தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் நான்கு திரைப்படத்தை ஒடிடி தளத்தின் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.
அதன்படி ’ஜெய்பீம்’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ‘ உடன்பிறப்பு ‘, ‘ ஓ மை டாக் ‘ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளது.
இதில் ஒன்றான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் ஓடிடியில் ரிலீசாகிவிட்டது.
மற்றொரு படமான ‘உடன்பிறப்பு’ படம் ஜோதிகாவின் 50 வது படமாக தயாராகி உள்ளது.
இந்தப் படத்தில், அதிகம் நடித்திராத கிராமத்து வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.
மாதங்கியும், வைரவனும் உடன்பிறப்புகள்.
மாதங்கியின் கணவன் சற்குணத்தால் இவர்கள் உறவில் விரிசல் விழுகிறது.
அண்ணனா, கணவனா என்ற இரு துருவங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு தவிப்பவராக மாதங்கியின் கேரக்டர் எழுதப்பட்டுள்ளது.
இதில் மாதங்கியாக ஜோதிகாவும், உடன்பிறந்த சகோதரன் வைரவனாக சசிகுமாரும், மாதங்கியின் கணவன் சற்குணமாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.
முக்கிய வேடத்தில் சூரி நடித்துள்ளார்.
இமான் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் படம் தயாராகி உள்ளது.
சரவணன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
இவர் 2015ல் வெளியான கத்துக்குட்டி படத்தை இயக்கியவர்.
இந்த நிலையில் வருகிற அக்டோபர் 14ல் ஆயுதபூஜை ஸ்பெஷலாக அமேசானில் ‘உடன்பிறப்பு’ வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
Jyothika’s next film release date announced