தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகி வரும் நிலையில் பல்வேறு துறைகளில் தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து வருகிறார்.
7 இங்க் ப்ரேவ்ஸ் என்ற பெயரில் தோனிக்கு சொந்தமான பீர் நிறுவனம் இயங்கி வருகிறது. மேலும் வாகனத்துறை ஆடைகள் வடிவமைப்பு துறை என பல்வேறு துறைகளிலும் அவர் முதலீடு செய்து வருகிறார்.
இவை மட்டும் இல்லாமல் விவசாயத்திலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். கோழி பண்ணை, விவசாயம் ஆகியவையிலும் முதலீடு செய்துள்ளார். விவசாயத்திற்கு உதவக்கூடிய கருடா ஏரோ ஸ்பேஸ் என்ற ட்ரோன் நிறுவனத்திலும் பங்களிப்பை கொடுத்திருந்தார்.
மேலும் திரைத்துறையிலும் அவர் ஏற்கனவே முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்திருந்தார். தோனி எண்டர்டெயின்மண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
அதன்படி தற்போது தனது முதல் படைப்பாக தமிழில் புதிய சினிமாவை உருவாக்குகிறார். அதன்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
LGM – Lets Get married ( லெட்ஸ் கெட் மேரிட் ) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க லவ் டுடே படத்தின் மூலம் புகழ்பெற்ற இவானா, நாயகியாக நடிக்கிறார்.
நதியா & யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே தோனியை வைத்து அதர்வா என்ற கிராபிக் நாவலை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் தோனி முன்னணி நடிகர் விஜய் உடன் தன் பயணத்தை ஆரம்பிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ள படத்தை தயாரிப்பது இங்கே கவனிக்கத்தக்கது.
விஜய்யின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதமாவதால் தற்போது ஒரு சிறிய பட்ஜெட் படத்தை தோனி தயாரிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Ivana joined Let’s Get Married movie