சூர்யா தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ பட ‘காசு’ பாடல் இணையத்தில் வைரல்

சூர்யா தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ பட ‘காசு’ பாடல் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் (RARA) வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், Amazon Prime Video இப்படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளது.

ஸ்ட்ரீமிங் சேவை மூலம் வெளியிடப்பட்ட இப்பாடல் திரைப்படத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை நமக்குத் தருகிறது.

காசு என்று தலைப்பில் வே. மதன்குமார் எழுதிய இப் பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார் இந்தப் பாடலுக்கு அறிமுக இசையமைப்பாளர் கிரிஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இணைப்பு: http://youtu.be/zQ9uMQJxHGc

அரிசில் மூர்த்தி இயக்கிய இத் திரைப்படத்தை
, 2D என்டர்டெயின்மென்ட் எனும் தனது பேனரின் கீழ் சூர்யா தயாரித்துள்ளார், RARA செப்டம்பர் 24, 2021 அன்று பிரத்தியேகமாக Amazon Prime Video – இல் வெளியிடப்பட உள்ளது.

Kaasu from Raame Aandalum Raavane Aandalum goes viral

உயிர்க் கொல்லி நீட் தேர்வை இந்தியாவிலிருந்தே விரட்ட வேண்டும்.. – கமலஹாசன்

உயிர்க் கொல்லி நீட் தேர்வை இந்தியாவிலிருந்தே விரட்ட வேண்டும்.. – கமலஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு குறித்து கமல்ஹாசன் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது…

நீட் ஓர் உயிர்க் கொல்லித் தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை..

நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, இந்தத் தேர்வின் தீவிளைவுகளைப் பட்டியலிடுகிறது.

அதன்படி,
கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் பயின்றோர் மருத்துவராகும் கனவை இத்தேர்வு சிதைக்கிறது.

நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 14.44 சதவீதத்திலிருந்து வெறும் 1.7 சதவீதமாகச் சரிந்துள்ளது.

இது சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான தேர்வு என்பதற்கு இந்த ஒரு புள்ளிவிவரமே போதுமானது.

நீட் தேர்வுக்குப் பிறகு எம்.பி.பி.எஸ் படிப்பில் சி.பி.எஸ்.இ மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள்தான் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

நீட் தேர்வில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் 90% தனியார் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்றவர்கள்.

நீட் தேர்வின் பின்னால் இருப்பது வணிக நோக்கம்தான் என்பது, நான் ஆரம்பம் முதலே சொல்லிவரும் ஒன்று.

இந்தப் புள்ளிவிவரங்கள் அதை உறுதி செய்கின்றன.

நாட்டிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக்கொண்டிருப்பது தமிழகம். இந்தத் தேர்வு நீடிக்குமானால் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு சிதையும்.

நீட் தேர்வு அறிமுகமான பிறகு, தமிழ் வழியில் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது.

உலகம் முழுக்க தாய்மொழிக் கல்வி ஊக்குவிக்கப்பட்டு வரும் சூழலில், நீட் தேர்வு தாய்மொழிக் கல்விக்கு எதிரான மனோநிலையை வளர்க்கிறது.

நகர்ப்புறத்தில் பிறந்த பண வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பினை உருவாக்கும் இந்த அறமற்ற உயிர்க்கொல்லித் தேர்வினை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும்.

உண்மைகளை வெளிக்கொணர்ந்து சட்டப் போராட்டத்திற்கான வழிவகைகளையும் ஆராய்ந்து சொன்ன ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினருக்கு மக்கள் நீதி மய்யம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

இக்குழுவின் பரிந்துரைகளின்படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்..

NEET is very dangerous for students – MNM leader Kamal Haasan

என் வீட்டு கன்னுகுட்டி என்னோட மல்லுகட்டி..; விஜய் இப்படி செய்யலாமா..? விளாசும் நெட்டிசன்கள்

என் வீட்டு கன்னுகுட்டி என்னோட மல்லுகட்டி..; விஜய் இப்படி செய்யலாமா..? விளாசும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மக்கள் இயக்கம் என்ற, தன் ரசிகர் மன்றத்தின் பெயரையோ தன் பெயரையோ
என் அனுமதியில்லாமல் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கூறி அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், அம்மா ஷோபா உள்பட 11 பேர் மீது சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் நடிகர் விஜய்.

அந்த வழக்கு விசாரணை வரும் 27ம் தேதி கோர்ட்டுக்கு வருகிறது.

இதனால் சமூக வலைதளங்களில் விஜய்யை கலாய்த்து வருகின்றனர்.

அப்பா மீதே விஜய் வழக்கு போடுகிறார்.

தன்னை ஒரு பெரிய ஆளாக்கிவிட்ட அப்பாவையே இப்படி வசை பாடலாமா?

என விஜய்யை வச்சி செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

Netizens reactions on Vijay against his parents

‘வலிமை’ பட அஜித் வில்லன் லுக் போஸ்டர் ரிலீஸ்

‘வலிமை’ பட அஜித் வில்லன் லுக் போஸ்டர் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் ஹியூமா குரோஷி, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக தெலுங்குப் படங்களில் நாயகனாக நடித்து வரும் கார்த்திகேயா நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 21 கார்த்திகேயாவின் பிறந்த நாள்.

இதனை முன்னிட்டு கார்த்திகேயாவின் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Valimai team released smashing new poster

மின்னல் வேகத்தில் ‘வெந்து தணிந்தது காடு’.; ஆச்சரியப்பட வைக்கும் சிம்பு

மின்னல் வேகத்தில் ‘வெந்து தணிந்தது காடு’.; ஆச்சரியப்பட வைக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் 2021 தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படத்துடன் மோதுகிறது

இவையில்லாமல் பத்து தல மற்றும் மஹா படங்களும் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

விரைவில் கொரோனா குமார் படத்தில் நடிக்க ஆர்வம் செலுத்து வருகிறார் சிம்பு.

தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா,அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை அடுத்து கெளதம் மேனன்,ரஹ்மான் ஆகியோருடன் சிம்பு இணைவதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்த படத்திற்காக உடல் எடையை 15 கிலோ வரை குறைத்துவிட்டார் சிம்பு.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் 3ஆம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் மும்பையில் தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மின்னல் வேகத்தில் சிம்பு படங்களை ஒப்புக் கொண்டும் முடித்து கொடுத்தும் வருவதால் கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தி வருகிறாராம்.

STR’s Vendhu Thanindhathu Kaadu 2nd schedule successfully wrapped

100 செக்ஸ் வீடியோக்கள் 10 கோடிக்கு விற்பனை..; பாலிவுட்டை பற்ற வைத்த ஷில்பா ஷெட்டி கணவர்

100 செக்ஸ் வீடியோக்கள் 10 கோடிக்கு விற்பனை..; பாலிவுட்டை பற்ற வைத்த ஷில்பா ஷெட்டி கணவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஷில்பா ஷெட்டி.

இவர் மிஸ்டர் ரோமியோ படத்தி பிரபுதேவா உடன் நடித்துள்ளார். மேலும் குஷி படத்தில் கேத்ரீனா என்ற பாடலில் விஜய்யுடன் நடனமாடியுள்ளார்.

கடந்த 2009ல் தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட ஷில்பாவுக்கு தற்போது ஒரு மகன் ஒரு மகள் என இருகுழந்தைகள் உள்ளனர்.

ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார் ஷில்பா ஷெட்டியின் கணவர்.

இந்த நிலையில் ராஜ் குந்த்ரா விசாரணை வழக்கில் அவரைப் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வந்துள்ளன.

“ராஜ் குந்த்ராவின் செல்போன், லேப்டாப், ஹார்ட் டெஸ்க்குகள் ஆகியவற்றில் 100க்குமே மேற்பட்ட செக்ஸ் வீடியோக்‍கள் இருந்ததாகவும், அந்த வீடியோக்களை கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய்க்கு அவர் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக மும்பை குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால், பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

முன்னதாக “எனது வேலையில் நான் பிசியாக இருந்ததால், என் கணவர் ராஜ் குந்த்ரா என்ன தொழில் செய்கிறார் என்பது தனக்கு தெரியாது” என நடிகை ஷில்பா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Business man Raj Kundra walks out of Mumbai jail after bail in adult films case

More Articles
Follows