வாக்கை விற்று வாழ்க்கையை அடகு வைக்காதீர்கள்… கமல்ஹாசன்

kamal haasanமக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் கமல்ஹாசன்.

அண்மையில் அரூரில் மக்கள் மத்தியில் பேசினார் கமல். அவர் பேசியதாவது…

ஓட்டு பேரம் பேச நான் இங்கு வரவில்லை. மக்களுக்கு இலவசங்களை தருவேன் என்று வாக்குறுதியும் தர வரவில்லை.

மக்களுக்குத் தேவையானவற்றை மக்களே பெற்றுக் கொள்ளும் வகையில் ஓர் அரசு அமைந்திட எங்கள் கட்சி உழைத்திடும்.

ஓட்டிற்காக ஒரு நாள் பணத்தை பெற்றுக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கையை அடமானம் வைத்து விடாதீர்கள்.

சில ஆயிரம் ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு உங்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணத்தை விற்று விடாதீர்கள்.

மக்களின் முழு அதிகாரத்தையும் மக்களிடமே கொடுக்கும் கிராம சபைகளில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்.” என்று பேசினார்.

Overall Rating : Not available

Latest Post