‘கலைமாமணி’ விருதை பறிச்சிடுவாங்களோ..? பயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan (2)தமிழக அரசின் கலை மற்றும் கலாச்சாரத்துறை சார்பாக ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, எடிட்டர் ஆண்டனி, தயாரிப்பாளர் தாணு, ஐசரி கணேஷ் உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை பிப்ரவரி 20ல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலைஞர்களுக்கு வழங்கினார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தின் SO BABY’ என்ற பாடலை மட்டும் நாளை பிப்ரவரி 25ல் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ புரோமாவில் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் & இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் சிவகார்த்திகேயனும் நடித்திருந்தார்.

இந்த ஜாலியான வீடியோவில் சிவகார்த்திகேயனை CLASSICAL & WESTERN கலந்த பாடலை எழுத சொல்கின்றனர்.

தமிழக அரசு கொடுத்த ‘கலைமாமணி’ விருதை பறிக்க வச்சிடுவாங்களோ? என சிவகார்த்திகேயன் சொல்வது போல காட்சிகள் உள்ளன.

இதற்கு முன் வெளியான ‘செல்லமே’ பாடலுக்கும் தடை செய்யப்பட்ட ‘டிக் டாக்’ செயலியை வைத்து சூப்பர் புரோமோ வெளியிட்டு இருந்தனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘டாக்டர்’ படத்தில் ப்ரியங்கா அருள், வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

அடுத்த மாதம் மார்ச் 26ல் தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

Interesting promo on Doctor next single

Overall Rating : Not available

Latest Post