‘ராதே ஷியாம்’ பட நடிகர் ‘ரிபல் ஸ்டார்’ கிருஷ்ணம் ராஜூ காலமானார்

‘ராதே ஷியாம்’ பட நடிகர் ‘ரிபல் ஸ்டார்’ கிருஷ்ணம் ராஜூ காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் நாயகனாக நுழைந்தவர் கிருஷ்ணம் ராஜு.

பின்னர் பிற்காலத்தில் வில்லனாகவும் நடித்து வந்தார். நடிப்பிற்கான நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

அண்மையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ராதே ஷியாம்’ படத்திலும் நடித்திருந்தார்.

தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு சினிமாவின் ‘ரிபல் ஸ்டார்’ என அறியப்படுகிறார்.

மத்திய அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கிருஷ்ணம் ராஜூ உயிரிழந்தார்.

ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

கிருஷ்ணம் ராஜூவின் இறுதிச் சடங்குகள் நாளை நடக்கும். இவரது மறைவு தெலுங்கு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரிபல் ஸ்டார் மறைவுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘ஓ மை கோஸ்ட்’ வந்தால் சன்னி லியோனை தமிழ் சினிமா கொண்டாடும்

‘ஓ மை கோஸ்ட்’ வந்தால் சன்னி லியோனை தமிழ் சினிமா கொண்டாடும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’.

இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ‘ஸ்டைலிஷ் தலைவி’ சன்னி லியோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார். இவர் ‘மாநகரம்’, ‘யார் இவர்கள்’ உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான தீபக்மேனன் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார். சண்டைக் காட்சிகளை ‘கில்லி’ சேகர் வடிவமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பை அருள் சித்தார்த் ஏற்றுள்ளார். கலை இயக்குநர்களாக ராம்-ரமேஷ் பணியாற்றுகிறார்கள்.

பிரபல பாலிவுட் நடன கலைஞர் விஷ்ணு தேவா நடன காட்சிகளை அமைத்துள்ளார்.

D.வீரசக்தி, K.சசிகுமார் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் R.யுவன். இவர் ஏற்கனவே ‘சிந்தனை செய்’ என்ற படத்தை நடித்து இயக்கியவர்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் வீரசக்தி மற்றும் சசிகுமார் கூறியதாவது…

“அதிக பொருட்செலவில் இந்தப் படத்தை நாங்கள் தயாரித்து உள்ளோம். வரலாற்று பின்னணி படம் என்றாலே பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தை நாங்கள் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளோம்.

பாலிவுட் ஸ்டார் சன்னி லியோன் ஒரு மிகப்பெரிய நடிகை. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

அதனால் வெளிப்புற படப்பிடிப்பு என்பது சாத்தியம் இல்லாத ஒரு விஷயமாக இருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை மும்பையில் பல அரங்குகளை அமைத்து படமாக்கினோம்.

தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் அவரை நடிக்க அழைத்தபோது அவர் ஏன் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று அவரை நேரில் சந்தித்தபோது
தெரிந்தது.

இந்தப் படத்தின் கதையை கேட்கும்போது எங்களுடைய நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் அவருக்கு பிடித்திருந்த காரணத்தினால் உடனே நடிக்க சம்மதித்தார்.

படப்பிடிப்புக்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்ததோடு படத்தின் எல்லா விதமான புரமோஷனுக்கும் வருவதாக சொல்லி இருக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு சன்னி லியோனை தமிழ் சினிமா கொண்டாடும்” என்றார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் R.யுவன் கூறியதாவது…

“இது ரசிகர்களை முழுக்க முழுக்க மகிழ்விக்கும் படமாக இருக்கும். இதில் புதிய அம்சம் என்ன இருக்கிறது என்று கேட்டால், வரலாற்று பின்னணியில் உருவான திகில் கதைகள் தமிழில் ஏராளமாக வந்திருக்கிறது. ‘காஞ்சனா’ சீரிஸ் படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

அந்த வகையில் இந்தப் படம் திகில் படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும். அதற்காக திரைக்கதையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம்.

இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக ராணி கதாபாத்திரம் வருகிறது. நிறைய ராணி கதைகளை நாம் பார்த்திருக்கிறோம். இந்த ராணி சற்று வித்தியாசமாக இருப்பார்.

ராணி கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று யோசித்தபோது சன்னி லியோன் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. கதை எழுதும் போதும் அவர்தான் என்னுடைய முதல் தேர்வாக இருந்தார்.

சன்னி லியோனை மும்பையில் சந்தித்து கதை சொன்னேன். அப்போது அவர் சொன்ன முதல் நிபந்தனை ‘எனக்கு ஆங்கிலத்தில் கதை சொல்ல வேண்டும்’ என்றார்.

அதற்காக நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் கதை சொன்னேன்.

அவருக்கு புரிந்ததா, புரியவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் நான் கதை சொல்லும்போது ஆர்வத்தோடு ரசித்து கேட்டார்.

அது மட்டுமல்ல, ‘நான் நடித்த படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும்’ என்று சொன்னார்.

படப்பிடிப்பில் அவருடைய முழு ஒத்துழைப்பு கிடைத்தது. காலையில் 9:00 மணிக்கு படப்பிடிப்பு என்றால் அதற்கு முன்பாகவே ஒப்பனை செய்து கொண்டு ஆயத்தமாக வந்து விடுவார்.

ஒருமுறை கேராவேனை விட்டு வெளியே வந்து விட்டால் அன்றைய காட்சிகள் முழுவதையும் நடித்து கொடுத்த பிறகே மீண்டும் கேராவேனுக்குள் செல்வார். ஒரு நாளின் துவக்கத்தில் இருக்கும் அதே உற்சாகம் நாள் முழுவதும் அவரிடத்தில் இருப்பதை பார்க்க முடியும்.

எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அந்த காட்சிக்கு அதிகபட்ச உழைப்பைக் கொடுக்க ஆயத்தமாக இருப்பார்.

யோகி பாபு பிளாஷ்பேக் காட்சிகளில் மன்னர் காலத்தில் வருகின்ற ஒரு மந்திரி கதாபாத்திரம் செய்திருக்கிறார்.

சதீஷ் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். அவருடைய கதாபாத்திரம் மிகவும் புதியதாக இருக்கும்.

இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரமேஷ் திலக், அர்ஜுன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இது முழுக்க முழுக்க ரசிகர்களை மகிழ்விக்கும் படமாகவும் விஷுவலுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடிய படமாக இருக்கும்.

இது பிளாக் காமெடி படமாக இருந்தாலும் குலுங்கி குலுங்கி சிரிக்கும்படியான நகைச்சுவை காட்சிகள் அதிகம் இடம்பெற்ற படமாக இருக்கும்” என்றார்.

#OhMyGhost Teaser #OMGTeaser

#OhMyGhost #OMG @sunnyleone @actorsathish @iyogibabu @dharshagupta @yuvan_dir @thilak_ramesh @arjunannk @thangadurai123 @javeddriaz @dharankumar_c @deepakdmenon @editorsiddharth Producers #DVeeraSakthi @sasikumarwhs @WhiteHorseOffl @vonimusic

ஓடிடி-க்கான படங்களை தியேட்டருக்கு தூக்கிக் கொண்டு ஓடாதீர்கள் – ஆர்கே சுரேஷ்

ஓடிடி-க்கான படங்களை தியேட்டருக்கு தூக்கிக் கொண்டு ஓடாதீர்கள் – ஆர்கே சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அவர்களின் நல்லாசியுடன் ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ் பெருமையுடன் வழங்கும், 5E கிரியேஷன்ஸ் மற்றும் ஜெசாரா மீடியா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

விஜயகாந்தை வைத்து “கண்ணுபடப் போகுதய்யா” என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் துவக்கவிழா பூஜை இனிதே நடைபெற்றது.

இந்த நிகழ்வில், இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி, சாம்ஸ், டேனியல் ஆனி போப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ் பேசும்போது…

“சென்னை சிட்டியும் மதுரை நேட்டிவிட்டியும் கலந்த ஒரு நல்ல கதையம்சத்துடன் இந்த படத்தை இயக்குகிறேன். இந்த கதைக்கு ஆர்.கே.சுரேஷ் தான் பொருத்தமாக இருந்தார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்தப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்..

படத்தின் நாயகன் ஆர்கே சுரேஷ் பேசும்போது…

“இயக்குநர் பாரதி கணேஷ் என் தந்தை காலத்தில் இருந்தே எனக்கு நெருக்கமானவர். எப்படி விஜயகாந்த்தின் வெற்றிக்கு அவர் முதுகெலும்பாக இருந்தாரோ, அதேபோல தான் எனக்கும். அவர் சொன்ன மூன்று கதைகளில் இந்த கதை ரொம்ப பிடித்திருந்ததால் முதலில் இதை படமாக்க தீர்மானித்தோம்.

இந்த படத்தை எப்படியும் வெற்றிப்படமாக்க வேண்டும் என ஒரு வெறியுடன் இருக்கிறார் இயக்குநர் பாரதி கணேஷ்.. அதனால் இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றமாதிரி நேட்டிவிட்டியுடன் சிட்டியியுடன் நடக்கும் கதையை உருவாக்கியுள்ளார்..

நான் தற்போது தமிழில் மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். தெலுங்கில் இரண்டு படங்களில் வில்லனாகவும் மலையாளத்தில் ஒரு படத்திலும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறேன்.

குறிப்பாக தெலுங்கில் சூப்பர்ஸ்டார் நடிகர் ஒருவரின் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறேன். இயக்குநர்கள் பாலா, முத்தையா ஆகியோர் கொடுத்த பயிற்சிதான் இந்த அளவுக்கு நான் ஒரு நடிகராக வளர காரணம்.

நான் நடித்த ‘விசித்திரன்’ படம் கிட்டத்தட்ட அமேசான் பிரைமில் ஒருகோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நான் தயாரித்த ‘மாமனிதன்’ திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டபோது இரண்டரை கோடி ரூபாய் தான் கிடைத்தது.

ஆனால் அதுவே ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியிட்டபோது 64 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்தவகையில் கிட்டத்தட்ட 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆஹா தமிழ் ஓடிடி தளத்திலேயே அதிக வசூல் செய்த படம் அதுதான்.

என்னிடம் படம் ரிலீஸ் செய்யச்சொல்லி வருபவர்களிடம் படத்தை பார்த்ததும் நானே சில படங்களை தியேட்டருக்கு வேண்டாம், ஓடிடிக்கு கொடுத்து விடுங்கள் என சொல்லிவிடுகிறேன்.. ஏனென்றால் ஓடிடிக்கு என எடுக்கும் படத்தை தியேட்டருக்கு தூக்கிட்டு போகக்கூடாது.

படம் எடுக்கும்போதே எதில் திரையிட போகிறோம் என்பதை முடிவு செய்துவிட வேண்டும்.. இங்கே எட்டு நடிகர்களுக்கு மட்டும் தான் தியேட்டர்களில் நல்ல புக்கிங் மற்றும் ஓப்பனிங் இருக்கிறது.

மாதாமாதம் எனது நிறுவனத்தின் வெளியீடாக ஒரு படமாவது வெளியாகிக்கொண்டுதான் இருக்கிறது சமீபத்தில் வெளியான ‘லைகர்’ படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் தமிழகத்தின் ரிலீஸ் செய்தேன்.

ஆனால் அது ஓரளவுக்குத்தான் போனது. ஓடிடி கன்டெண்டா? தியேட்டர் கன்டெண்டா? எனப் பார்த்து ஒரு படத்தை வெளியிட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம் எனக் கூறினார்.

நடிகர் ராதாரவி பேசும்போது…

‘இந்த படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ் உண்மையையும் விசுவாசத்தையும் மறக்காத ஒரு நபர். அவர் இயக்கிய “கண்ணுபடப் போகுதய்யா” படத்தில் நடித்திருந்தேன்..

தான் உருவாக்கும் எல்லா கதைகளிலும் எனக்கென ஒரு பாத்திரம் இருக்கும்படி எப்போதுமே கதையை உருவாக்குவார். நான் அவரிடம் கதை எல்லாம் கேட்கவில்லை. கதை கேட்பது,.. ஃபைல் பார்ப்பது இதெல்லாம் தவறான பழக்கம்..

ஆர்.கே.சுரேஷ் படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் வேண்டும் என எப்போதும் நான் உரிமையுடன் கேட்பேன். தவிர இந்த படத்தின் மூலமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு இஸ்லாமிய தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் நடிக்கிறேன்.

அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் ஒரு படத்தில் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் இந்த நிகழ்வில் ஒரு நடிகராக இல்லாமல், குடும்பத்தில் ஒருத்தனாக வந்து கலந்து கொண்டுள்ளேன்.

படத்தயாரிப்பில் முன்பெல்லாம் ஒப்பந்தமும் சம்பளமும் வாக்குறுதியும் வாய் வார்த்தையாக இருந்தவரை சினிமா நல்லபடியாக இருந்தது. எப்போது கார்ப்பரேட் உள்ளே நுழைந்து நூறு பக்கங்களுக்கு மேல் கையெழுத்து வாங்க ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே அது கார் வியாபாரத்தை விட மோசமாகி விட்டது” என்று கூறினார்.

நடிகர் டேனி பேசும்போது…

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ஹீரோவுக்கு சமமாக எனக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து போஸ்டர்களை வெளியிட்டு எனக்கு நல்ல அறிமுகம் கிடைக்க உதவியவர் ஆர்கே சுரேஷ்.. அவருடன் முதல் முறையாக இந்த படத்தில் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி.. ராதாரவியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு கணக்கு வாத்தியார் போலவே தோன்றும் அந்த அளவுக்கு அவர் மீது பயம்” என்று கூறினார்.

எஸ் எம் டி ஷேக் ஃபரீத், கே. ஷேக் ஃபரீத் இணைந்து தயாரிக்க, தயாரிக்கிறார் ஹரீஷ் முத்தையாலா ஷெட்டி. எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராக எஸ். அபூபக்கர் பணியாற்ற .. எடிட்டிங் செய்கிறார் கோபிநாத். மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Radha Ravi

வெற்றி – ஷிவானி இணைந்த ‘இரவு’ விடியலுக்கு (ரிலீசுக்கு) ரெடியானது

வெற்றி – ஷிவானி இணைந்த ‘இரவு’ விடியலுக்கு (ரிலீசுக்கு) ரெடியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

M10 Productions சார்பில், தயாரிப்பாளர் MS முருகராஜ் தயாரிப்பில் பக்ரீத் படப்புகழ் இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், ‘எட்டு தோட்டக்கள், ஜீவி’ படப்புகழ் நாயகன் வெற்றி, பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நடிக்கும், கோஸ்ட் திரில்லர் டிராமா திரைப்படமான “இரவு” படத்தின் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் வெற்றி, தரமான படங்களை தந்து பாரட்டுக்களை குவித்த இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் “இரவு”. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நாயகியாக நடிக்கிறார்.

வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது.

அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே, இந்தத் திரைப்படம். பல பேய்க்கதைகள் வந்திருந்தாலும், இப்படம் உணர்வுகளை மையமாக கொண்டு, பரபரப்பான திரைக்கதையில், ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள்னர்.

ஓர் இரவில் நடக்கும் இக்கதை, முழுக்க சென்னை ஈ சி ஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழுவினர்
தயாரிப்பு நிறுவனம் – M10 Productions
தயாரிப்பாளர் – MS முருகராஜ்
இயக்குநர் – ஜெகதீசன் சுபு
ஒளிப்பதிவு – ஸ்ரீனிவாஸ் தயாநிதி
இசை – அரோல் கரோலி
எடிட்டிங் – CS பிரேம் குமார்
கலை – K மதன் குமார்
வசனம் – பாபு தமிழ்
பாடல் வரிகள் – ஞானகரவேல், கார்த்திக் நேதா, கருணாகரன்
ஸ்டண்ட் – ஃபயர் கார்த்திக்
நடனம் – பாபா பாஸ்கர்
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )

Iravu

அதர்வா – தன்யாவின் ‘ட்ரிக்கர்’ கூட்டணியில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன்

அதர்வா – தன்யாவின் ‘ட்ரிக்கர்’ கூட்டணியில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டார்லிங்’, ‘கூர்கா’ படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன்.

இவரது இயக்கத்தில் அதர்வா நடித்த படம் ‘ட்ரிக்கர்’.

இதில் ரகசிய உளவாளியாக அதர்வா நடிக்க அவருக்கு அப்பாவாக அருண் பாண்டியன் நடித்துள்ளார்.

இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், முனிஷ் காந்த உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பாவின் பிரமோத் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்பட ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

திலிப் சுப்புராயன் சண்டைக் காட்சிகளும், ‘ட்ரிக்கர் ட்ரிக்கர்’ பாடலும் கவனம் ஈர்க்கிறது.

இப்படத்திற்கு ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் வசனம் எழுதியுள்ளார்.

‘நெருப்பு மட்டும் தான் வேற ஒண்ண அழிச்சிட்டுதான் வாழும்’ என்ற வசனம் அனலாக இருக்கிறது.

ட்ரைலர் லிங்க் இதோ…

‘வாடிவாசல்’ & ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தொடர்ந்து ஷங்கர் – சூர்யா நாவல் கூட்டணி

‘வாடிவாசல்’ & ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தொடர்ந்து ஷங்கர் – சூர்யா நாவல் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்ஜிஆர் கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகியோர் முயற்சி செய்தும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்க முடியவில்லை என்பது நாம் அறிந்த செய்திதான்.

தற்போது பொன்னியின் செல்வன் நாவலை பிரம்மாண்டமாக திரைப்படமாகியுள்ளார் மணிரத்னம்.

இந்த திரைப்படம் இந்த மாதம் செப்டம்பர் 30ல் வெளியாகிறது.

இந்த நிலையில் இதே போன்று மற்றொரு நாவலை படமாக்க உள்ளார் இயக்குனர் ஷங்கர்.

இதில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளாராம்.

மதுரையில் நடைபெற்ற ‘விருமன்’ பட விழாவில் எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் ஒரு சுவாரஸ்ய பயணம் ஆரம்பித்து விட்டதாக பேசி இருந்தார். எனவே அந்த பயணம் இதுதான் என்பதாக கூறப்படுகிறது.

கூடுதல் தகவல்..

இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் தனுஷ் – வெற்றிமாறன் ஈடுபட்டதாக முன்னதாக கூறப்பட்டது.

தற்போது வெற்றி மாறன் இயக்கி வரும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதுவும் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.

சிவாவுடன் சூர்யா இணையும் படமும் 3டி-யில் சரித்திரப் படமாக உருவாகி வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

More Articles
Follows