என் லைஃப்ல எனக்கு கிடைச்ச ஜாக்பாட் ஜோதிகா தான்.. – சூர்யா

என் லைஃப்ல எனக்கு கிடைச்ச ஜாக்பாட் ஜோதிகா தான்.. – சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Jothika is my life time Jackpot says Suriya2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது.

விழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியதாவது,

“இந்தப்படத்தில் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் சாருக்கு நன்றி. ஒரு சின்ன வேலை சொன்னாலும் அதற்கான ரிப்ளே உடனே கொடுப்பார். ஜாக்பாட் ட்ரைலரைப் பார்த்த அனைவரும் ரஜினி சார் படத்தின் ட்ரைலர் போல இருக்கிறது என்றார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கு” என்றார்

ஒளிப்பதிவாளர் ஆனந்த் பேசியதாவது,

“படம் ரொம்ப ஜாலியா இருந்தது. கிரேன்ல இருக்கும் போது சூட்டிங்கில் பலமுறை சிரித்து இருக்கிறோம். ஜோதிகா மேடத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். ரொம்ப நிதானமா இருப்பாங்க. அவர்களிடம் இருந்து நிறைய கத்துக்கணும். நான் கேட்ட எக்கியூப்மெண்ட்ஸ் எல்லாத்தையும் கொடுத்தாங்க. சூர்யா சாரும் படத்தை நல்லா பாராட்டி இருக்கிறார்” என்றார்

ஸ்டண்ட் மாஸ்டர் ராக்பிரபு பேசியதாவது,

“இயக்குநர் கல்யாணம் சார் வேகத்திற்கு ஈடு கொடுக்கவே முடியாது. என்னிடம் முதலில் இது காமெடி படம் என்று தான் சொன்னார்கள். ஆனால் ஒரு ஆக்‌ஷன் படம் அளவிற்கு சண்டைக்காட்சிகள் அமைந்துள்ளது” என்றார்

காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா பேசியதாவது,

“இது எங்களுக்கு பேமிலி புரொடக்சன் டே நைட் ப்ரேக் இல்லாமல் படத்தை முடித்துள்ளார் இயக்குநர் கல்யாண். ஜோதிகா மேடம் டூப் ஆக்டரை பைட் செய்யவே விடவில்லை. டூப் ஆர்ட்டிஸுக்காக நாங்கள் எடுத்து வரும் காஸ்ட்யூம் சும்மா தான் இருக்கும். அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து மிகச் சிறப்பாக ஜோதிகா மேடம் நடித்துள்ளார்” என்றார்

நடிகை தேவதர்ஷனி பேசியதாவது,

“படத்தில் கல்யாண் சார் எனக்கு இத்தூனுண்டு கேரக்டர் தான் கொடுத்தார். ஆனால் அது செம்ம க்யூட்டான சீக்வென்ஸ். இந்தப்படத்தில் வொர்க் பண்ணது ஜாலியாக இருந்தது” என்றார்

நடிகர் ஜெகன் பேசியதாவது,

“இந்தப்படத்தில் எனக்கு மிக முக்கியமான ரோல். கண் சிமிட்டுவதற்குள் பார்த்து விடுங்கள். இல்லை என்றால் அதற்குள் அந்த சீன் முடிந்துவிடும். நான் நடித்த ரெண்டுநாளும் ரொம்ப என்சாய் பண்ணேன். ஜோதிகாவுக்கு தகுதியான படம் இது. ரொம்ப இதயப்பூர்வமான லேடி ஜோதிகா. தாமரை எழுதிய ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமானவர் ஜோதிகா. தவமே பெற்றவரம் சூர்யா. அவருக்கு நிறம் கொடுத்தவர் ஜோதிகா” என்றார்

நடிகர் தங்கதுரை பேசியதாவது,

“சூர்யா சாரை நேர்ல பாக்க சந்தோஷமா இருக்கு. 30 நாள்ல ஆங்கிலம் படிப்பது எப்படின்னு சொல்வாங்க இல்லியா? அதை மாதிரி 30-நாள்ல படம் எப்படி எடுக்கணும்னு இயக்குநர் கல்யாண் சாரிடம் கத்துக் கொள்ள வேண்டும். சூர்யா சார் தயாரிப்பில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்றார்

நடிகர் அஸ்வின் பேசியதாவது,

“2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் ஒர்க் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.

நடிகர் டேனி பேசியதாவது,

“இந்த ஜாக்பாட் படத்தில் நான் நிறைய கத்துக்கிட்டேன். நான் நான்கு படத்தில் தான் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு புரொடக்சன் கம்பெனியை நான் பார்த்ததே இல்லை. சாப்பாடு விசயத்தில் மிகச் சிறப்பாக கவனிப்பார்கள். சுகர்லாம் இல்லாமல் நாட்டுச் சக்கரை தான் கொடுப்பார்கள். ஜோதிகா மேடம் போல ஒரு ஆக்‌ஷன் ஹீரோ பைட் செய்வாரா என்பதே சந்தேகம். கல்யாண் அவர்கள் மனிதரா இல்லை ரோபோவா என்று தெரியாதளவில் வேலை செய்கிறவர்” என்றார்

சிங்கர் பிருந்தா பேசியதாவது,

“இந்தப்படத்தின் பாடல்களை மிக என்சாய் பண்ணிப் பாடினோம். நான் பாடும்போது ஆடிக்கொண்டே பாடினேன்” என்றார்

பாடகர் ஆண்டனி தாசன் பேசியதாவது,

“நிறைய விருதுகள் நான் வாங்குவதற்கு காரணம் சூர்யா சார் தான். நான் இப்படத்தில் ஒரு சின்ன பாடல் தான் பாடியுள்ளேன். மேலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளேன்” என்றார்

பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்,

“பாட்டெழுதி முடித்ததும் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு என்று கோ புரொடியூசர் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் சார் போன் பண்ணி சொன்னார். முதல் முதலாக பாட்டெழுதிய உடனே ஒரு தயாரிப்பு நிறுவனம் சார்பில் போன் பண்ணிய வாழ்த்தியது 2D எண்டெர்டெயின்மெண்ட்-ல் தான்.
நான் சூர்யா சாரின் ஆயுத எழுத்து படத்தைப் பார்த்த பின் தான் இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஜோதிகா மேடத்தின் ரசிகன் நான். சூர்யா சார் எல்லோரும் பேசத்தயங்கும் விசயங்களை தைரியமாகப் பேசினார். அவர் பேசியதை நாம் வழி மொழிந்து பேச வேண்டும்” என்றார்

பாடலாசிரியர் கார்த்தி பேசியதாவது,

“நம் எண்ணங்களுக்கு ஒரு பவர் உண்டு. ஒவ்வொரு நல்ல எண்ணத்திற்கும் ஒரு கதவு திறக்கும். இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்” என்றார்

பாடலாசிரியர், பேசியதாவது

இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசியதாவது,

“2D எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் என்னிடம் படத்திற்காக கேட்டதே சந்தோஷமாக இருந்தது. ஜோதிகா மேடம் 90’s கிட்ஸ்களின் தேவதை. இந்தப்படத்தில் நிறைய விசயங்களைக் கத்துக்கொண்டேன். நிறைய இனிமையான நினைவுகள் எனக்கு இந்தப்படத்தில் இருக்கு. ரொம்ப ஜாலியான படம் இது. கல்யாண் சார் தூங்குவாரா என்றே தெரியாது” என்றார்

நடிகை சச்சு பேசியதாவது

“கல்யாண் என்னிடம் கெஸ்ட் ரோல் பண்ணனும் என்றார். நான் கெஸ்ட்ரோல் பண்ண மாட்டேன் என்றேன். பிறகு யோசித்தேன். சிவக்குமார் பேமிலி. அவரோடு நடித்துள்ளேன். சூர்யாவோடும் நடித்துள்ளேன். ஜோதிகாவோடு தான் நடிக்காமல் இருந்தேன். அதனால் இப்படத்தில் நடித்தேன். சூர்யா எங்கள் முதலாளி அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும்” என்றார்

நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது,

” சிவக்குமார் அவர்களின் அர்ப்பணிப்புகளை உள்வாங்கி சூர்யா சிறந்த படங்களை கொண்டு வரும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஜோதிகா நடித்ததும் எனக்குப் பயம். ஜெயலலிதாவைப் பார்த்தால் அமைச்சர்கள் எப்படி பயப்படுவார்களோ அப்படி பயந்தோம். ஏன்னா விஜய் குஷி படத்தில் பட்டபாடு தான் தெரியுமே. ஜோதிகாவைப் பார்க்கும் போது ராஜராஜ மன்னன் போல அவ்வளவு கம்பீரமாக இருக்கும். கல்யாண் மிகப்பெரிய இயக்குநராக வருவார். அவரோட ஸ்லாங் எல்லாருக்கும் பிடிக்கும்.
கல்யாண் படத்தில் நடிப்பது அத்திவரதர் தரிசனம் கிடைத்த மாதிரி. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். இந்தப்படம் எனக்கு நல்ல அனுபவம். தேவா படத்தில விஜய் கூட நடிச்சேன்.
ப்ரேம்ல கொஞ்சம் பிசகி நின்னா கூட சிவக்குமார் அய்யா கோபப்படுவார். இந்தப்படம் பெரிய வெற்றி பெருவதோடு அவார்டும் வாங்க வேண்டும். சூர்யா பேசிய கல்விக்கொள்கைக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். செந்தமிழன் சீமான் ஆதரவு கொடுத்துள்ளார்.
இன்னும் எல்லாரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போது தான் அரசின் காதுக்கு கேட்கும்” என்றார்

தயாரிப்பாளர் சக்திவேல் பேசியதாவது,

“ஒரு படத்தின் வெற்றி என்பது பர்ஸ்டே பர்ஸ்ட் சோவில் தான் தெரியும். ஆனால் எங்களுக்கு முன்னாடியே தெரிந்து விட்டது. ஏன் என்றால் தமிழ்நாட்டில் பல திரையரங்க உரிமையாளர்கள் போன் பண்ணி கேட்கிறார்கள். இந்தப்படம் அவ்ளோ நல்லாருக்கு. ஜோதிகா மேடம் நடித்ததிலே இந்தப்படம் தான் எனக்கு ரொம்ப பிடித்தது. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் படங்களை வெளியீடுவதை பெருமையாகச் சொல்வேன். சூர்யா அண்ணன் என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்காக வேகமாக ஓடுவோம்.” என்றார்

இயக்குநர் கல்யாண் பேசியதாவது,

“எனக்கு பெரிய ஜாக்பாட் என்னன்னா 2D எண்டெர்டெயின்மெண்ட் தான். நான் ராஜா சாரிடம் போய் மூன்று சீன் தான் சொன்னேன். உடனே செக் கொடுத்துட்டார். பிறகு ஜோதிகா மேடத்திடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே சூட்டிங் போகலாம் என்றார்.

ஸ்பாட்டில் சூர்யா தான் ஜோதிகாவுக்குள் வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு பிரமாதமாகப் பண்ணி இருக்கிறார். படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார். விஷால் சந்திரசேகர் ஒரு நல்ல இசை அமைப்பாளர் பவர்புல்லான இசை அமைப்பாளர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்” என்றார்

நடிகர் சூர்யா பேசியதாவது,

“இன்றைய ஹீரோ விசால் சந்திரசேகர். என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். 100 சதவிகிதம் 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமேஸும் இல்லாமல் சரியாச் செய்ற அம்மா ஜோதிகா. அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார்.
தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள். ஜோதிகாவுக்கு இந்தப்படம் சரியான படம்.
சில ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆறுமாதம் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்றார்

தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் பேசியதாவது,

” எனக்குச் சூர்யா நண்பராக கிடைத்தது ஜாக்பாட். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டைக் கேட்டு சிரித்தளவுக்கு வேறு எந்தக்கதையைக் கேட்டும் நாங்கள் சிரித்ததில்லை. 2D எண்டெர்டெயின்மெண்ட் பேர்லே எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு. எங்கள் கதைகளில் 70% கமர்சியல் இருக்கும் 30% மெசேஜ் இருக்கும். கல்யாண் வெறித்தனமாக வேலை செய்பவர். அவரது டீமும் அப்படித்தான்” என்றார்

நடிகை ஜோதிகா பேசியதாவது,

“முதல் நன்றி சிவக்குமார் அப்பாவிற்கு. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் இரண்டு வருசத்துக்குப் பிறகு நடிக்கிறேன். இது எனக்கு ரொம்ப புதுசான படம். இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. ரேவதி மேடத்திற்கு ஈக்குவலான ரோல்.

அதற்கு கல்யாண் சாருக்கு நன்றி. ஹீரோஸ் என்னன்ன பண்றாங்க என்பதைப் பார்த்து எல்லாவற்றையும் எங்களைப் பண்ணச் சொன்னார். பாடல்கள் ரொம்ப நல்லாருந்தது. பெண்களுக்குப் பவர் வேண்டும். இந்தப்பாடல்களில் அது இருக்கிறது.

எல்லா ஷாட்ஸ்களையும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஒரே நாளில் ஒரு பாடலை எடுத்து முடித்தார் பிருந்தா மாஸ்டர். இந்தப்படத்தில் எனக்கு என் ஹஸ்பெண்ட் சண்டைக்காட்சிகளுக்கான கிட்ஸ் நிறைய வாங்கிக் கொடுத்தார். அவர் தான் என்னோட எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை.

என்னோட ஜாக்பாட் சூர்யா தான். பெரும்பாலும் நடிகைகள் நடித்தப்படங்களை அந்தந்தப் படங்களின் ஹீரோக்களோடு தான் ஒப்பிட்டுப் பேசுவார்கள்.

ஆனால் நான் பெரிய பெரிய ஹீரோயின்களோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். அதைப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்” என்றார்.

Jothika is my life time Jackpot says Suriya

 Jothika is my life time Jackpot says Suriya

வெள்ளத்தால் பாதித்த அசாம் மக்களுக்கு அபிசரவணன் உதவி; அரசு பாராட்டு

வெள்ளத்தால் பாதித்த அசாம் மக்களுக்கு அபிசரவணன் உதவி; அரசு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Abi Saravanan help to Assam flood victims

பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அபி சரவணன்.. நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சமூக ஆர்வலராக இயற்கை சீற்றம், தேசிய பேரிடர் சமயங்களில் மொழி மாநிலம் பாராமல் ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுவதில் முதல் ஆளாய் இருப்பவர்..

சென்னை வெள்ளத்தின்போது வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் அதை எடுக்க வழியில்லாமல் ஒருவேளை சாப்பாட்டிற்காக, ஒரு வாய் தண்ணீருக்காக தவித்த அந்த தருணம் தான் எங்கெங்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஓடிப்போய் உதவி செய்ய தன்னை தூண்டியது என்கிறார் அபி சரவணன்.

தற்போது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த ஒருவாரமாக அங்கேயே முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார் அபி சரவணன்.

மழையால் அதிக அளவு பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட அசாம் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் (Solapur, Kamrut, Chirang, Bongaigaon & Kokrajhar) அசாமை சேர்ந்த தமிழக மருமகள் திருமதி ஜூனுபாலா, உஜ்ஜல்,அகில் மற்றும் ஆஷா ஆகிய நண்பர்களுடனும் மற்றும் அசாம் மாநில அதிகாரிகள் சிலர் பாதுகாப்பு உதவியுடனும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று அரிசி மற்றும் உணவுப் பொருட்கள், துணிகள், மருந்து பொருட்கள், மற்றும் குடிநீர் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார் அபி சரவணன்.

பிரம்மபுத்திரா ஆற்றங்கரையில் உள்ள ஒரு மலை கிராமத்தில் பாதிக்கப்பட்ட மலைவாசிகளை சந்திக்கச் செல்லும்போது அவர்களுக்கான நிவாரண பொருட்களுடன் அவர்களின் விருப்ப உணவான அவல், வெல்லம் வாங்கிச் சென்று கொடுத்து தனது அன்பால் அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் அபி சரவணன்.

இவரது குழுவினரை அந்த பகுதிக்கு படகோட்டி அழைத்துச் சென்ற நபர் பார்வையற்றவர் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டு போனாராம் அபி சரவணன்.

தற்போது வெள்ளை பாதிப்பால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் நிவாரண பணிகளை ஓரளவு முடித்துவிட்ட அபி சரவணன், ஐந்தாவது மாவட்டத்தில் மழையினூடே தனது உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

அபி சரவணனின் சேவையை பாராட்டி அஸ்ஸாம் மக்கள் ‘Kamsa’ எனும் மரியாதையையும் & கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ‘Araina’ எனும் அரசாங்க மரியாதையையும் வழங்கி கௌரவித்தனர்.

இளம் நடிகர்கள் சினிமாவில் தங்களது அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடி ஓடிக்கொண்டிருக்க நடிகர் அபி சரவணனோ, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட, தேசத்தின் எல்லை வரை ஓடிக்கொண்டிருக்கிறார்..

நடிகர்களில் அபி சரவணன் நிச்சயம் ஒரு வித்தியாசமான மனிதநேயம் உள்ள மனிதர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Actor Abi Saravanan help to Assam flood victims

Abi Saravanan help to Assam flood victims

1500 தனுஷ் ரசிகர்கள் ரத்த தானம்.; கலைப்புலி தாணு பெருமிதம்

1500 தனுஷ் ரசிகர்கள் ரத்த தானம்.; கலைப்புலி தாணு பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush fans blood donationநடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா, செயலாளர் B. ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று சென்னையில் உள்ள ACS மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.

இந்த முகாமில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள், கேரளா, கர்நாடக, ஆந்திரா, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் ஒரே இடத்தில இவ்வளவு ரசிகர்கள் இணைந்து இரத்ததானம் செய்வது இதுவே முதல்முறை.

இந்த இரத்ததான முகாமை, தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு, T. G தியாகராஜன், தனுஷின் பெற்றோர்கள் கஸ்தூரி ராஜா & விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா, S. வினோத் குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தனர்.

இந்த விழாவில் பேசிய கலைப்புலி S தாணு ” 1500 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இணைத்து ரத்ததானம் செய்வதை இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன் என மகிழ்ச்சியுடன் பேசினார்.

பிறகு விழாவில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், மற்றும் கென் கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனுஷ் பேசியவை :

இரத்த தானம் செய்த உங்களை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். கலந்துகொண்ட அனைவருக்கும் மிகவும் நன்றி.

அனைவரிடமும் அன்பை மட்டும் செலுத்துவோம் என அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்

Dhanush fans blood donation

1500 Dhanush fans blood donation

இந்த வருடம் நான் நடித்த ஆறு படங்கள் வெளியாகவுள்ளன மகிழ்ச்சியில் நடிகை நிகிஷா பட்டேல்

இந்த வருடம் நான் நடித்த ஆறு படங்கள் வெளியாகவுள்ளன மகிழ்ச்சியில் நடிகை நிகிஷா பட்டேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)பிக்பாஸ் புகழ் ஆரவ் இணைந்து நடித்த மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரியளவில் இருக்கிறது. இப்படத்தை தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சரண் இயக்கியுள்ளார்.

படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்கள் மிக அற்புதமாய் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்களின் first look தற்போது வெளியிடப்பட்டுள்ளது .

இப்படத்தை தவிர எழில் சார் இயக்கியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் இயக்குனர் கஸ்தூரி ராஜா சார் இயக்கத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்ற பாண்டி முனி படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயரிடப்படாத படத்திலும், நடிகர் நந்தாவுக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறேன்.

ஆக மொத்தம், இந்த வருடம் ஆறு படங்கள் வெளியாகும் அதனால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிறப்பான கதாபாத்திரத்திரங்ககளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதே தனது லட்சியம் என்கிறார் நிகிஷா பட்டேல்.

‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.

‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது:-

பாடலாசிரியர் விவேகா பேசும்போது:-

‘வெண்ணிலா கபடி குழு’ படத்திலிருந்து தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியவர், கபடி விளையாட்டை முன்னிறுத்தும் படமாகவும் வறுமை பூசிய எளிய மனிதர்களின் வாழ்வு, பெண்களின் முன்னேற்றம் போன்ற வலிமையான கருத்துகளை கூறும் படமாக இருக்கும், இமான் மிகச் சிறந்த இசையைக் கொடுத்திருக்கிறார், ஜாம்பவான் பாரதிராஜா இப்படத்தில் இருப்பது மிகப் பெரிய பலம் என்றார்.

எஸ்.டி.சபா பேசும்போது:-

படம் வெளியாவதற்கு முன்பே இயக்குநர் சுசீந்திரன் விருது பெற்று விட்டார், இந்த மாதிரி தரமான படங்களைத் தயாரிப்பதற்கு தாய் சரவணனுக்கு நன்றி. எங்கள் ஆசானான பாரதிராஜாவை வைத்து இரண்டாவது படம் எடுப்பது பாக்கியமாக கருதுகிறேன் என்றார்,

படதொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது:-

இப்படத்தில் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. இப்படத்தில் நடித்த அனைத்துப் பெண்களும் நன்றாக நடித்துள்ளார்கள்.

இயக்குநர் அகத்தியன் பேசும்போது:-

கபடியை மையமாகக் கொண்டு இயக்குநர் சுசீந்திரன் இரண்டாவது படம் இயக்கியிருப்பது மகிழ்ச்சி. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு கபடி தான் எனது பிரதான விளையாட்டு. பாரதிராஜா, சசிகுமார் ஆகியோர் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. என் பெண் இப்படம் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமாகிறார் என்றார்.

சண்டை இயக்குநர் தினேஷ் காசி பேசும்போது:-

இது என்னுடைய மூன்றாவது படம். சசிகுமாருடன் பணியாற்றியது சுலபமாக இருந்தது, பாரதிராஜாவுடன் பணியாற்றியதும் மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது:-

இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

கதிரேசன் பேசும்போது:-

சமுதாயத்தில் பெண்களை மையப்படுத்தி அவர்களுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் எல்லாவற்றுக்கும் தயங்கிக் கொண்டே இருப்பார்கள். இன்று சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். பல வெற்றிப் படங்களை இயக்கிய சுசீந்திரனுக்கு இந்த படத்தின் வெற்றி சாதாரணம் என்றார்,

இயக்குநர் எழில் பேசும்போது:-

சுசீந்திரனைப் பற்றிக் கூறவேண்டுமானால் சினிமா வெறிப்பிடித்த மனிதர் என்று கூறலாம், அவருடைய முதல் படத்தைப் பார்த்துவிட்டு மிரண்டு போனேன். பாரதிராஜாவை பார்க்கும்போது விளையாட்டு வீரராகத் தோன்றுகிறது. மேலும் இப்படத்தைப் பார்க்கும் போது அனைவருக்கும் முக்கியமானதொரு படமாக தோன்றுகிறது. இமான் சிறந்த இசையைக் கொடுத்திருக்கிறார் என்றார்.

தயாரிப்பாளர் P.L.தேனப்பன் பேசும்போது:-

இப்படத்தின் பாடல் பார்க்கும்போதே வெற்றிப் படமென்று தெரிகிறது என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது:-

மொழி சார்ந்து பாரம்பரியமிக்க கபடி விளையாட்டை மையமாக வைத்து இப்படம் இயக்கியிருக்கும் சுசீந்திரனுக்கு வாழ்த்துக்கள். டி.இமானை தமிழ் சினிமா இசையின் செல்லப்பிள்ளை என்றே கூறலாம். இப்படம் வெற்றிபடமாக அமையும் என்றார்.

நாயகி மீனாட்சி பேசும்போது:-

இயக்குநர் சுசீந்திரனிம் கடின உழைப்பு போன்று பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். தேர்வு இல்லாமல் தான் என்னை தேர்ந்தெடுத்தார் சுசீந்திரன். அதுபற்றி அவரிடம் கேட்கும்போது நான் என் மேல் நம்பிக்கை வைத்துதான் உன்னைத் தேர்வு செய்தேன் என்றார். சசிகுமார் மிக நல்ல பயிற்சியாளர். ஒட்டன்சத்திரத்தை என்னால் மறக்க முடியாது என்றார்.

இசையமைப்பாளர் டி.இமான் பேசும்போது:-

சுசீந்திரனுடன் இணைந்து பணியாற்றுவது இது 7-வது படம். இத்தனை படங்களிலும் எங்களுடைய உறவு கெடாமல் இருப்பது இருவருக்கும் உள்ள புரிதல்கள் தான். ஒவ்வொரு படங்களிலும் அடித்தளத்தை தெளிவாக அமைத்துக் கொடுப்பார் சுசீந்திரன். விவேகாவும் பாடல் வரிகளை சிறப்பாக எழுதியிருந்தார். மேலும், பின்னனி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக ‘கென்னடி கிளப்’ இருக்கும். சசிகுமாரின் கதாபாத்திரம் முதல் பார்வை போஸ்டரிலேயே நன்றாக இருக்கும் என்ற தெரிந்தது. பாரதிராஜா இருந்தாலே அங்கே ஒரு காந்த அலைகள் இருக்கும் என்றார்.

கபடி வீராங்கனை ஜீவா பேசும்போது:-

கபடி மட்டும் தான் எங்களுக்கு விளையாட தெரியும். சினிமா எங்களுக்கு புதியது. இருப்பினும் இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் பாரதிராஜா, சசிகுமார் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் எங்களுக்கு ஊக்கம் கொடுத்து நடிக்க வைத்தார்கள் என்றார்.

கபடி பயிற்சியாளர் செல்வம் பேசும்போது:-

எங்களுடைய ஒவ்வொரு போட்டிக்கும் நல்லுச்சாமி தவறாமல் கலந்துக் கொள்வார். அங்கே எங்கள் பெண்கள் படும் துயரங்களைப் பார்த்து இதை ஒரு படமாக எடுக்க வேண்டும் கூறினார். கபடிக்குழு நிறுவனர் நல்லுச்சாமி பேசும்போது:-

50 வருடங்களுக்கு முன்பு என் நண்பர்களுடன் கபடி குழுவிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசிக்கும்போது நான் ‘வெண்ணிலா கபடி குழு’ என்று வைத்தேன்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது:-

நல்லுச்சாமி பிக்சர்ஸ் சார்பில் இது எங்களுடைய மூன்றாவது படம். என் அப்பாவிற்கு விளையாட்டு பிடிக்கும். அதை வைத்து படமெடுக்க வேண்டும் என்று தான் வெண்ணிலா கபடி குழு எடுத்தேன். என் அப்பாவை இப்படத்தில் நடித்தற்காக பாரதிராஜாவிற்கு தேசிய விருது கிடைக்கும். ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களைக் கொடுத்து விடுவேன். அதை ஒரே முறையில் நடித்து விடுவார். அவர் நடிப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். சசிகுமாரிமிருந்து 9 புது இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். டி.இமானிடம் எனக்கு பிடித்தது நேரம் தவறாமை. விவேகா நன்றாக பாடல் எழுதியிருக்கிறார்கள்.

ராஜபாண்டி இப்படம் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகியிருக்கிறார்கள். உதவி இயக்குநர்களுடைய கடின உழைப்பு இப்படத்தில் இருக்கிறது. கலை இயக்குநர் சேகருடன் இது எனக்கு மூன்றாவது படம். நாங்கள் நினைத்த படத்தைப் பிடிவாதமாக எடுத்திருக்கிறோம்.

ஆகஸ்ட் 15 இப்படம் வெளியாகிறது. இப்படம் எங்களுடைய குடும்ப படமாக இருந்தாலும் என் தம்பி தயாரிப்பாளராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மதுரை பெண் மீனாட்சி நாயகியாக அறிமுகமாகிறார்.

இயக்குநர் சசிகுமார் பேசும்போது:-

‘கென்னடி கிளப்’ படத்தின் நாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள் தான். கபடி பயிற்சியாளர் செல்வமாக தான் நான் நடித்திருக்கிறேன். நல்லுச்சாமியாக பாரதிராஜா சார் நடித்திருக்கிறார். கபடியில் வென்றால் தான் வேலைவாய்ப்பு, வாழ்க்கை எல்லாமே அமையும் என்று தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல போட்டிகளில் வென்றிருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையை சுசீந்திரன் கூறும்போது பெண்களுக்காக இப்படத்தை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இம்மாதிரி படங்களில் நான் நிறைய நடிப்பேன். பாரதிராஜாவுடன் நடிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரை சுசீந்திரன் அழகாக கையாண்டார். எல்லோருடனும் இணைந்து நடித்தது இயல்பாக, சுலபமான அனுபவமாக இருந்தது. டி.இமானின் இப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது:-

நல்ல கலைஞர்களை வளர்கின்ற கலைஞர்களை ஊக்கப்படுத்தவில்லையென்றால் நான் ஒரு நல்ல கலைஞன் இல்லை. இதற்கு முன்பு சுசீந்திரனுடன் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், இப்படத்தில் ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தில் நடித்த அனுபவமே இல்லை. சினிமா என்றால் என்னவென்றே தெரியாத கபடி வீராங்கனைகள் இப்படத்தில் நடித்ததாகவே தெரியவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். அர்ப்பணிப்போடு நடித்திருந்த இந்த பெண்களுக்கு நன்றி கூற வேண்டும்.

சுசீந்திரன் மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்கு நல்லுச்சாமி கொடுத்து வைத்தவர். அம்பானிபோல் வசதியாக வாழ விருப்பமில்லை.எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இயக்குநர் பாரதிராஜாவாகவே பிறக்க விரும்புகிறேன். இது சினிமா அல்ல. தென் மண்ணின் வாழ்க்கை. அதில் பெரும்பங்கு நல்லுச்சாமிக்கு இருக்கிறது. இப்படத்தில் நல்லுச்சாமியாகத்தான் நான் நடித்திருக்கிறேன்.

சசிகுமாரை பார்க்கும்போது அவர் முகத்தில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். சிறு குழந்தைகளுக்கும் அவருடைய முகம் பிடிக்கும். அவருடன் நெருங்கி பழகும்போது தான் அவர் இன்னும் குழந்தையாக இருக்கிறார் என்று தெரிகிறது.

இப்படத்தை தொழிற்சார்ந்த படமாக இல்லாத வண்ணம் சிறப்பாக இயக்கியிருக்கிறார் சுசீந்திரன்.

நானும் டி.இமானும் ஒரு படத்திற்கு இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் அப்படம் நின்று விட்டது. அவர் உடம்பைக் குறைத்து திறமையை வளர்த்துக் கொண்டார். படத்தொகுப்பாளர் ஆண்டனியின் பல படங்கள் பார்த்திருக்கிறேன். மிகவும் திறமையானவர். லெனின் பேசும்போது, நான் அதிகம் பேசவில்லை பேசினால் பிரச்னை வரும் என்று கூறினார். பேசினால் பிரச்னை தீரும். ஆகையால் பேச வேண்டும். நான் துணை நிற்கிறேன் தயங்காமல் பேசு லெனின். உன்னுடைய சமீபத்தில் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் பாரதிராஜா கபடி வீராங்களைகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.

‘கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள்:-

இயக்குநர் அகத்தியன், SD.சபா, எழில்,லெனின்பாரதி, ராம்பிரகாஷ்,தயாரிப்பாளர் பி,எல்,தேனப்பன்,கதிரேசன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)விண்னைதாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல வெற்றி படங்களை RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது எதார்த்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார்.

பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் சூரி இப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கின்றார்.

குடும்பமாக அனைவரும் ரசித்து பார்க்கும்படி இப்படம் நகைச்சுவை விருந்தாக அமையுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

More Articles
Follows