுக்கள் வந்துட்டே இருக்கு.

பாலிவுட் வாய்ப்புகள் வருகிறதா ?

இப்போ நிறைய வர ஆரம்பிச்சிருக்கு. நிறைய கதைகள் பத்தி பேசுறாங்க. ஆனா இன்னும் எதுவும் கமிட் பண்ணல. ஒரு பெரிய வெளிச்சம் கிடைச்சிருக்கு. அத சரியா பயன்படுத்திக்கனும். அதனால வெயிட் பண்ணி சரியானத பண்ணலாம்னு இருக்கேன்.

தற்போது நடிக்கும் படங்கள் பற்றி ?
இப்போதைக்கு ரெண்டு படங்கள் போய்ட்டு இருக்கு. வரலாறு முக்கியம் நல்ல காமெடி படம், வெளியீட்டு ரெடியாகிட்டு இருக்கு. இன்னொன்னு சிவா கூட ‘கோல்மால். ஷீட் பரபரப்பா போயிட்டு இருக்கு. அடுத்த புராஜக்ட் பேச்சுவார்தைகள்ல இருக்கு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்

என பேசினார் நடிகர் ஜீவா.

Jeeva talks about 83 movie and his bollywood offers

More Articles
Follows