கர்நாடக நாற்காலிக்காக நாடகம்; மோடியை சாடிய கமல்ஹாசன்

கர்நாடக நாற்காலிக்காக நாடகம்; மோடியை சாடிய கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan and modiநமக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து தமிழர்களின் தலையாய பிரச்சினையாக இருந்து வருவது காவிரி நீர் விவகாரம்தான்.

அண்மையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது.

அதில், 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பில் குறிப்பிட்டபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இதற்காக நம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தமிழக எம்.பி.க்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் மத்திய அரசு இதில் மௌனம் காத்து வருகிறது.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

`பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல். கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்.’ என்று பதிவிட்டுள்ளார்.

போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்தார் கார்த்திக் சுப்பராஜ்

போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்தார் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and karthik subbarajகாலா மற்றும் 2.0 படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தை இறைவி பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம், பிரமாண்டமாக தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து ஆலோசனை செய்வதற்காக கார்த்திக் சுப்புராஜை ரஜினிகாந்த் அழைத்திருந்தாராம்.

அந்த அழைப்பை ஏற்று இன்று சற்றுமுன் கார்த்திக் சுப்புராஜ் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவர்கள் இருவரும் சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுப்பட்டனர்.

விரைவில் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதால் இதில் அரசியல் அதிரடிகளும் பன்ச் வசனங்களுக்கும் பஞ்சமிருக்காது என கருதப்படுகிறது

நடிகைக்காக ஒரு கதையை உருவாக்கும் தருணமே சந்தோஷம்தான்… : தன்ஷிகா

நடிகைக்காக ஒரு கதையை உருவாக்கும் தருணமே சந்தோஷம்தான்… : தன்ஷிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanshika talks about his Telugu debut movie Melaகபாலி, எங்க அம்மா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாய் தன்ஷிகா.

இவர் ‘சினம்’ என்ற குறும்படத்திலும் தற்போது நடித்துள்ளார்.

இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம் ’ குறும்படத்திற்கு கிடைத்தது.

மேலும் நார்வே திரைப்பட விழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது ‘சினம்’.

சிறந்த நடிகைக்கான விருதினை வென்றிருந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் தன்ஷிகா.

இதுகுறித்து தன் மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் மேளா என்ற தெலுங்கு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அவர் கூறியதாவது…

‘நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு நடிகையை வைத்து திரைக்கதையை உருவாக்குகிறார்களோ அந்த தருணம் தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது.

தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கிரண். அவர் என்னைச் சந்தித்து, உங்களை மனதில் வைத்து மேளா என்ற ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன் என்றார்.

இந்த கதையின் மூலமாகத்தான் தான் இயக்குநராக அறிமுகமாகிறேன்.

இது கதையின் நாயகியை மையப்படுத்திய திரைக்கதை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இதனை உருவாக்கியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு முழு கதையையும் சொன்னார்.

அதை கேட்டுவிட்டு நான் பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டேன். அந்தளவிற்கு அந்த கதை என்னை கவர்ந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்.’ என்றார்.

இந்த படத்தில் நீங்கள் இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானதே உண்மையா? என கேட்டபோது, அது முழு உண்மையல்ல. ஆனால் ரசிகர்களுக்கு இரட்டை வேடமாகத்தான் தெரியும்.

இதைப் பற்றி மேலும் விவரமாக சொல்லக்கூடாது. படத்தில் நான் இரண்டு பரிமாணங்களில் நடிக்கிறேன். அதில் ஒரு கேரக்டரில் பேயாக நடிக்கிறேன்.

இந்த படத்தில் எனக்கு ஜோடி என்று யாருமில்லை. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள்.

தெலுங்கு நடிகர் சூர்யா தேஜ் நாயகனாக நடித்திருக்கிறார். ஆலி, பரத்ரெட்டி, முனிஸ்காந்த், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.’ என்றார்.

இந்த படத்தில் நீங்கள் சண்டை காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறீர்களாமே..? என கேட்டபோது, படத்தின் கதையை கேட்டபோதே நான் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

பொதுவாக நான் நடிக்கும் படங்களில் ஆக்சன் காட்சிகளில் நடிக்கவேண்டும் என்றால் நான் டூப் போடாமல் நடிப்பதைத்தான் விரும்புவேன்.

அதனால் இந்த படத்திலும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் ரோப் ஷாட் மற்றும் உயரத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் நிஜமாகவே நடித்து இயக்குனரின் பாராட்டை பெற்றேன்.

இந்த படத்தில் இடம்பெறும் அழகான பாடல் காட்சிகளிலும், நடன இயக்குநர் சந்திரகிரண் அவர்களின் நடன அமைப்பிற்கு ஏற்ப ஐம்பது முறைக்கு மேல் ஒத்திகை பார்த்து ஆடியிருக்கிறேன்.

‘மேளா’ நான் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம். தமிழ் மற்றும் தெலுங்கிலும் இந்த படம் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.

Dhanshika talks about his Telugu debut movie Mela

முகேஷ் அம்பானியுடன் இணைந்து மகாபாரதத்தை படமாக்கும் அமீர்கான்

முகேஷ் அம்பானியுடன் இணைந்து மகாபாரதத்தை படமாக்கும் அமீர்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aamir khan film Mahabharata budget Rs 1000 croresஇந்திய நாட்டின் காவியமான மகாபாரதத்தை ரூ1000 கோடி செலவில் திரைப்படமாக நடிகர் அமீர்கான் எடுக்கவுள்ளார்.

ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற பிரம்மாண்டமான படமாக இதனை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்.

இப்படத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானியுடன் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்தின் அறிமுக விழாவில் பேசிய அமீர்கான், மகாபாரதத்தை திரைப்படமாக எடுப்பது தனது கனவு என்றும், கர்ணன் பாத்திரத்தில் தாம் நடிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

உடல்வாகு காரணமாக கர்ணன் பாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனால் தான் கிருஷ்ணர் கேரக்டரில் நடிக்க விரும்புவதாகவும் அவர் பேசினார்.

Aamir khan film Mahabharata budget Rs 1000 crores

சாமி ஸ்கொயருக்காக 15 வருடம் பின்னோக்கி செல்லும் விக்ரம்

சாமி ஸ்கொயருக்காக 15 வருடம் பின்னோக்கி செல்லும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saamy 2 will recreate set from first partகடந்த 2003ஆம் ஆண்டில் விக்ரம், த்ரிஷா இணைந்து நடித்த சாமி திரைப்படம் வெளியானது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை சாமி ஸ்கொயர் என்ற பெயரில் அதே இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார்.

இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். த்ரிஷா இப்படத்திலிருந்து விலகியதால் அவரது கேரக்டர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

தற்போது வரை இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளதாம்.

சாமி படத்தின் முதல் பாகத்தில் திருநெல்வேலி அல்வாடா என்ற பாடல் மற்றும் சண்டை காட்சிகள் மிகப் பிரபலமானது.

இவை நெல்லை நகரத்தில் உள்ள தெருக்களில் படமாக்கப்பட்டு இருந்தன.

தற்போதும் அதே தெருவில் சாமி-2 படத்துக்காக பாடல் மற்றும் சண்டை காட்சிகளை எடுக்க நினைத்தாராம்.

ஆனால் அந்த தெருவில் தற்போது நிறைய மாற்றங்கள் இருப்பதால் 15 ஆண்டுக்கு முன்பு இருந்தது போல் நெல்லை புறநகர் பகுதியில் செட் அமைத்து பாடல் மற்றும் சண்டை காட்சிகள் எடுக்க இருக்கிறார்களாம்.

Saamy 2 will recreate set from first part

Breaking: நாளை முதல் எல்லா தியேட்டர்களில் படம் பார்க்கலாம்

Breaking: நாளை முதல் எல்லா தியேட்டர்களில் படம் பார்க்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil film industry strike over From 23rd March all theaters will be openedடிஜிட்டல் திரையிடல் க்யூப்புக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால் கடந்த 3 வாரங்களாக தமிழகத்தில் எந்த ஒரு புதுப்படங்களும் வெளியாகவில்லை.

புதுப்படங்கள் வெளியாகாத காரணத்தால் தியேட்டர்களும் மூடும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

ஆனால் சென்னையில் மட்டும் பழைய ஹிட்டான படங்களை திரையிட்டு வந்தனர்.

இவையில்லாமல் எந்த தமிழ் பட சூட்டிங்கையும் நடத்த கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனால் ஒட்டுமொத்த திரையுலமே முடங்கியது.

தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா துறை சார்ந்த மற்ற துறையினரும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தனர்.

இன்று சற்று நேரத்திற்கு முன் தமிழக அமைச்சர்களை சினிமா பிரபலங்கள் சந்தித்துள்ளனர்.

அதன்படி நாளை மார்ச் 23முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்கும் என சென்னை தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ உத்தரவாதம் அளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் என அறிவித்துள்ளனர்.

தமிழக அரசு எந்தெந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது என்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Tamil film industry strike over From 23rd March all theaters will be opened

More Articles
Follows