வேளாண் மசோதா.; விவசாயிகள் வயிற்றில் அடித்த அரசுகள்… கமல் கண்டனம்

வேளாண் மசோதா.; விவசாயிகள் வயிற்றில் அடித்த அரசுகள்… கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanநாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கையில்..

ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், எட்டு வழிச் சாலை திட்டம் என ஏற்கனவே பல திட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்துள்ளது அரசு.

தற்போது விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் புதிய சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.

இதன் மூலம் விவசாயிகளுக்கு மேலும் ஒரு துரோகத்தை செய்துள்ளதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகள் நலனை பாதுகாக்கும் சட்ட திருத்தங்களுடன், வேளாண் மசோதா சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

Kamal Haasan, attacks ruling AIADMK

TRP ரேட்டிங்குக்காக குழந்தைகள் அழ கூடாது..; டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க SPB போட்ட கன்டிசன்

TRP ரேட்டிங்குக்காக குழந்தைகள் அழ கூடாது..; டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க SPB போட்ட கன்டிசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPBமறைந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் பற்றிய நிறைய செய்திகளை பகிர்ந்து கொண்டே போகலாம். அப்படி ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்தவர் அவர்.

கடந்த சில ஆண்டுகளில் அவர் டிவி ரியால்ட்டி ஷோக்களில் பங்கேற்றார்.

அது குறித்து டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்…

”குழந்தைகள் பாடல் பாடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எஸ்பிபி அவரிடம் அனுமதி கேட்க சென்றேன்.

அப்போது அவர் ஒரு கன்டிசன் விதித்தார்.

தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஒரு குழந்தை கூட அழுவதை நான் அனுமதிக்கமாட்டேன்.

அப்படி அழுதாலும் அதை காட்டி டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக பயன்படுத்தக்கூடாது” என்றார் எஸ்.பி.

அவரின் அந்த பார்வை டிவி நிகழ்ச்சிகள் மீதான என் எண்ணங்களையும் மாற்றியது.

இனி வரும் தலைமுறை உங்களுக்கு எப்போதும் நன்றிக் கடன்பட்டிருப்பார்கள்”

இவ்வாறு தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் பதிவிட்டுள்ளார்.

Interesting facts of late singer SPB

மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நினைவு இல்லம் கட்ட எஸ்பிபி குடும்பத்தினர் முடிவு

மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நினைவு இல்லம் கட்ட எஸ்பிபி குடும்பத்தினர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPB and his sonகடந்த 50 ஆண்டுகளாக இந்திய இசை ரசிகர்களை தன் குரலால் வசப்படுத்தியவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

உடல்நலக்குறைவால் கடந்த செப். 25 வெள்ளிக்கிழமை காலமானார்.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் தமிழக காவல்துறை அரசு மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் நடிகர்கள் அர்ஜுன், விஜய், ரகுமான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிலையில் SPB உடல் புதைக்கப்பட்ட தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அவருக்கு நினைவு இல்லம் அமைக்கப்படும் என அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

Wish to build a memorial dedicated to all SPB fans – SPB Charan

போதைப் பொருள் விவகாரம்..; தீபிகா படுகோன், ஷ்ரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங் செல்போன்கள் பறிமுதல்

போதைப் பொருள் விவகாரம்..; தீபிகா படுகோன், ஷ்ரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங் செல்போன்கள் பறிமுதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

deepika padukoneஎம்எஸ். தோனி படத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.

நடிகை ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கைதானார்.

இவர்களை அடுத்து பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இதில், ரகுல் ப்ரீத் சிங் ஆஜராகி விளக்கமளித்தார்.

இவரை தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன், போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், தீபிகா படுகோன், ஷ்ரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரின் செல்போன்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NCB seizes mobile phones of Deepika, Shraddha and Rakul

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை SPB பெயரில் வழங்க வேண்டும் – கேயார்

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை SPB பெயரில் வழங்க வேண்டும் – கேயார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPB Keyarபாடகர் இசையமைப்பாளர் நடிகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து தயாரிப்பாளர் கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை:

எஸ்பிபி அவர்களின் மறைவுக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் இப்போது வரை வழக்கமான நபராக இருக்க முடியவில்லை.

அந்தளவுக்கு அவருடைய மறைவு என்னை பாதித்துள்ளது. எஸ்பிபி சாருடைய மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளாக அவர் இசையுலகில் ஆற்றியிருக்கும் சாதனையை, வேறு யாரேனும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை.

6 முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். பத்மபூஷன் விருதையும் வென்றுள்ளார். இந்த பூலோகத்தில் இசை இருக்கும் வரை எஸ்பிபி அவர்கள் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாக இருப்பார்.

எஸ்பிபி அவர்களின் சாதனையைப் போற்றும் விதமாக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை.

அப்படி வழங்கினால் எஸ்பிபி-யின் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகினரின் கருத்தும் கூட.

நன்றி
கேயார்
27-09-2020

Producer Keyar requests National award juries

தனுஷை அடுத்து பாலிவுட் செல்லும் பரத்.; சல்மான் கான் & பிரபுதேவா கூட்டணியில் இணைந்தார்

தனுஷை அடுத்து பாலிவுட் செல்லும் பரத்.; சல்மான் கான் & பிரபுதேவா கூட்டணியில் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

salman khan prabhu devaஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானவர் நடிகர் பரத்.

அதற்கு பிறகு செல்லமே, காதல், பட்டியல், எம்டன் மகன், வெயில், வானம் உள்ளிட்ட கோலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.

இந்தாண்டு முதலில் பரத் நடிப்பில் ‘காளிதாஸ்’ என்ற படம் வெளியானது.

தற்போது பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்.

சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவாகும் ‘ராதே’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் பரத்.

இந்த படத்தில் திஷா படானி, ரந்தீப் ஹூடா, ஜாக்கி ஷெராஃப், மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டதாக பரத் தெரிவித்துள்ளார்.

Actor Bharath lands a key role in Salman Khan’s Raadhe

More Articles
Follows