என் சக நடிகர்களுடன் ஒப்பிடும்போது நான் செய்தது கம்மிதான் – ஜெயம் ரவி

என் சக நடிகர்களுடன் ஒப்பிடும்போது நான் செய்தது கம்மிதான் – ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செப்டம்பர் 10ல் நடிகர் ஜெயம்ரவி தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் & பத்திரிகையாளர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

”சினிமாவுக்கு நான் வந்து 20 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால், 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன்.

இதை மற்ற சக நடிகர்களுடன் ஒப்பிடும்போது ரொம்ப குறைவு தான். எனக்கு பிறகு வந்தவர்கள் 40, 45 படங்களில் நடித்துவிட்டனர்.

நான் ஏன் குறைவான நடித்திருக்கிறேன். ஏன் என்று யோசித்தால், குவாலிட்டிக்கு மதிப்பு கொடுக்கிறேன்.

குவான்டிட்டியை விட குவாலிட்டிதான் முக்கியம்.

‘ஜெயம்’ படம் வெளியாகி 150 நாட்கள் ஓடி பெரிய வெற்றி பெற்றது. ஆனாலும் அதன் பிறகு 8 மாதம் வீட்டில் சும்மாவே இருந்தேன்.

அப்போதுதான் அப்பா சொன்னார், ‘நல்ல படம் வரும் வரைக்கும் சும்மா உட்காரு தப்பில்ல.” என்று சொன்னார். எனவே என்னுடைய பயணத்தில் சரியாக ஓடாத படங்களின் விகிதம் குறைந்திருக்கிறது.

நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்”

இவ்வாறு ஜெயம் ரவி பேசினார்

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43ஆம் ஆண்டு விழா சுவாரஸ்யங்கள்.; கார்த்தி பங்கேற்பு

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43ஆம் ஆண்டு விழா சுவாரஸ்யங்கள்.; கார்த்தி பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை, செப்டம்பர் – 11 : திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார்.

மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் சிவகுமார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார்.

இந்த ஆண்டுக்கான, ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 43-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆஃப் மெட்ராஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ ஒரு லட்சம், மூத்த ஓவிய கலைஞர் ராமு அவர்களுக்கு ரூ.50,000/- வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வரவேற்புரை முடிந்ததும் மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார்…

“1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தொடர்ந்து, ப்ளஸ் டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது.

சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள்.

கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன்.

என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன்.

தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.’’என்று கூறினார்.

அகரம் ஃபவுன்டேஷன் பொருளாளர் நடிகர் கார்த்தி பேசியதாவது…

“அகரம் பவுண்டேஷன் கல்வி பணிகளுக்கான விதை 43 ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டது.

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43 ஆண்டுகளாக இளம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருவதன் தொடர்ச்சியே அகரம். நல்ல கல்வி அறிவும் நற்சிந்தனைகளும் சமூக பொறுப்புகளும் நிறைந்த இளம் வயதினரை உருவாக்குவதன் மூலம் சமூக குறைபாடுகளை காலப்போக்கில் களைய முடியும்.

இளம் மனங்களை கட்டமைப்பதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது என்பதை அகரம் பணிகளில் மூலம் அறிந்திருக்கிறோம்.

இளம் பருவத்தினரில் ஒரு சிலரது வாழ்க்கை கனவுகளை நனவாக்கும் முயற்சியாய் ஆரம்பிக்கப்பட்ட அகரம் விதைத் திட்டம் கடந்த 13 ஆண்டுகளில் 4750 மாணவ மாணவியர்க்கு கல்லூரி கல்வி வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

சரியான சமமான கல்வி வாய்ப்பிற்கான ஒத்த கருத்துடைய மனிதர்கள், அமைப்புகளுடன் இணைந்து அகரம் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.

அகரம் தொடங்கப்பட்ட பொழுதும்; விதைத் திட்டத்தின் பதிமூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இன்றைய பொழுதும் ஒவ்வொரு பணிகளில் உச்சபட்ச வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கிறோம்.

கல்வியின் மூலம் நிரந்தர, நீடித்த மாற்றங்கள் உருவாக முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் செயல்பட்டு வருகிறது அகரம்.

2020-ஆம் ஆண்டு தொடங்கி கடந்த மூன்று கல்வி ஆண்டுகளிலும் நிகழ்ந்த அசாதாரண சூழல் விளிம்பு நிலை மக்களின் கல்வி வாய்ப்பை இன்னும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.

ஊரடங்கு நடைமுறைகளால் வேலைக்கு சென்று தினக்கூலி பெறமுடியாத குடும்பங்களுக்கு இணைய வழி கல்வி கூடுதல் சுமையை உருவாக்கியது.

40 ஆண்டுகளாக எங்கள் தந்தை தொடர்ந்து நடத்தி வந்த இந்த குடும்ப விழாவை கடத்த இரண்டு ஆண்டுகள் நடத்திட இயலவில்லை.

இருப்பினும், களங்களின் யதார்த்தமே அகரத்தின் பணிகளை தீர்மானிக்கிறது. அசாதாரண சூழலில் எளிய குடும்பங்கள் எதிர்கொண்ட சிரமங்களை சிறு அளவிலாவது குறைத்திடும் பணிகளை முன்னெடுத்திருந்தோம்.

1. பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள 10, 11 மற்றும் 12 வகுப்பு பயின்று வந்த அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்களை அடையாளம் கண்டு ரூ.10,000/- மதிப்புள்ள ‘ஸ்மார்ட் போன்’ டிசம்பர் 2020-இல் வழங்கினோம்.

2. தனியார் கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த, பொருளாதார இழப்பால் கல்வி கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களுக்கு, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.10,000/- தலா ஒருவர் என 4000 குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணங்களை அவர்கள் பயின்ற கல்வி நிறுவனத்திற்கு செலுத்தினோம்.

3. 2020, 2021, 2022 ஆண்டுகளில் முறையே 556, 658, 560 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்பை ஒத்த கருத்துடைய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அகரம் விதைத் திட்டத்தின் வாயிலாக உருவாக்கினோம்.

ஊரடங்கு காலம், நோய் அச்சம் இயல்பு வாழ்வை புரட்டி போட்டிருந்த சூழலிலும் அகரம் தன்னார்வலர்கள் மேற்கண்ட பணிகளை தொடர்ந்திருந்தனர். அகரம் என்றாலே அதன் அர்பணிப்புமிக்க தன்னார்வலர்களே. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருந்தொற்று நோய் காலத்தை அறிவியலின் துணை கொண்டு நாம் கடந்து வந்தாலும், கல்வியில் பாதிப்பு தொடர்ந்திருப்பதை அகரம் பணிகளில் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

மாணவர்களிடம் கவன சிதறல்கள் அதிகரித்து இருக்கிறது. மாணவர்களின் கல்வி தொடர்ச்சியில் பாதிப்புகள் இன்னும் தொடர்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அகரம் விதை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் நூறு மாணவர்களாவது முந்தைய கல்வி ஆண்டில் +2 முடித்தவர்களாக இருப்பார்கள். இந்த ஆண்டு வந்த விண்ணப்பங்களில், கடந்த ஆண்டே +2 முடித்தவர்கள் என்ற எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது.

இது எங்களை அதீத கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை முடிந்து, கல்வி ஆண்டு தொடங்கி இருந்தாலும் கல்வி வாய்ப்புக்காக காத்திருக்கும் மாணவர்களை இன்றும் சந்தித்து வருகிறோம்.

அந்த மாணவ, மாணவிகள் தங்களை இந்த உலகிற்கு நிரூபிக்கவும், தங்களுக்கான ஒரு வாய்ப்பிற்காகவும் காத்திருக்கிறார்கள், கூடிய மட்டும் அவர்களின் கல்வி இடைவெளியை நிரப்பும் வழிமுறைகளை முயற்சித்து வருகிறோம்.

கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து இல்லம் தேடிக் கல்வி, பள்ளி மேலாண்மை குழு, நான் முதல்வன் போன்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களில் அகரம் பங்கெடுத்து வருகிறது. கூடுதலாக பரிசார்த்த முயற்சியாக ‘அகரம் நமது பள்ளி பெல்லோஷிப் திட்டத்தை’ திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் ஒன்றிய மலை கிராம பள்ளிகளில் தொடங்கி இருக்கிறோம்.

ஒவ்வொரு கிராமங்களிலும் தொடக்கப்பள்ளியில் இருந்தாலும் ஓராசிரியர் பள்ளிகளாக நடத்தப்பட்டு வரும் நான்கு தொடக்கப் பள்ளிகள் தேவையின் (முன்னுரிமை) அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அகரம் முன்னாள் மாணவர்கள் தினசரி கற்பித்தல் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள்.

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்தவும், இடை நிற்றலை குறைக்கவும், கிராம மக்களோடு இணைந்து பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள். அகரம் முன்னாள் மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

இணையத் திட்டம் :

எளிய மனிதர்களுக்கான கல்வி கனவை நிறைவேற்றுவதில் அருகமை பொதுப் (அரசுப்) பள்ளிகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது. சமூகத்தின் பல்வேறு தளங்களில் பணியாற்றும் நம்மில் பெரும்பாலானோர் பொதுப் பள்ளிகளில் படித்தவர்களாக இருக்கக்கூடும்.

இன்றும் பொதுப் பள்ளிகள் தான் விளிம்பு நிலை மக்கள் கல்வி பெற ஒரே ஆதாரமாக இருக்கிறது. பொதுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து அந்தந்த பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பணியாற்ற ‘இணை’ அமைப்பு வாயிலாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயலாற்றி வருகிறோம்.

“இணை”-யின் நோக்கம் என்பது ஒரு பள்ளிக்கு சமூகத்தின் மேல் உள்ள பொறுப்பையும், ஒரு சமூகத்திற்கு பள்ளியின் மேல் உள்ள உரிமையும் பொறுப்பையும் உணர்த்துவது ஆகும். பொதுப் பள்ளிகள் மீது அக்கறை கொண்டு இயங்க முன்வந்த பல தன்னார்வலர்களுடனும் இணைந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலும், மதுரை மாவட்டத்திலும் முன்னோட்ட திட்டமாக (Pilot Project) பெற்ற அனுபவங்களை கொண்டு தமிழகம் முழுவதும் அகரம் விதை மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கு எடுத்து செல்ல இருக்கிறார்கள்.

இந்த கல்வி ஆண்டில் 380 பள்ளிகளுக்கு இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்த தயாராகி வருகிறார்கள். இருக்கும் வளங்களில் இருந்து அகரம் பணிகளின் எல்லையை வரையறை செய்கிறோம்.

அனைவரையும் உள்ளடக்கிய கல்வி என்ற சிந்தனையின் பால் ஆழ்ந்த நம்பிக்கை அகரத்திற்கு உண்டு. சமூகப் பணிகளில் மிக முக்கியமானது கல்விப் பணி. மாற்றங்களை வேறு யாரோ கொண்டு வருவார்கள் என்று இருந்துவிடாமல், நம்மால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்கும் போது தான், சமூகத்தில் உண்மையான மாற்றங்கள் உருவாகும். கல்வி எத்தனை முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

தமிழ்நாடு அரசு மாநில கல்வி கொள்கை வடிவமைப்பு குழு அமைத்திருக்கிறது. கல்வி கொள்கை வடிவமைப்பு குழு பொதுமக்களிடம் இருந்து, கல்வி தொடர்பான கருத்துக்களை, ஆலோசனைகளை அக்டோபர் மாதம் 15-ஆம் தேதிக்குள் பகிர கேட்டிருக்கிறார்கள்.

கல்வியின் மீதும் எதிர்கால சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆலோசனைகளை அனுப்பிட கேட்டு கொள்கிறேன்.

மாணவரது கல்வி வளர்ச்சிக்கெனவும், வாழ்வின் அடுத்த பரிமாணத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதற்கும் அகரம் கடினமான, சவாலான பணிகளை முன்னெடுத்து வருகிறது.

தன்னார்வலர்கள் பொறுப்பேற்று நடத்தும் அகரம் பணிகளுக்கு உந்து சக்தியாக பொருளாதாரத்தை வழங்கி உடன் நிற்கும் நன்கொடையாளர்கள், விதைத் திட்ட மாணவர்களின் கல்வி வாய்பிற்க்காக தொடர்ந்து ஆதரவு கரம் வழங்கி அரவணைத்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிருக்கும் நன்றிகள். ஊர் கூடி தேர் இழுப்பது போன்று தான் அகரம் பணிகள்.

எளிய குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்காக, ஒன்றிணைந்திருப்பது முன்னெப்போதையும் விட இன்று அவசியமானதாக இருக்கிறது. இணைந்திருப்போம்.” என்று கூறினார்.

விழா நிகழ்வை அகரம் உதவியுடன் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இளங்கலை வேளாண் அறிவியல் படித்து வரும் தன்ராஜ், சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துவரும் ஸ்ரீமதி தொகுத்து வழங்கினர். பேராசிரியர் கல்யாணி, அகரம் தன்னார்வலர்கள் கலந்துக் கொண்டனர்.

‘ராதே ஷியாம்’ பட நடிகர் ‘ரிபல் ஸ்டார்’ கிருஷ்ணம் ராஜூ காலமானார்

‘ராதே ஷியாம்’ பட நடிகர் ‘ரிபல் ஸ்டார்’ கிருஷ்ணம் ராஜூ காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் நாயகனாக நுழைந்தவர் கிருஷ்ணம் ராஜு.

பின்னர் பிற்காலத்தில் வில்லனாகவும் நடித்து வந்தார். நடிப்பிற்கான நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

அண்மையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ராதே ஷியாம்’ படத்திலும் நடித்திருந்தார்.

தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு சினிமாவின் ‘ரிபல் ஸ்டார்’ என அறியப்படுகிறார்.

மத்திய அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கிருஷ்ணம் ராஜூ உயிரிழந்தார்.

ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

கிருஷ்ணம் ராஜூவின் இறுதிச் சடங்குகள் நாளை நடக்கும். இவரது மறைவு தெலுங்கு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரிபல் ஸ்டார் மறைவுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘ஓ மை கோஸ்ட்’ வந்தால் சன்னி லியோனை தமிழ் சினிமா கொண்டாடும்

‘ஓ மை கோஸ்ட்’ வந்தால் சன்னி லியோனை தமிழ் சினிமா கொண்டாடும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’.

இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ‘ஸ்டைலிஷ் தலைவி’ சன்னி லியோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார். இவர் ‘மாநகரம்’, ‘யார் இவர்கள்’ உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான தீபக்மேனன் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார். சண்டைக் காட்சிகளை ‘கில்லி’ சேகர் வடிவமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பை அருள் சித்தார்த் ஏற்றுள்ளார். கலை இயக்குநர்களாக ராம்-ரமேஷ் பணியாற்றுகிறார்கள்.

பிரபல பாலிவுட் நடன கலைஞர் விஷ்ணு தேவா நடன காட்சிகளை அமைத்துள்ளார்.

D.வீரசக்தி, K.சசிகுமார் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் R.யுவன். இவர் ஏற்கனவே ‘சிந்தனை செய்’ என்ற படத்தை நடித்து இயக்கியவர்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் வீரசக்தி மற்றும் சசிகுமார் கூறியதாவது…

“அதிக பொருட்செலவில் இந்தப் படத்தை நாங்கள் தயாரித்து உள்ளோம். வரலாற்று பின்னணி படம் என்றாலே பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தை நாங்கள் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளோம்.

பாலிவுட் ஸ்டார் சன்னி லியோன் ஒரு மிகப்பெரிய நடிகை. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

அதனால் வெளிப்புற படப்பிடிப்பு என்பது சாத்தியம் இல்லாத ஒரு விஷயமாக இருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை மும்பையில் பல அரங்குகளை அமைத்து படமாக்கினோம்.

தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் அவரை நடிக்க அழைத்தபோது அவர் ஏன் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று அவரை நேரில் சந்தித்தபோது
தெரிந்தது.

இந்தப் படத்தின் கதையை கேட்கும்போது எங்களுடைய நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் அவருக்கு பிடித்திருந்த காரணத்தினால் உடனே நடிக்க சம்மதித்தார்.

படப்பிடிப்புக்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்ததோடு படத்தின் எல்லா விதமான புரமோஷனுக்கும் வருவதாக சொல்லி இருக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு சன்னி லியோனை தமிழ் சினிமா கொண்டாடும்” என்றார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் R.யுவன் கூறியதாவது…

“இது ரசிகர்களை முழுக்க முழுக்க மகிழ்விக்கும் படமாக இருக்கும். இதில் புதிய அம்சம் என்ன இருக்கிறது என்று கேட்டால், வரலாற்று பின்னணியில் உருவான திகில் கதைகள் தமிழில் ஏராளமாக வந்திருக்கிறது. ‘காஞ்சனா’ சீரிஸ் படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

அந்த வகையில் இந்தப் படம் திகில் படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும். அதற்காக திரைக்கதையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம்.

இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக ராணி கதாபாத்திரம் வருகிறது. நிறைய ராணி கதைகளை நாம் பார்த்திருக்கிறோம். இந்த ராணி சற்று வித்தியாசமாக இருப்பார்.

ராணி கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று யோசித்தபோது சன்னி லியோன் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. கதை எழுதும் போதும் அவர்தான் என்னுடைய முதல் தேர்வாக இருந்தார்.

சன்னி லியோனை மும்பையில் சந்தித்து கதை சொன்னேன். அப்போது அவர் சொன்ன முதல் நிபந்தனை ‘எனக்கு ஆங்கிலத்தில் கதை சொல்ல வேண்டும்’ என்றார்.

அதற்காக நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் கதை சொன்னேன்.

அவருக்கு புரிந்ததா, புரியவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் நான் கதை சொல்லும்போது ஆர்வத்தோடு ரசித்து கேட்டார்.

அது மட்டுமல்ல, ‘நான் நடித்த படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும்’ என்று சொன்னார்.

படப்பிடிப்பில் அவருடைய முழு ஒத்துழைப்பு கிடைத்தது. காலையில் 9:00 மணிக்கு படப்பிடிப்பு என்றால் அதற்கு முன்பாகவே ஒப்பனை செய்து கொண்டு ஆயத்தமாக வந்து விடுவார்.

ஒருமுறை கேராவேனை விட்டு வெளியே வந்து விட்டால் அன்றைய காட்சிகள் முழுவதையும் நடித்து கொடுத்த பிறகே மீண்டும் கேராவேனுக்குள் செல்வார். ஒரு நாளின் துவக்கத்தில் இருக்கும் அதே உற்சாகம் நாள் முழுவதும் அவரிடத்தில் இருப்பதை பார்க்க முடியும்.

எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அந்த காட்சிக்கு அதிகபட்ச உழைப்பைக் கொடுக்க ஆயத்தமாக இருப்பார்.

யோகி பாபு பிளாஷ்பேக் காட்சிகளில் மன்னர் காலத்தில் வருகின்ற ஒரு மந்திரி கதாபாத்திரம் செய்திருக்கிறார்.

சதீஷ் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். அவருடைய கதாபாத்திரம் மிகவும் புதியதாக இருக்கும்.

இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரமேஷ் திலக், அர்ஜுன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இது முழுக்க முழுக்க ரசிகர்களை மகிழ்விக்கும் படமாகவும் விஷுவலுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடிய படமாக இருக்கும்.

இது பிளாக் காமெடி படமாக இருந்தாலும் குலுங்கி குலுங்கி சிரிக்கும்படியான நகைச்சுவை காட்சிகள் அதிகம் இடம்பெற்ற படமாக இருக்கும்” என்றார்.

#OhMyGhost Teaser #OMGTeaser

#OhMyGhost #OMG @sunnyleone @actorsathish @iyogibabu @dharshagupta @yuvan_dir @thilak_ramesh @arjunannk @thangadurai123 @javeddriaz @dharankumar_c @deepakdmenon @editorsiddharth Producers #DVeeraSakthi @sasikumarwhs @WhiteHorseOffl @vonimusic

ஓடிடி-க்கான படங்களை தியேட்டருக்கு தூக்கிக் கொண்டு ஓடாதீர்கள் – ஆர்கே சுரேஷ்

ஓடிடி-க்கான படங்களை தியேட்டருக்கு தூக்கிக் கொண்டு ஓடாதீர்கள் – ஆர்கே சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அவர்களின் நல்லாசியுடன் ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ் பெருமையுடன் வழங்கும், 5E கிரியேஷன்ஸ் மற்றும் ஜெசாரா மீடியா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

விஜயகாந்தை வைத்து “கண்ணுபடப் போகுதய்யா” என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் துவக்கவிழா பூஜை இனிதே நடைபெற்றது.

இந்த நிகழ்வில், இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி, சாம்ஸ், டேனியல் ஆனி போப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ் பேசும்போது…

“சென்னை சிட்டியும் மதுரை நேட்டிவிட்டியும் கலந்த ஒரு நல்ல கதையம்சத்துடன் இந்த படத்தை இயக்குகிறேன். இந்த கதைக்கு ஆர்.கே.சுரேஷ் தான் பொருத்தமாக இருந்தார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்தப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்..

படத்தின் நாயகன் ஆர்கே சுரேஷ் பேசும்போது…

“இயக்குநர் பாரதி கணேஷ் என் தந்தை காலத்தில் இருந்தே எனக்கு நெருக்கமானவர். எப்படி விஜயகாந்த்தின் வெற்றிக்கு அவர் முதுகெலும்பாக இருந்தாரோ, அதேபோல தான் எனக்கும். அவர் சொன்ன மூன்று கதைகளில் இந்த கதை ரொம்ப பிடித்திருந்ததால் முதலில் இதை படமாக்க தீர்மானித்தோம்.

இந்த படத்தை எப்படியும் வெற்றிப்படமாக்க வேண்டும் என ஒரு வெறியுடன் இருக்கிறார் இயக்குநர் பாரதி கணேஷ்.. அதனால் இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றமாதிரி நேட்டிவிட்டியுடன் சிட்டியியுடன் நடக்கும் கதையை உருவாக்கியுள்ளார்..

நான் தற்போது தமிழில் மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். தெலுங்கில் இரண்டு படங்களில் வில்லனாகவும் மலையாளத்தில் ஒரு படத்திலும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறேன்.

குறிப்பாக தெலுங்கில் சூப்பர்ஸ்டார் நடிகர் ஒருவரின் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறேன். இயக்குநர்கள் பாலா, முத்தையா ஆகியோர் கொடுத்த பயிற்சிதான் இந்த அளவுக்கு நான் ஒரு நடிகராக வளர காரணம்.

நான் நடித்த ‘விசித்திரன்’ படம் கிட்டத்தட்ட அமேசான் பிரைமில் ஒருகோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நான் தயாரித்த ‘மாமனிதன்’ திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டபோது இரண்டரை கோடி ரூபாய் தான் கிடைத்தது.

ஆனால் அதுவே ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியிட்டபோது 64 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்தவகையில் கிட்டத்தட்ட 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆஹா தமிழ் ஓடிடி தளத்திலேயே அதிக வசூல் செய்த படம் அதுதான்.

என்னிடம் படம் ரிலீஸ் செய்யச்சொல்லி வருபவர்களிடம் படத்தை பார்த்ததும் நானே சில படங்களை தியேட்டருக்கு வேண்டாம், ஓடிடிக்கு கொடுத்து விடுங்கள் என சொல்லிவிடுகிறேன்.. ஏனென்றால் ஓடிடிக்கு என எடுக்கும் படத்தை தியேட்டருக்கு தூக்கிட்டு போகக்கூடாது.

படம் எடுக்கும்போதே எதில் திரையிட போகிறோம் என்பதை முடிவு செய்துவிட வேண்டும்.. இங்கே எட்டு நடிகர்களுக்கு மட்டும் தான் தியேட்டர்களில் நல்ல புக்கிங் மற்றும் ஓப்பனிங் இருக்கிறது.

மாதாமாதம் எனது நிறுவனத்தின் வெளியீடாக ஒரு படமாவது வெளியாகிக்கொண்டுதான் இருக்கிறது சமீபத்தில் வெளியான ‘லைகர்’ படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் தமிழகத்தின் ரிலீஸ் செய்தேன்.

ஆனால் அது ஓரளவுக்குத்தான் போனது. ஓடிடி கன்டெண்டா? தியேட்டர் கன்டெண்டா? எனப் பார்த்து ஒரு படத்தை வெளியிட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம் எனக் கூறினார்.

நடிகர் ராதாரவி பேசும்போது…

‘இந்த படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ் உண்மையையும் விசுவாசத்தையும் மறக்காத ஒரு நபர். அவர் இயக்கிய “கண்ணுபடப் போகுதய்யா” படத்தில் நடித்திருந்தேன்..

தான் உருவாக்கும் எல்லா கதைகளிலும் எனக்கென ஒரு பாத்திரம் இருக்கும்படி எப்போதுமே கதையை உருவாக்குவார். நான் அவரிடம் கதை எல்லாம் கேட்கவில்லை. கதை கேட்பது,.. ஃபைல் பார்ப்பது இதெல்லாம் தவறான பழக்கம்..

ஆர்.கே.சுரேஷ் படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் வேண்டும் என எப்போதும் நான் உரிமையுடன் கேட்பேன். தவிர இந்த படத்தின் மூலமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு இஸ்லாமிய தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் நடிக்கிறேன்.

அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் ஒரு படத்தில் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் இந்த நிகழ்வில் ஒரு நடிகராக இல்லாமல், குடும்பத்தில் ஒருத்தனாக வந்து கலந்து கொண்டுள்ளேன்.

படத்தயாரிப்பில் முன்பெல்லாம் ஒப்பந்தமும் சம்பளமும் வாக்குறுதியும் வாய் வார்த்தையாக இருந்தவரை சினிமா நல்லபடியாக இருந்தது. எப்போது கார்ப்பரேட் உள்ளே நுழைந்து நூறு பக்கங்களுக்கு மேல் கையெழுத்து வாங்க ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே அது கார் வியாபாரத்தை விட மோசமாகி விட்டது” என்று கூறினார்.

நடிகர் டேனி பேசும்போது…

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ஹீரோவுக்கு சமமாக எனக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து போஸ்டர்களை வெளியிட்டு எனக்கு நல்ல அறிமுகம் கிடைக்க உதவியவர் ஆர்கே சுரேஷ்.. அவருடன் முதல் முறையாக இந்த படத்தில் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி.. ராதாரவியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு கணக்கு வாத்தியார் போலவே தோன்றும் அந்த அளவுக்கு அவர் மீது பயம்” என்று கூறினார்.

எஸ் எம் டி ஷேக் ஃபரீத், கே. ஷேக் ஃபரீத் இணைந்து தயாரிக்க, தயாரிக்கிறார் ஹரீஷ் முத்தையாலா ஷெட்டி. எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராக எஸ். அபூபக்கர் பணியாற்ற .. எடிட்டிங் செய்கிறார் கோபிநாத். மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Radha Ravi

வெற்றி – ஷிவானி இணைந்த ‘இரவு’ விடியலுக்கு (ரிலீசுக்கு) ரெடியானது

வெற்றி – ஷிவானி இணைந்த ‘இரவு’ விடியலுக்கு (ரிலீசுக்கு) ரெடியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

M10 Productions சார்பில், தயாரிப்பாளர் MS முருகராஜ் தயாரிப்பில் பக்ரீத் படப்புகழ் இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், ‘எட்டு தோட்டக்கள், ஜீவி’ படப்புகழ் நாயகன் வெற்றி, பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நடிக்கும், கோஸ்ட் திரில்லர் டிராமா திரைப்படமான “இரவு” படத்தின் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் வெற்றி, தரமான படங்களை தந்து பாரட்டுக்களை குவித்த இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் “இரவு”. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நாயகியாக நடிக்கிறார்.

வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது.

அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே, இந்தத் திரைப்படம். பல பேய்க்கதைகள் வந்திருந்தாலும், இப்படம் உணர்வுகளை மையமாக கொண்டு, பரபரப்பான திரைக்கதையில், ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள்னர்.

ஓர் இரவில் நடக்கும் இக்கதை, முழுக்க சென்னை ஈ சி ஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழுவினர்
தயாரிப்பு நிறுவனம் – M10 Productions
தயாரிப்பாளர் – MS முருகராஜ்
இயக்குநர் – ஜெகதீசன் சுபு
ஒளிப்பதிவு – ஸ்ரீனிவாஸ் தயாநிதி
இசை – அரோல் கரோலி
எடிட்டிங் – CS பிரேம் குமார்
கலை – K மதன் குமார்
வசனம் – பாபு தமிழ்
பாடல் வரிகள் – ஞானகரவேல், கார்த்திக் நேதா, கருணாகரன்
ஸ்டண்ட் – ஃபயர் கார்த்திக்
நடனம் – பாபா பாஸ்கர்
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )

Iravu

More Articles
Follows