தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் இசை விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மேடை ஏறி பேசும் போது…
“நான் இன்னும் ஜெயிலர் படத்தை பார்க்கவில்லை.. ஆனால் பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னுடைய தாத்தா ரஜினி ரசிகர் தான். அது போல என்னுடைய மகளும் ரஜினி ரசிகை தான்.. ஐந்து தலைமுறைகளாக ரசிகர்களை வைத்திருப்பவர் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டி இருக்கு.. விஜய் சொன்ன மாதிரி தான்.. அவருக்கு போட்டி அவர்தான்.. சிவாஜி கணேசனுக்கு போட்டி சிவாஜி கணேசன் தான்.
நெல்சன் மற்றும் அனிருத்தின் டைமிங் சூப்பர்.. அவர்கள் இருவரும் சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும்.”
இவ்வாறு கலாநிதி மாறன் பேசினார்.
Kalanithimaaran speaks about Super Star Rajini