தேசிய விருது வென்ற தனுஷ் விஜய்சேதுபதி பார்த்திபன் இமான் ஆகியோருக்கு கமல் & ஸ்டாலின் வாழ்த்து

தேசிய விருது வென்ற தனுஷ் விஜய்சேதுபதி பார்த்திபன் இமான் ஆகியோருக்கு கமல் & ஸ்டாலின் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இதில் மொத்தம் 7 விருதுகளை தமிழ் சினிமா வென்று வந்துள்ளது.

சிறந்த நடிகராக தனுஷும், சிறந்த துணை நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த இசையமைப்பாளராக டி இமானும் (விஸ்வாசம்), ஒத்த செருப்பு படத்துக்கு 2 தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டன.

இவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டரில்…

7 தேசிய விருதுகள் தமிழ்த் திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்களுக்கும், அவர்தம் அணியினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு இதனை இரட்டிப்பாக்குவோம். வெல்க தமிழ் சினிமா!

என பதிவிட்டுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டரில்…

தேசிய விருது பெறும் @dhanushkraja @VijaySethuOffl @rparthiepan @immancomposer ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

அசுரன் @VetriMaaran-க்கு அன்புநிறை வாழ்த்துகள்!

அர்ப்பணிப்புடன் – முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்!

மென்மேலும் சிறப்புகளைப் பெறுக! https://t.co/1tFK3RPkRC

இவ்வாறு மு.க.ஸ்டாலின் நடிகர்களின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

Kamal and stalin wishes to National award winners

ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்

ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா உருவெடுத்துள்ளது.

ஓராண்டை முடித்து விட்ட கொரோனா தற்போது 2வது அலையாக உருவெடுத்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

எனவே இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற அச்ச உணர்வு மேலோங்கி நிற்கிறது.

2021 ஜனவரி மாதம் முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்துப்பட்டு வருகிறது. (Covishield & Covaxin)

தற்போது வரை சுமார் 2.9 கோடி பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வந்த நிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

எனவே தகுதியான அனைவரும் உடனடியாக பதிவு செய்து, தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுகிறேன்”

இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

All those above 45 can get vaccinated against Covid from April 1 says Prakash Jawadekar

கமல் ஒரு சோம்பேறி.. அவர் திமுக-வின் B Team.. அவரால் எம்ஜிஆர் ஆக முடியாது..; ராதாரவி கடும் தாக்கு

கமல் ஒரு சோம்பேறி.. அவர் திமுக-வின் B Team.. அவரால் எம்ஜிஆர் ஆக முடியாது..; ராதாரவி கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவை தெற்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார் வானதி சீனிவாசன்.

இதே தொகுதியில் தான் மக்கள் நீதி மய்யம் சார்பில் முதன்முறையாக கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

பாஜக வேட்பாளர் வானதியை ஆதரித்து நடிகர் ராதாரவி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசனை பற்றி என்னைவிட யாருக்கும் அதிகமாக தெரியாது.

வானதி சீனிவாசன் ஓட்டு வங்கியை பிரிக்க தி.மு.கவின் பி டீமாக கமல் செயல்படுகிறார்.

வாழ்க்கையில் ஒருமுறை கூட ஆட்டோவில் ஏறாத கமல்ஹாசன் கோவையில் தான் ஆட்டோவிலேயே ஏறியுள்ளார்.

தயவு செய்து அவரை நம்பி ஏமாற வேண்டாம்.

யாருக்குமே நிரந்தரமில்லாத வாழ்க்கையை ஏற்படுத்தி தந்தவர் தான் கமல்.

சென்னையில் நாங்கள் இருக்கிறோம் என்ற காரணத்தினால் தான் அவர் கோவையில் வந்து போட்டியிடுகிறார்.

அவருடன் சின்ன வயதில் இருந்தே பழகி வருகிறேன். அவர் ஒரு சோம்பேறி. அவர் தன்னை புரட்சித் தலைவர் என நினைத்து கொண்டிருக்கிறார். ஒருபோதும் அவரால் எம்.ஜி.ஆர் போல் ஆக முடியாது.

சுயமாக சிந்தித்து பேச முடியாமல் பேப்பரில் எழுதி வைத்து படிப்பவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

வருகிற தேர்தலில் தி.மு.க நிச்சயம் தோல்வி அடையும்.

குடியுரிமை திருத்த சட்டம் போன்ற சட்டங்கள் அவசியம் தேவை.
இது போன்ற பல திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.”

இவ்வாறு ராதாரவி பேசினார்.

Radha Ravi slams MNM leader Kamal Haasan

Kamal Radha Ravi

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் முதல் தயாரிப்பான ‘99 ஸாங்ஸ்’ 3 மொழிகளில் தியேட்டர் ரிலீஸ்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் முதல் தயாரிப்பான ‘99 ஸாங்ஸ்’ 3 மொழிகளில் தியேட்டர் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

99 songs posterஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான ‘99 ஸாங்ஸ்’, 2021 ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது.

இசையை ஆன்மாவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான இந்த காதல் கதை, தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட இந்தி பதிப்பின் டிரைலர், கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளுடன் இத்திரைப்படத்தின் மாயஜால இசை உலகத்தின் கதவுகளை சற்றே நமக்கு திறந்து காட்டுகிறது.

பல்வேறு பிரத்யேக சிறப்பம்சங்களை தாங்கி ‘99 சாங்ஸ்’ உருவாகியுள்ளது. ஏ ஆர் ரஹ்மானின் முதல் தயாரிப்பான இந்த லட்சியப் படைப்பின் இணை கதாசிரியரும் அவரே ஆவார்.

‘தி தேவாரிஸ்ட்ஸ்’ மற்றும் ‘பிரிங் ஆன் தி நைட்’ புகழ் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

திறமைமிக்க நடிகரான ஏஹன் பட்டை ‘99 சாங்ஸ்’ மூலம் ரஹ்மான் அறிமுகப்படுத்துகிறார்.

நடிகை எடில்ஸி வர்காஸுக்கு ஜோடியாக ஏஹன் பட் நடிக்கிறார்.

திரைப்படத்தை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஏ ஆர் ரஹ்மான், “என்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸின் சார்பாக இந்த பரீட்சார்த்தமான திரைப்படத்திற்காக ஜியோ ஸ்டூடியோஸுடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது..

பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே ‘99 சாங்ஸ்’-ன் மையக்கருவாகும்.

அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் ரஞ்சித் பாரோட் மற்றும் ராகுல் ராம் போன்ற இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது,” என்றார்.

2021 ஏப்ரல் 16 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தியா முழுவதும் ‘99 சாங்ஸ்’ வெளியாகிறது.

ஜியா ஸ்டூடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸ் ஐடியல் என்டெர்டைன்மென்டுடன் இணைந்து தயாரித்துள்ளது.

AR Rahmans debut production a musical love story will open in cinemas in Tamil Hindi and Telugu


Attachments

கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாகும் ராகுல் ரவீந்திரன்

கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாகும் ராகுல் ரவீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் R. கண்ணன் தயாரித்து இயக்கும் ‘புரொடக்க்ஷன் 5′ தயாரித்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது.

கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட” தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை R. கண்ணன் வாங்கியுள்ளார்.

இதன் இரண்டு பதிப்பிலுமே ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒரு பெண் படித்து பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்கு பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்கு பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது.

கணவனும் புகுந்த வீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதே இக்கதை. இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

மீண்டும் இவருக்கு ஒரு பெரிய பாராட்டுக்கள் குவியும் கேரக்டராக இது அமையும்.

இதன் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் ஆரம்பமாகியது. முதல் நாள் படபிடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார்.

காரைக்குடியிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடை பெறும். இவரது ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். ‘ மாஸ்கோவின் காவேரி ‘ படம் மூலம் சமந்தாவுடன் அறிமுகமான இவர் பின்பு ‘ வணக்கம் சென்னை ‘, யூ- டர்ன் ‘ மற்றும் பல படங்களில் நடித்தார்.

அதே வேளையில் ‘அந்தாள ராட்சசி’ படம் மூலம் தெலுங்கிலும் நாயகனாக அறிமுகமாகி பிரபலமானார் . தெலுங்கில் இயக்குனராகவும் இருந்து வருகிறார்.

இந்த படம் மூலம் மீண்டும் தமிழ் – தெலுங்கு மொழிகளில் நடிக்கும் இவர் இன்று முதல் படபிடிப்பில் கலந்து கொள்கிறார். மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம்,
R.கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்ஷன் சார்பாக M.K. ராம் பிரசாத் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

Aishwarya Rajesh Rahul Ravindran

This young actor joins Aishwarya Rajesh in the remake of malayalam super hit remake

மம்தா மாயாவதி ஜெயலலிதா இவர்களின் கலவை கங்கனா… எம்ஜிஆர் கமல் அஜித் இவர்களின் கலவை அரவிந்த்சாமி..; இப்படி சொன்னது யார் தெரியுமா?

மம்தா மாயாவதி ஜெயலலிதா இவர்களின் கலவை கங்கனா… எம்ஜிஆர் கமல் அஜித் இவர்களின் கலவை அரவிந்த்சாமி..; இப்படி சொன்னது யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் தங்கத்தாரகை, மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு, இன்று படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில்…

நடிகர் தம்பி ராமையா கூறியதாவது…

எல்லா படங்களும் போல் இந்த படம் நூற்றில் ஒன்றல்ல, நூற்றாண்டுகளில் ஒன்று. 1965-1980 காலங்களில் ஜெயலலிதா அம்மையாரை தவிர்த்து தென்னிந்திய படங்களை பார்க்க இயலாது.

அதுபோல் 1982-ல் ஜெயலலிதா அவர்கள், தன்னை அதிமுக-வில் இணைத்து கொண்டபிறகு. 1982-2016 வரை இந்திய அரசியலை அவரை தள்ளிவைத்து பார்க்க இயலாது.

சினிமா வாழ்வில், அரசியல் வாழ்விலும் பெரும் ஜாம்பவானாக இருந்த ஜெயலலிதா அம்மையார் பற்றிய படம்..

இந்திராகாந்தி அம்மையார், மம்தா பேனர்ஜி, மாயாவதி, ஜெயலலிதா அம்மையார் இவர்கள் நான்கு பேரையும் கலந்தார் போல் கங்கனா ரனாவத் உள்ளார்.

திறமை இருக்கும் இடத்தில் திமிரு வரும், கர்வ திறமை கொண்ட தேவதை, அவருடன் நடிக்கும்போது அதை நான் பார்த்தேன், அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

தியாகராஜா பாகவதர், எம் ஜி ஆர், கமல், அஜித்குமார், இவர்கள் அனைவரும் அழகின் உச்சம், இவர்கள் அனைவரின் கலவையாக அரவித் சாமி உள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்திற்கு இவர் தவிர யாரும் பொருத்தமாக இல்லை.

நடிகர், இயக்குநர் சமுத்திரக்கனி பேசியதாவது….

மிகப்பெரும் ஜாம்பவான்கள் பங்கு கொண்டிருக்கும் படத்தில் நானும் இருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இயக்குநர் விஜய்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

1000 பக்கங்கள் கொண்ட “ஆர் எம் வி ஒரு தொண்டர்” எனும் புத்தகத்தை படிக்க சொன்னார். படித்து வியந்து விட்டேன்.

இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்களா, என ஆச்சர்யகரமாக இருந்தது. என்னால் அவரைப்போல் நடிக்க முடியுமா என பயமாக இருந்தது.

இயக்குநர் விஜய் ஊக்கம் தந்து நடிக்க வைத்தார். எம்ஜிஆரை நான் படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

ஆனால் இப்படத்தில் 15 நாள் அவர் கூடவே இருந்தது போல் இருந்தது.

நண்பர் அரவிந்த்சாமி அவரை தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ளார். சிறு சிறு விசயங்களிலும் மெனெக்கெட்டு உழைத்தார்.

கங்கனா ஜெயலலிதா அம்மாவின் ஆவி புகுந்தது போல் செய்திருக்கிறார். நிச்சயம் அவரது உழைப்பு பாராட்டு பெறும்.

நான் இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என்றால், அதற்கு இயக்குநர் விஜய் தான் காரணம். அவர் துளித்துளியாக படத்தை செதுக்கியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியதாவது..

முதலில் கங்கனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தேசிய விருது பெற்றிருக்கிறார். அடுத்த வருடம் இப்படத்திற்காகவும் விருதை பெற வாழ்த்துக்கள்.

பாடலாசியராக மட்டுமல்லாமல் திரைக்கதையிலும் பட உருவாக்கத்திலும் பணிபுரிந்தது புது அனுபவமாக இருந்தது. இப்படத்தின் திரைக்கதைக்காக விஜயேந்திர பிரசாத் உடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்.

திரைக்கதை பற்றிய அவரது பார்வை, நிறைய கற்று தந்தது. இந்த மாதிரி கதைகள் செய்யும்போது எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும் ஆனால் இயக்குநர் விஜய் தெளிவாக இருந்தார்.

ஜெயலலிதா அவர்களின் வாழ்வின் நல்ல தருணங்களை சொல்லப் போகிறோம் என்றார். கங்கனா இப்படத்தில் மிகப்பெரும் பணியை செய்துள்ளார்.

எல்லோருக்கும் அவர் இந்த பாத்திரத்தை செய்ய முடியுமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் படம் பார்த்த போது அந்த தடைகள் அனைத்தையும் உடைத்து மிக சிறப்பாக செய்துள்ளார்.

அரவிந்த் சாமி இப்படத்திற்காக மிகப்பெரும் உழைப்பை தந்திருக்கிறார். படத்தில் ஒவ்வொருவருமே கடுமையான உழைப்பை தந்துள்ளார்கள். படம் பிரமாண்டமாக வந்துள்ளது. இப்படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி.

இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ் பேசியதாவது…

தலைவி இந்திய சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். மிகப்பெரும் ஆளுமைகள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தின் இசை ஒரு காலகட்டத்தை சொல்வதாக இருக்கும். அந்த காலகட்டத்தை இசையில் கொண்டுவர முயற்சித்துள்ளேன். ஜெயலலிதா அம்மாவிற்கு ஒரு தனி இசை தொகுப்பை உருவாக்கியிருக்கிறேன். உங்கள் அனைவரும் பிடிக்கும் என நம்புகிறேன்.

திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் பேசியதாவது…

தலைவி எனக்கு ஒரு மிகச்சிறப்பான பயணமாக இருந்தது. படத்தை பற்றி அவர்கள் தந்த தகவல் தொகுப்புகள், பிரமிக்க தக்க வகையில் இருந்தது.

நடிகை கங்கனா எனக்கு ஜெயலலிதா பற்றி அதிகம் தெரியாது, நான் எப்படி தயாரவது என்று கேட்டார்.

நீங்கள் நீங்களாக இருங்கள் போதும் என்று சொன்னேன். யாருக்கும் தலைவணங்காத, சுயமதிப்பு கொண்ட, இரும்பு பெண்மணி ஜெயலலிதா. கங்கனாவும் அதே போன்றவர் தான். தேசிய விருதை வென்றுள்ளார் தலைவி படத்தலைப்பு போல் ஒரு நாள் அவரும் தலைவியாக வாழ்த்துக்கள்.

இயக்குனர் விஜய் கூறியதாவது

இப்படத்திற்காக இரு வருடங்கள் முன் தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது, சிறு தயக்கம் இருந்தது. பின்னர் இப்படம் செய்ய வேண்டும் என ஒப்புகொண்டேன்.

எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் அவர்களுடன் வேலை செய்தது, மீண்டும் பள்ளி செல்வது போல், மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். அரவிந்த் சாமி அவர்கள் நடித்தது படத்திற்கு மிகப்பெரிய பலம், அவருடைய உழைப்பின் மூலம் இந்த படத்தை மிகவும் சிறப்பாக ஆக்கியுள்ளார்.

ஜீவி எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போல, அவருடைய பங்கு இந்த படத்தில் மிகப்பெரியது, அவருடைய பாடல்கள் இந்த படத்தில் பெரிதாக பேசப்படும். மதன் கார்க்கி, அஜயன் பாலா இருவரும் இந்த படத்தில் பெரும் பங்கு வகுத்துள்ளனர்.

பாக்கியஸ்ரீ, தம்பி ராமையா, மதுபாலா மூவரும் அவர்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமுத்திரகனி அவர்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி. இணை தயாரிப்பாளர்கள் திருமல், ரித்தேஷ், சைலாஷ் அவர்களுக்கு நன்றி.

நான்கு தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா அவர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி, அவருடைய திறமை அளப்பறியது, கதையினை உணர்ந்து நடிப்பார்.

எடை கூடுதல், குறைப்பது என இப்படத்தில் அவரது பங்கு அதிகம். அரசியல் கதையாக பார்க்காமல், ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக வெற்றி பெற்ற, ஒரு பெரும் ஆளுமையை பற்றிய படமாக இது இருக்கும்.

நடிகர் அரவிந்த் சாமி பேசியதாவது….

ஒன்றறை வருட பயணம் இது. இம்மாதிரியான படத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து எனக்கும் வாய்ப்பு தந்தற்கு, தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இப்படத்தில் வரும் அனவைருமே, வரலாற்று நாயகர்கள்.

இப்படிபட்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. இப்படத்தில் மிகப்பெரும் ஆளுமைகள் ஒன்றிணைந்து பணியாற்றீயுள்ளார்கள் அவர்களால் தான் இப்படம் சாத்தியமாகியுள்ளது.

கங்கனா அற்புதமாக நடித்துள்ளார். சமுத்திரகனி, தம்பி ரமையா, நாசருடன் பணிபுரிந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் இப்படத்தில் நடிக்க நான் கஷ்டப்பட்டு உழைத்ததாக கூறினார்கள்.

ஒரு கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டும் என்று நமக்கு முதலிலேயே தெரியும் அதை செய்ய வேண்டியது நம் கடமை. நான் இஷ்டப்பட்டு மகிழ்சியுடன் தான் இப்படத்தை செய்தேன் படம் நன்றாக வந்துள்ளது.” நன்றி

Famous tamil actor praises Arvind Swamy and Kangana at Thalaivi trailer launch

ExJh79BW8AExCPY

More Articles
Follows