JUST IN இன்று கோயிலுக்கு சென்றேன்.; கமலை சந்தித்த கவின்

JUST IN இன்று கோயிலுக்கு சென்றேன்.; கமலை சந்தித்த கவின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின்.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

அதன் பின்னர் சினிமாவிலும் நாயகனாக நடிக்க தொடங்கினார்.. நட்புனா என்னானு தெரியுமா.? மற்றும் லிப்ட் ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.

நேற்று அவரது நடிப்பில் 3வது திரைப்படமாக ‘டாடா’ வெளியானது.

இந்த படத்திற்கு அனைத்து தரப்பு மக்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களை வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இன்று பிப்ரவரி 11ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் நடிகர் கவின். அந்த புகைப்படங்களை பகிர்ந்து “இன்று கோயிலுக்கு சென்றேன்..” என தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்..

கடவுளை வணங்காத பகுத்தறிவாளர் கமல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனாலும் கமலை ஆண்டவரே என ரசிகர்கள் அழைப்பது வழக்கம். இந்த நிலையில் கமல் சந்திப்பு குறித்து இன்று கோயிலுக்கு சென்று வந்ததாக கவின் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Went to temple today 🙂
@ikamalhaasan sir ??????♥️ https://t.co/Oz6A62Wp4s

I went to the temple today.; Kavin tweets after meeting Kamal

குடும்பத்தினருடன் தியேட்டரில் படம் பார்த்த ஷாலினி அஜீத் .. என்ன படம் தெரியுமா ?

குடும்பத்தினருடன் தியேட்டரில் படம் பார்த்த ஷாலினி அஜீத் .. என்ன படம் தெரியுமா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாலினி, அவரது சகோதரி ஷாமிலி மற்றும் அவரது மகள் அனுஷ்கா ஆகியோர் கடைசியாக பொங்கல் பண்டிகையின் போது அஜீத் குமாரின் ‘துணிவு’ படத்தின் வெளியீட்டின் போது திரையரங்குகளில் காணப்பட்டனர். இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் வெளியான கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடித்த ‘DADA’ படத்தைப் பார்க்க மூவரும் மீண்டும் திரையரங்குகளுக்குச் சென்றுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது . கணேஷ் கே பாபு இயக்கிய DADA திரைப்படம் தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

Shalini Ajith papped along with her family during a theatre visit

குளிரும் பனியில் காஷ்மீர் ; எரியும் நெருப்பில் ‘லியோ’ படம்

குளிரும் பனியில் காஷ்மீர் ; எரியும் நெருப்பில் ‘லியோ’ படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘லியோ’.

இந்தப் படத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது, தற்போது படக்குழு காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரில் படப்பிடிப்பிற்கு இடையே ‘லியோ’ குழுவினர் கேம்ப்ஃபயர் (Campfire) செய்து மகிழ்ந்த புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் விஜய், கவுதம் மேனன், லோகேஷ் கனகராஜ் மற்றும் ‘லியோ’ படக்குழு உறுப்பினர்களும் உள்ளனர்.

‘Leo’ team enjoy campfire in Kashmir during

ரிலீசான முதல் நாளே ‘டாடா’ இயக்குனருக்கு லைக்கா மூலம் அடித்த லக்

ரிலீசான முதல் நாளே ‘டாடா’ இயக்குனருக்கு லைக்கா மூலம் அடித்த லக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவின், அபர்ணாதாஸ், வி.டிவி கணேஷ் ஆகியோர் நடித்த படம் ‘டாடா’.

கணேஷ் கே பாபு இயக்கிய இந்த படம் இன்று பிப்ரவரி 10ஆம் தேதி வெளியானது.

இந்த படம் வெளியாவதற்கு முன்னரே பத்திரிகையாளர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டி இருந்தனர்.

இன்று மக்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் படம் ரிலீசான முதல் நாள் இன்று டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபுவுக்கு லைக்கா நிறுவனம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

லைக்கா தயாரிக்க உள்ள அடுத்த படத்தை டாடா இயக்குனர் இயக்குவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

படம் வெளியான முதல் நாளே ஒரு இயக்குனருக்கு பிரபல நிறுவனம் மூலம் அங்கீகாரம் கிடைத்திருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Dada director Ganesh Babus next film with Lyca

ராஜஸ்தானிலும் ரஜினி ராஜ்ஜியம்.; வைரலாகும் ‘ஜெயிலர்’ சூட்டிங் ஸ்டில்ஸ்

ராஜஸ்தானிலும் ரஜினி ராஜ்ஜியம்.; வைரலாகும் ‘ஜெயிலர்’ சூட்டிங் ஸ்டில்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் உள்ள பல மொழி சினிமா நட்சத்திரங்கள் நடித்து வரும் திரைப்படம் ‘ஜெய்லர்’.

ரஜினிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதுவரை 80% ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஜெயிலர்

தற்போது ராஜஸ்தானில் ஜெய்சல்மார் என்ற இடத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர்.

இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அங்கே ஆக்சனில் அடித்து வீசப்பட்ட வாகனங்கள் கவிழ்ந்து கிடப்பதாக காணப்படுகிறது.

இத்துடன் நெல்சன் கெத்தாக நிற்கும் ஒரு புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது.

மேலும் ரஜினியுடன் போட்டோ எடுக்க ரசிகர்கள் குவிந்து வருவதையும் அங்கே காண முடிகிறது.

ஜெயிலர்

Rajinis Jailer leaked stills goes viral

இயக்குனர் விஜய் ஆண்டனி-யின் ‘பிச்சைக்காரன் 2’ பட ஸ்னீக் பீக் வெளியானது

இயக்குனர் விஜய் ஆண்டனி-யின் ‘பிச்சைக்காரன் 2’ பட ஸ்னீக் பீக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, கடந்த மாதம் மலேசியாவில் தனது வரவிருக்கும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் படப்பிடிப்பின் போது காயமடைந்தார்.

இந்த மாத தொடக்கத்தில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, ஜான் விஜய் மற்றும் ஹரீஷ் பரேடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் இப்போது படத்தின் முதல் நான்கு நிமிடங்களை வெளியிட்டு, பார்வையாளர்களுக்கு ஒரு ஸ்னீக் பீக் கொடுத்துள்ளனர்.

மேலும், விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் சரியான வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

vijay antony’s ‘Pichaikkaran 2’ sneak peek release

More Articles
Follows