‘ராதே ஷியாம்’ பட 4 மொழி பதிப்பிற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகர்

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இசையமைப்பாளர்கள் ‘ராதே ஷியாம்’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்கள்

ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ‘ராதே ஷியாம்’-ன் ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், அது குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

இசை என்பது ஒரு திரைப்படத்தின் அடிநாதமாக விளங்குவதாலும், ‘ராதே ஷியாம்’ பன்மொழிப்படமாக உருவாகி வரும் காரணத்தாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான இசையமைப்பாளர்களை ‘ராதே ஷியாம்’ படக்குழு ஒன்று திரட்டியுள்ளது.

இந்திய சினிமா இதுவரை கண்டிராத வகையில், இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாகவும், வித்தியாசமாகவும், விருந்து படைக்கும் வகையிலும் இருக்கும்.

இப்படத்தின் இந்தி பதிப்பிற்கும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பதிப்பிற்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர்.

பாடல்கள் வேறாக இருந்தாலும், அவை வெளிப்படுத்தும் உணர்வுகள் ஒரே மாதிரியாக இருக்கும்.

இந்த வித்தியாசமான முயற்சிக்கு நடிகர்கள் உட்பட அனைவரும் முழுமையாக ஒத்துழைத்த காரணத்தால், பாடல்கள் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக படமாக்கப்பட்டன.

‘ராதே ஷியாமின்’ இந்தி பதிப்பிற்கு மிதுன் இரு பாடல்களுக்கும், மனன் பரத்வாஜ் ஒரு பாடலுக்கும் இசையமைத்துள்ளனர். பிரபல கவிஞர்களான குமார் மற்றும் மனோஜ் முன்தஷிர் ஆகியோர் பாடல்களை இயற்றியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பதிப்பிற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, கிருஷ்ண காந்த் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிக்கின்றனர்.

Justin Prabhakar to Score the 4 Versions of Radhe Shyam

Overall Rating : Not available

Related News

Latest Post