விஷாலை கிண்டலடித்த கேமியோ பிலிம்ஸின் இமைக்கா நொடிகள் என்னாச்சு..?

imaikka nodigalஅதர்வா, நயன்தாரா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இமைக்கா நொடிகள்.

டிமான்டி காலனி புகழ் அஜய்ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இப்படம் வெளியாவதற்கு முன்பே அதாவது 4 நாட்களுக்கு முன்பே இப்படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காண்பிப்பதாக தயாரிப்பாளர் இதன் பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

மேலும் பேசும்போது… விஷால் தன் இரும்புத் திரை படத்தை முதலில் திரையிடும் போது பாதி படம்தான் காண்பித்தார். ஆனால் முழுப்படத்தை ஆகஸ்ட் 26ஆம் தேதியே திரையிடுவோம் என பேசியிருந்தார்.

ஆனால் இமைக்கா நொடிகள் படத்தை இதுவரை திரையிடவில்லை.

ஒருவேளை நாளை திரையிட முடிவி செய்துவிட்டார்களோ? என்னவோ?

சொன்ன வாக்கு என்னாச்சு சார்..?

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post