4 மாத சூட்டிங்கை நிறைவு செய்த ‘லியோ’..; படக்குழுவுக்கு லோகேஷ் நன்றி

4 மாத சூட்டிங்கை நிறைவு செய்த ‘லியோ’..; படக்குழுவுக்கு லோகேஷ் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.

இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

சமீபத்தில் ‘லியோ’ படத்தில் தனக்கான காட்சிகளை நடிகர் விஜய் நிறைவு செய்தார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கடந்த 6 மாதமாக நடைபெற்று வந்த ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘6 மாதங்களில் வெறும் 125 நாட்கள் படப்பிடிப்பு’ என தெரிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

மேலும், ‘லியோ’ படத்தை 19 அக்டோபர் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

leo shooting completed director lokesh kanagaraj tweets

ரியல் மாவீரன்.: சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்கம்

ரியல் மாவீரன்.: சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது படங்களுக்கு குழந்தைகள் மத்தியிலும் குடும்பப் பெண்களின் மத்தியிலும் பலத்த வரவேற்பு உள்ளது.

ஒரு பக்கம் நடிகராக பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் இவரது படங்களையும் இளம் இயக்குனர்களுக்கும் இளம் நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து படங்களை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘மாவீரன்’ படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளர்கள் படும் வேதனையை பற்றி சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.

அவரது பேச்சில் “தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் தலையிடாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தலாமே என என்னிடம் பலரும் சொல்கிறார்கள்.

ஆனால் என்னை பொறுத்தவரை ஒரு நடிகர் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் இது போன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

நாம் நடிகர்.. நமக்கு சம்பளம் வந்தால் போதும், தயாரிப்பாளருக்கு பிரச்சினை வந்தால் நமக்கென்ன என ஒதுங்கி இருக்க முடியாது.

அது நான் நடித்த படம். அதன் லாப நஷ்டங்களில் எனக்கும் பங்கு உண்டு. அந்த படத்திற்கு வரும் பிரச்சினைகளை முடிந்த வரை தீர்த்துவைப்பது எனது கடமை என்று நினைக்கிறேன்” என்று பேசியிருந்தார்.

இவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தயாரிப்பாளர்கள் மத்தியிலும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைத்தன.

இதனையடுத்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி ராமநாராயணன்…

“தயாரிப்பாளர்கள் படும் இன்னல்களை மனதில் வைத்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மாவீரன்

Producer Council Thanks letter to Sivakarthikeyan

பிரச்சனைகள் வருது.. மன உளைச்சல் தருது.; ‘லவ்’ விழாவில் பரத் வேதனை

பிரச்சனைகள் வருது.. மன உளைச்சல் தருது.; ‘லவ்’ விழாவில் பரத் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RP Films சார்பில் RP பாலா தயாரித்து இயக்க, பரத் – வாணி போஜன் நடிப்பில் காதல் த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் ‘லவ்”.

ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் நடிகர் பரத் பேசியதாவது…

இங்கு எனது 50 வது படத்தில் உங்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியது மகிழ்ச்சி. என் திரை வரலாற்றில் மோசமான படங்கள் செய்த போதும், நீ நல்லா பண்ணியிருக்க, நல்லா பண்ணு, நல்லா வருவ என எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் உங்களுக்கு நன்றி.

இந்தப் பயணம் மிகப்பெரியது. ஷங்கர் சார், ஏ எம் ரத்னம் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் செய்யும் போது மிக உற்சாகத்துடன் வேலை பார்க்கிறோம்.

ஆனால் படம் ரிலீஸ் என வரும் போது பெரும் பிரச்சனைகள் வந்து நிற்கிறது, மன உளைச்சல்கள் தருகிறது. சினிமா இரண்டாகப் பிரிந்து போயிருக்கிறது.

ஆனால் நான் எப்போதும் என் வேலையை சிறப்பாக செய்து வருகிறேன், அது தான் முக்கியம். இந்தப் படம் எங்கேயும் உங்களுக்கு போரடிக்காது, ஒரு சிறப்பான படம் பார்க்கும் அனுபவம் தரும். என் இயக்குநர் தயாரிப்பாளர் RP பாலா சாருக்கு நன்றி. படக்குழுவினருக்கு நன்றி.

லவ்

Bharath emotional speech Love Trailer Launch

சினிமா எடுப்பதை விட ரிலீஸ் செய்வது சிரமம்.. – இயக்குநர் RP பாலா

சினிமா எடுப்பதை விட ரிலீஸ் செய்வது சிரமம்.. – இயக்குநர் RP பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RP Films சார்பில் RP பாலா தயாரித்து இயக்க, பரத் – வாணி போஜன் நடிப்பில் காதல் த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் ‘லவ்”.

ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் இசையமைப்பாளர் ரோனி ரஃபேல் பேசியதாவது…

தமிழில் இது எனது முதல் படம். கேரளாவில் நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளேன்.

மலையாளப் படம் மூலம் தான் பரத் சார் அறிமுகம், பாலாவும் அறிமுகம். தமிழில் வேலை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. பரத் சாரின் 50வது படத்தில் வேலை பார்ப்பது மகிழ்ச்சி.

இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குனர் RP பாலாவுக்கு நன்றி. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளன. படமும் நன்றாக வந்துள்ளது, படம் பார்த்து ஆதரவளியுங்கள் நன்றி.

இயக்குநர் RP பாலா பேசியதாவது…

‘லவ்’ படம் ஜூலை 28 ஆம் தேதி வருகிறது. இப்போது படத்தை எடுப்பதை விட படத்தை ரிலீஸ் செய்வது கடினமாக இருக்கிறது.

இப்படத்தின் டீம் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். பரத் படம் முழுவதும் பெரும் உறுதுணையாக இருந்தார். முத்தையா சார் இன்று வரை இப்படத்திற்கு வேலை செய்கிறார். அவர் படம் போல் பார்த்துக் கொள்கிறார்.

அவருக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இசையமைப்பாளர் மரைக்காயர் படத்தில் வேலை செய்த போது, இந்தப்படம் பற்றிச் சொன்னேன். எனக்காக இந்த படத்தில் பணியாற்றியுள்ளார்.

டேனியல் மிகச் சிறந்த நண்பர். பரத் என்னை நம்பி 50வது படம் தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது, உங்களுக்குப் பிடிக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

Facing lot of problems to release Movie says RP Bala

‘லவ்’ முழுதிருப்தி.. ரொம்ப புடிச்சிருக்கு..; நடிகை வாணி போஜன் ஓபன் டாக்

‘லவ்’ முழுதிருப்தி.. ரொம்ப புடிச்சிருக்கு..; நடிகை வாணி போஜன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RP Films சார்பில் RP பாலா தயாரித்து இயக்க, பரத் – வாணி போஜன் நடிப்பில் காதல் த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் ‘லவ்”.

ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் நடிகை வாணி போஜன் பேசியதாவது..

நான் நிறையப் படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் சில படங்களே மனதிற்கு முழு திருப்தியை கொடுக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது.

இந்தப் படத்தில் நானும் பரத்தும் நிறைய சண்டைகள் போட்டுள்ளோம், அடிகளும் பட்டது. ஆனால் அது படத்திற்காக மட்டும் தான், படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

நடிகை சுயம் சித்தா பேசியதாவது…

எனக்குத் தமிழ் கொஞ்சமாகத்தான் தெரியும். கோவிடுக்கு பிறகு வந்த முதல் படம் இது. எனக்கு மிகவும் நெருக்கமான படம், பட வாய்ப்பு தந்த RP பாலா சாருக்கு நன்றி, படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

Love is full satisfied says Vani Bhojan

டெய்லி பேட்டா போலதான் சினிமா சான்ஸ் வருது… – நடிகர் டேனியல்

டெய்லி பேட்டா போலதான் சினிமா சான்ஸ் வருது… – நடிகர் டேனியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RP Films சார்பில் RP பாலா தயாரித்து இயக்க, பரத் – வாணி போஜன் நடிப்பில் காதல் த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் ‘லவ்”.

ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மூத்த பத்திரிக்கையாளர்கள் இணைந்து “லவ்” படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.

பாடலாசிரியர் AA PA ராஜா பேசியதாவது..

முதலில் பிஜி முத்தையா சார் தான் இந்த படத்திற்காக என்னை கூப்பிட்டார். இயக்குநர் யாரெனக் கேட்டபோது RP பாலா என்றார். அவரே பல படங்களுக்கு பாடல்கள் எழுதியவர், மிகச்சிறந்த பாடலாசிரியர். அவர் என்னை ஏன் கூப்பிடுகிறார் என்று தோன்றியது. பாடல் எழுதத் தெரிந்த இயக்குநரிடம் பணிபுரிவது மிகக் கடினம். ஆனால் அவர் நான் பிஸியாக இருக்கிறேன், நீங்கள் எழுதுங்கள் என்றார்.

வைரல் வரிகள் இல்லாமல் முழுக்க தமிழில் பாட்டுக் கேட்ட முதல் இயக்குநர் இவர் தான். அதுவே மிக மகிழ்ச்சியாக இருந்தது. படத்தின் பாடல் அற்புதமாக வந்துள்ளது, பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது…

படம் பார்த்தேன், நன்றாக உள்ளது. பரத் மற்றும் கதாநாயகியின் கடைசி 20 நிமிட காட்சிகள் அருமையாக வந்துள்ளது. பரத் சாரின் 50வது படத்தில் பணிபுரிவது மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்பளித்த இயக்குநர் RP பாலா சாருக்கு நன்றி.

டேனியல் பேசியதாவது…

இப்போதெல்லாம் யாரும் கதை சொல்வதில்லை, போன் செய்து, என்ன லுக்? ஃப்ரியா? என கேட்டுவிட்டு, ஷூட்டிங் கூப்பிட்டு விடுகிறார்கள். டெய்லி பேட்டா போல் வேலை வருகிறது.

இப்போதைய சினிமா அந்த மாதிரி மாறிவிட்டது. லவ் படம் நன்றாக வந்துள்ளது இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா பேசியதாவது…

ஒரு டீமோட பெரிய சக்ஸஸ் என்பது அந்த டீம் வெற்றி பெற்று மீண்டும் அதே டீம் சேர்ந்து வேலை பார்ப்பது தான். அது போல் “லவ்” படம் வெற்றி பெற்று இதே டீம் மீண்டும் வேலை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் அனைவருக்கும் நன்றி.

Nowadays cinema changed lot says Daniel

More Articles
Follows