தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மையில் நயன்தாராவுடன் ஜீவா நடித்த ‘திருநாள்’ படம் வெளியானது.
இதனை அடுத்து, காஜலுடன் ‘கவலை வேண்டாம்’ மற்றும் ஸ்ரீதிவ்யாவுடன் ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜீவா.
இதைத் தொடர்ந்து திருநாள் படத்தை தயாரித்த கோதண்டபானி பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜீவா.
இப்படத்தை எம்.ஜே.அருண் என்பவர் இயக்கவிருக்கிறார்.
இதில் நாயகியாக லட்சுமி மேனன் நடிக்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.
தற்போது ‘சிப்பாய்’, ‘றெக்க’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் லட்சுமி மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.