தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் உள்ளது.
இதனிடையே இன்று பிற்பகல் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் ஆளுநரை சந்தித்து விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், 7.5% உள்ஒதுக்கீடு தர ஆளுநர் விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையில் நீட் தேர்வு முடிவு வெளியீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக, அத்தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது அரியலூர், சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் புகார் அளித்தனர்.
மேலும் விடைத் தாளில் விடைகள் மாறியுள்ளதாக, விடைகள் மாற்றப்பட்டு பூஜ்ஜியம் என மதிப்பெண்கள் வந்திருப்பதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
விடைத்தாள் அதாவது ஓஎம்ஆர் நகல்கள் பதிவேற்றம் செய்த பின் விடைக்குறிப்பை வைத்து சரிபார்த்ததில் நிறைய மதிப்பெண்கள் கிடைத்ததாகவும், தற்போது அந்த விடைத்தாள் நகல் மாற்றப்பட்டு பதிவெண், கையெழுத்து ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளதாகவும் மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில்…
தேர்விலேயே ஆள் மாறாட்டம்,
முடிவுகளில் முழுக் குழப்பம்.
இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு,
உள் ஒதுக்கீடும் துறப்பு.
கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா?
கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்.
தேர்விலேயே ஆள் மாறாட்டம்,
முடிவுகளில் முழுக் குழப்பம்.இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு,
உள் ஒதுக்கீடும் துறப்பு.கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா?
கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 20, 2020
Kamal Haasan wants justice over NEET exam










