ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது… உலகநாயகன் கமல்

Kamal clarifies that he will not announce his political party on his birthdayஉலகநாயகன் கமல்ஹாசன், பிரபல பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் பேசும்போது…

ஆட்சியாளர்கள் செய்வார்கள் எனக் காத்திருந்தது போதும்.

இனி செயல் திட்டங்கள் தீட்ட ஒன்று கூடுவோம். இதை ஒரு தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் இப்போதே தயவுசெய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

தமிழகத்துக்குச் செய்ய வேண்டிய கடமையாக நினைத்து வருபவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

நம் இயக்கத்தார் மக்களுடனும் என்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக இருக்க சில ஏற்பாடுகள் நடக்கின்றன. அதைப் பற்றிய அறிவிப்பை வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும்’ என தெரிவித்திருந்தார்.

இதனால், கமலின் நேரடி அரசியல் குறித்த அறிவிப்பை அவர் தன் பிறந்தநாளான நவம்பர் 7-ல் வெளியிடுவார் என பார்த்தோம்.

ஆனால் நவம்பர் 7-ல் புதிய கட்சி அறிவிப்பு இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர் 7-ல் இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.

பொது அறிவிப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் தற்போது அரசியல் கட்சியை கமல் அறிவிக்க மாட்டார் என்பது தெளிவாகியுள்ளது. இன்னும் சில காத்திருக்கவும்.

Kamal clarifies that he will not announce his political party on his birthday

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்

Overall Rating : Not available

Latest Post