‘ராஜா மந்திரி’ படத்தில் கலக்கும் சூர்யா-கார்த்தி..!

‘ராஜா மந்திரி’ படத்தில் கலக்கும் சூர்யா-கார்த்தி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaali Venkat and Kalaiyarasan Character Revealedஇயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‛ராஜா மந்திரி’.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தனது பேனரில் தயாரித்துள்ளார்.

கலையரசன் மற்றும் ஷாலின் ஒரு ஜோடியாகவும் காளி வெங்கட் மற்றும் வைஷாலி மற்றொரு ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கிய கேரக்டரில் பாலசரவணன் நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசைமைத்துள்ளார்.

நாளை வெளியாகவுள்ள இப்படத்தில் காளி வெங்கட் மற்றும் கலையரசன் இருவரும் அண்ணன் தம்பிகளாய் நடித்துள்ளனர்.

இதில் காளியின் கேரக்டர் பெயர் சூர்யா. கலையரசனின் கேரக்டர் பெயர் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

ரெமோவை உருவாக்கிய ஷங்கருடன் இணைந்த சிவகார்த்திகேயன்..!

ரெமோவை உருவாக்கிய ஷங்கருடன் இணைந்த சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Shankar to Launch 1st Look of Sivakarthikeyan's 'Remo'பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஓரிரு தினங்களுக்கு முன், படத்தின் பர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோ வெளியானது.

நாளை ஜூன் 23ஆம் தேதி ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பாடலான ‘ரெமோ நீ காதலன்’ ஆகிய பாடலை வெளியிடுகின்றனர்.

இதனை அந்நியன் படத்தில் ரெமோ கேரக்டரை உருவாக்கிய இயக்குனர் ஷங்கர் வெளியிடவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஜூலை 1ஆம் தேதி சிங்கப்பூரில் SIIMA விருது வழங்கும் விழாவில் ‘செஞ்சிட்டாளே’ சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் வருகைக்காக காத்திருக்கும் தாணு-ஷங்கர்..!

ரஜினியின் வருகைக்காக காத்திருக்கும் தாணு-ஷங்கர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

When will Rajini Return to Home?- Important Updateபொதுவாக ரஜினி படம் வரும் தேதியைத்தான் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.

தற்போது ரஜினி வரும் நாளையே எதிர்பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஓய்வுக்காக ரஜினி அமெரிக்கா சென்றதும், அதன்பின்னர் அங்கு 2.0 பட வேலைகளிலும் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

இதனிடையில் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியதால் தற்போது ரஜினியின் இந்தியா வருகையை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

முக்கியமாக தயாரிப்பாளர் தாணுவும், இயக்குனர் ஷங்கர் எதிர்நோக்கி உள்ளனர்.

ஜூலை 3 ஆம் தேதி சென்னை திரும்புவார் ரஜினி என கூறப்படுகிறது.

ரஜினி வந்தபிறகுதான் ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என காத்திருக்கிறாராம் தாணு.

அதுபோல் ரஜினி வந்தவுடன் ‘2.0’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க காத்திருக்கிறார் ஷங்கர்.

இதெல்லாம் ஒரு பாட்டு..? தெறி, வேதாளம் குறித்து கங்கை அமரன்..!

இதெல்லாம் ஒரு பாட்டு..? தெறி, வேதாளம் குறித்து கங்கை அமரன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Composer Gangai Amaran Criticizing Thala Thalapathy Songsஇசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவர் கங்கை அமரன்.

தற்போது டிவி ரியால்ட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வருகிறார்.

மேலும் திரைப்படத் தணிக்கைக் குழு அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.

அண்மையில் ஒரு ஊடக பேட்டியில் இப்போது வரும் பாடல்களை குறித்து விமர்சித்து உள்ளார்.

அதில்… “முக்கியமாக அஜித்தின் வேதாளம் படத்திலுள்ள ஆலுமா டோலுமா என்ற பாடலையும் விஜய்யின் தெறி படத்திலுள்ள ஜித்து ஜில்லாடி பாடலையும் குறிப்பிட்டுள்ளார்.

இதெல்லாம் என்ன பாட்டு? புரியாத வார்த்தைகளைக் போட்டு தமிழை அழிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சூட்டிங்கில் கேட் வெட்டி கொண்டாட்டம்… விஜய்யை வாழ்த்திய கீர்த்தி.!

சூட்டிங்கில் கேட் வெட்டி கொண்டாட்டம்… விஜய்யை வாழ்த்திய கீர்த்தி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Celebrates his Birthday Along with Thalapathy60 Crewஇளைய தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய், இன்று தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனையொட்டி தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களும், திரையுலக கலைஞர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இன்று அவர் பரதன் இயக்கும் விஜய் 60 படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

அங்குள்ள படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

இயக்குநர் பரதன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது மனைவியுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிறந்தநாள் அன்று விஜய் சென்னையில் இல்லாதது குறித்து அவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் கூறியதாவது…

“விஜய் இங்கு இல்லாவிட்டாலும் நாங்கள் எந்தவித விளம்பரமும் இன்றி, ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அன்னதானம் உள்ளிட்ட சேவைகள் செய்து வருகிறோம்.” என்றார்.

விஜய் பற்றி எஸ்ஏசி, சூர்யா, தரணி, பரதன் சொன்னது என்ன?

விஜய் பற்றி எஸ்ஏசி, சூர்யா, தரணி, பரதன் சொன்னது என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAC Sj Suriya Dharani and Bharathan Speech About Vijayவிஜய்யுடன் பணிபுரிந்த கலைஞர்கள் விஜய் பற்றிய தங்கள் கருத்துக்களை அவரது பிறந்த நாள் ஸ்பெஷலாக சமீபத்தில் தெரிவித்தனர்.

இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்ஜே சூர்யா, தரணி மற்றும் பரதன் ஆகியோர் விஜய் பற்றிய தெரிவித்துள்ளதை பார்ப்போம்.

விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாவது…

“விஜய் நடித்த துப்பாக்கி ரொம்ப பிடிக்கும். அவர் நினைத்ததை எல்லாம் அமைதியாக சாதித்து வருகிறார்.

அவர் எல்லா வேடங்களில் நடிக்க வேண்டும். ஆனால் ஒரு கமர்ஷியல் ஹீரோவையே அவர் அதிகம் விரும்புகிறார்” என தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா கூறியுள்ளதாவது…

அவருடைய அர்ப்பணிப்பும் எளிமையும் பிடிக்கும். அவர்தான் ரியல் ஸ்டார்.

அவரிடம் எந்தவொரு குறைபாடும் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.

தரணி கூறியதாவது…

விஜய் ஒரு சிறந்த மனிதர். அவரது காதலுக்கு மரியாதை படம் எனக்கு பிடிக்கும்.

ஆனால் பாட்ஷா போன்ற ஆக்ஷன் படங்களை செய்ய வேண்டும். அவர் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்.

பரதன் கூறியுள்ளதாவது…

விஜய்யின் எளிமை பிடிக்கும். அவரது கில்லி படம் ரொம்ப பிடிக்கும். அவர் சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும்” என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

More Articles
Follows