தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மைக்காலமாக ட்விட்டரில் அரசியல் குறித்த பதிவுகளை அதிரடியாக பதிவிட்டு வந்தார் கமல்ஹாசன்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர், ட்விட்டர் தளத்தை விட்டு அரசியல் களத்திற்கு வந்து பணியாற்ற சவால் விட்டனர்.
இதனையடுத்து இன்று அதற்கான பணிகளில் இறங்கியுள்ளார் கமல்ஹாசன்.
அதன் விவரம் வருமாறு….
கொசஸ்தலை ஆற்றின் கழிமுகத்துவாரப் பகுதியில் வல்லூர் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டதை நாம் நேற்று வடசென்னைக்கு ஆபத்து என்ற பெயரில் பார்த்தோம்.
இந்நிலையில் இன்று அதிகாலை எண்ணூர் துறைமுகப் பகுதிகளை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.
சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்தா ஜெயராமனும் கமல்ஹாசனுடன் சென்று பாதிப்புகள் குறித்து விவரித்தார்.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தமக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ட்விட்டரில் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
சகோதரர் திருமாவளவன் மற்றும் பொன்னார் போன்றோர் எனக்களித்த வரவேற்ப்புரைக்கு நன்றி. முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என் ஊக்கத்தை கூட்டுகிறது” என பதிவிட்டுள்ளார்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 28, 2017