நயவஞ்சகர்களே.. கொரோனா செலவு மக்கள் கணக்கு கேட்பார்கள் என்ற பயமா? – கமல்

நயவஞ்சகர்களே.. கொரோனா செலவு மக்கள் கணக்கு கேட்பார்கள் என்ற பயமா? – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanஇன்று காந்தி ஜெயந்தி. இந்த நாளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனா தொற்றை காரணம் காட்டி கிராம சபைக் கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது அரசு.

அதுகுறித்து கமல்ஹாசன் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது..

கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன ? கொரோனா கால செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா? அல்லது மக்கள் நீதி மய்யம் கொண்டுவிடும் என்ற நடுக்கமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? நாளை எமதே!

பாருக்குள்ளே நல்ல நாடுதான்… நம்பியதில் பிசகில்லை. நாட்டை நாசமாக்கும் நயவஞ்சகர்களை அகற்றிவிட்டால், நாளைய குழந்தைகளேனும் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டும். ஜெய்ஹிந்த்!

என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் தன் 2வது மகள் அக்சராஹாசன் குழந்தை பருவத்தில் பாடிய நாட்டுப்பற்று பாடலை பதிவிட்டுள்ளார்.

Happy Bday to Mr. MK Gandhi. Sharing what

@Iaksharahaasan

had sung for me when she was a child. Calling all Indians to remember the great man whose life was his message to us! Let’s make India a place where Equality prevails-sare jahan se achcha, Gandhi’s India can still be ours!

Kamal Haasan warns Tamilnadu Government

டபுள் ரோலில் மிரட்டும் சாய் தீனா..; ரஞ்சித் வெளியிட்ட ‘அலறல்’ பர்ஸ்ட் லுக்

டபுள் ரோலில் மிரட்டும் சாய் தீனா..; ரஞ்சித் வெளியிட்ட ‘அலறல்’ பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

alaral first lookஅலறல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் “ சாய் தீனா ”
” அலறல் ” திரைப்படத்தின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் வெளியிட்டார்.

இப்படத்தினை GD புரொடக்ஷன்ஸ், ஜீவேதா ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது.

புதுமுகங்களாக நந்தினி கதாநாயகியாகவும், கிரி கதாநாயகனாகவும் மற்றொரு கதாநாயகியாக ஸாகித்யாவும், சாய் தீனா அவர்கள் மாறுபட்ட இரட்டை வேடங்களிலும், குழந்தை நட்சத்திரங்களாக பேபி – தன்யஸ்ரீ மாஸ்டர் – K. சுடர் நிலவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தைப் பற்றி அறிமுக இயக்குநர்களான ம.ரூபநாதன் மற்றும் அ.பாரூக் இருவரும் கூறுகையில்…

இப்படம் உண்மை சம்பவங்களின் தாக்கத்தில் பெண்ணியம் மற்றும் குழந்தை மனோதத்துவவியல் கருவாகக்கொண்டு திகில் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த கமர்சியல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

Director Pa Ranjith released Actor Sai Dheena’s alaral first look

ஆட்கள் மாறினாலும் அரசியல் மாறாது..; ‘கலை’ மூலம் கருத்து சொல்லும் கல்லூரி மாணவர்கள்

ஆட்கள் மாறினாலும் அரசியல் மாறாது..; ‘கலை’ மூலம் கருத்து சொல்லும் கல்லூரி மாணவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalai short filmலிசெட், லயோலா கல்லூரி மாணவர்கள் ‘கலை’ ௭ன்னும் குறும்படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இந்த ஐந்து நிமிட குறும்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சாம் க்ளைட்டஸ், ஒளிப்பதிவு -மெர்வின் ராஜ் ,கதை -தேவா, இசை – அருள் விக்டர் ,எடிட்டிங் -ஆலன் ஜேக்கப், பிஆர்ஓ – ஜான்சன் .

ஆழ்ந்த உணர்வும் , சமுதாய நலனும் கருதி , இச்சூழலில் மிக முக்கியமாக ஆலோசிக்க வேண்டிய நிகழ்வை ‘கலை’ குறும்படம் மூலம் சிறப்பாக பதிவு செய்த ‘லிசெட் ,

லயோலா கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

மாற்றத்தை ஏற்க முயலாமல், பாகுபாட்டை ௭திர்க்க இயலாமல் தவிக்கும் விளிம்புநிலை சமுதாயத்தின் ௨ண்மை நிலையை ௭டுத்துரைக்கும் ‘கலை’ குறும்படத்தைப் பதிவு செய்துள்ள ‘லிசெட் , லயோலா மாணவர்களுக்கு பாராட்டுகள் பெருகி வருகின்றன.

குறிப்பாக “நிராகரிப்பு, தவறான கருத்துக்கள் சூழ்ந்த இச்சமூகத்தில், ௭திர்கொள்ளுதலின் ஏக்கத்தை தெரிவிப்பதாக ‘கலை’ ௮மைந்துள்ளது “என்று பார்த்தவர்களால் பாராட்டப்படுகிறது.

இன்று விஞ்ஞானத்தில் எவ்வளவு முன்னேறினாலும் சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் போது சமுதாயத்தில் அவர்கள் எந்தத் தட்டில் இருக்கிறார்கள் என்பதை அனிச்சையாக அறிய முயல்வதும் அதற்கேற்ப எதிர்கொள்வதும் நடக்கிறது என்பதைச் சொல்கிறது இக்குறும்படம்.

‘நாங்கள் யாரென்று நீ தெரிந்து கொண்டால் மட்டுமே நீ எங்களை எவ்வாறு பார்க்கிறாய் என்று உனக்கே புரியும்’ என்று பலமான வசனங்கள் இடம்பெறும் குறும்படம்.

காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது. ஆட்கள் மாறினாலும் அரசியல் மாறாது. அடித்தட்டு மக்கள் வாழ்க்கை அப்படியேதான் இருக்கும் என்று சொல்கிறது படம்.

Loyola – Licet college students joins for Kalai

கௌதம் மேனன்-சுதா கொங்குரா-வெற்றி மாறன்-விக்னேஷ் சிவன் ஆகியோரின் ‘பாவ கதைகள்’

கௌதம் மேனன்-சுதா கொங்குரா-வெற்றி மாறன்-விக்னேஷ் சிவன் ஆகியோரின் ‘பாவ கதைகள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

paava kathaigalதமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் உயர்த்தி பிடித்த நான்கு இயக்குநர்களான கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை தமிழின் பெரு நட்சத்திரங்களின் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ்க்காக உருவாக்கியுள்ளார்கள்.

மும்பை 2020 அக்டோபர் 1
நெட்ஃப்ளிக்ஸ் ( Netflix ) நிறுவனம் தங்களது முதல் தமிழ் திரைப்படமான “பாவ கதைகள்” திரைப்படத்தை அறுவித்துள்ளார்கள்.

கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளார்கள்.

பாவ கதைகள் காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது.

தமிழின் புகழ்மிகு பெரு நட்சத்திரங்களான அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்

படம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் கூறியது…

“பாவ கதைகள்” படம் இயக்குநர்கள் வெற்றி மாறன், சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன் ஆகியோருடன் பணிபுரியும் எனது முதல் அனுபவம்.

கனமிக்க, மிகவும் சிக்கலான கருவை, மிகவும் நேர்மையுடன் வெளிப்படையாக இந்த பெரும் இயக்குநர்களுடன் இணைந்து கையாண்டு கதை சொன்ன இந்த அனுபவம் வெகு அற்புதமாக இருந்தது. இந்த ஆந்தலாஜி திரைப்படம் நாம் கொண்டிருக்கும் அந்தஸ்து, கௌரவம், சமூக கட்டமைப்புகள் தனிமனித சுதந்திரத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை கட்டுடைத்து காட்டுவதாக இருக்கும் என்றார்.

படம் குறித்து சுதா கொங்குரா கூறியது…

இப்படத்தில் உள்ள ஒவ்வோரு கதைகளும் எந்த தடைகளும் இல்லாமல் நம் சினிமா வழக்கத்திற்கு மாறான கட்டுக்கடங்காத அன்பை கூறும் கதைகளாகும். மிக உயர்ந்த தரத்திலான இந்த படைப்பு இந்தியாவையும் கடந்து உலகம் முழுதும் உள்ள ரசிகர்களை Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் வழியே சென்றடைவது, பெரும் மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

படம் குறித்து வெற்றி மாறன் கூறியது…
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை உருவாக்கியது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. கதை சொல்வதில் மட்டுமே எனது கவனம் இருந்தது.

நான் நினைத்ததை எந்த தடங்கலும் இல்லாமல் சொல்ல முடிந்தது.
படம் உருவாக்குவதில் “பாவ கதைகள்” திரைப்படத்தில் முழு சுதந்திரத்தை அனுபவைத்தேன். இப்படம் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது என்றார்.

படம் குறித்து விக்னேஷ் சிவன் கூறியது…
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவன படைப்புகளின் தீவிர ரசிகன் நான். ஒரு படைப்பாளனாக மாறுபட்ட கதையினை, முழுதாக அங்கீகரிக்கும் மூன்று பெரும் இயக்குநருடன் இணைந்து கூறும் வாய்ப்பு மிகப்பெரிய பரிசாகும்.

இவை நம் தமிழ் சமூகத்தில் உறவுகளின் வேதனையளிக்கும் இருண்மை மிக்க பக்கத்தினை நாம் உணரும்படி வெளிச்சமிட்டு காட்டும்” என்றார்.

Netflix announcement about new anthology movie Pava Kathaigal

1 பெண்ணுடன் 2 ஆண்கள்.; அந்த இடத்தில் வாழைப்பழத்தை வச்சி… ‘இரண்டாம் குத்து’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

1 பெண்ணுடன் 2 ஆண்கள்.; அந்த இடத்தில் வாழைப்பழத்தை வச்சி… ‘இரண்டாம் குத்து’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Irandam Kuthu2018-ம் ஆண்டு வெளியான ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படம் இந்த வகை தான். திரையரங்கில் இளைஞர்கள் கொண்டாடிய இந்தப் படம் தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை விட 5 மடங்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

இப்போது, இதன் 2-ம் பாகத்தை உருவாக்கியுள்ளார் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

இயக்குநராக மட்டுமன்றி, நாயகனாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ‘இரண்டாம் குத்து’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க இளைஞர்களைக் கவர்வதற்காகவே இந்தப் படத்தை ப்ளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஹரி பாஸ்கர் தயாரித்துள்ளார்.

‘இரண்டாம் குத்து’ படத்தின் நாயகிகளாக மீனாள், ஹரிஷ்மா, அக்ரிதி ஆகியோர் நடித்துள்ளனர்.

ரவி மரியா, சாம்ஸ், பிக் பாஸ் டேனி, டி.எஸ்.கே, ஷாலு ஷமு, லொள்ளு சபா மனோகர், லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம் புலி என ஒரு நட்சத்திர பட்டாளமே ‘இரண்டாம் குத்து’ படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக பாலு, இசையமைப்பாளராக எஸ்.என்.பிரசாத், எடிச்சராக பிரசன்னா ஜி.கே பணிபுரிந்துள்ளனர்.

இளைஞர்களுக்குக் கொண்டாட்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகளும் முடிவடைந்துவிட்டது.

சென்சார் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன், இளைஞர்களைத் திரையரங்கிற்கு அழைத்து வரும் படமாக ‘இரண்டாம் குத்து’ இருக்கும் என்கிறது படக்குழு.

IAMK director’s next film first look is released

நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீணாகக்கூடாது..; பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்து கமல் கண்டனம்

நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீணாகக்கூடாது..; பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்து கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட அனைவரும் விடுதலை என அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 48 பேரில் 32 பேர் விடுதலையாகின்றனர். 12 பேர் வழக்கு காலத்தில் இறந்தே விட்டனர் என்பது வேறுக்கதை

இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ஆதங்கத்தை டிவிட்டரில் வெளிப்படுத்தி உள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

‘நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும், அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண்போகக்கூடாது’’ என பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan condemns BabriMasjid case Verdict

More Articles
Follows