தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அரசியல் கட்சி அறிவித்த பின்னர் ரஜினி மீடியாக்களிடம் மனம் திறந்து பேசி வருகிறார்.
கட்சி அறிவிப்பு, ரஜினி மன்றம் இணையதளம் ஆகியவற்றை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த்.
அவர் பேசியதாவது..
1996-ம் ஆண்டு காலத்திலேயே மீடியா பயம் எனக்கு வந்துடுச்சி.
இப்போ அரசியல் களம் வந்துவிட்டேன். எப்படி மீடியாக்களை சமாளிப்பது என்றே எனக்கு தெரியல.
சொல்ல வேண்டியதை எல்லாம் கூட்டத்திலே சொல்லிடுறேன். அப்புறம் பேட்டியில என்ன சொல்றதுனு குழப்பமா இருக்கு. கேமராவ பாத்ததும் டக்குனு பேச முடியல.
அரசியலுக்கு நான் புதுசு. மீடியா ஒத்துழைப்பு இல்லாம நான் எதுவுமே செய்யமுடியாது.
எனவே நான் அப்பப்போ ஏதாவது தப்பு செஞ்சிருந்தா தயவுசெஞ்சு மன்னிசுக்கோங்க.
எல்லோருக்கும் பொறுப்பு இருக்கு. எல்லாமே தமிழகத்தில் இருந்து தான் தொடங்குது.
இங்கிருந்து தொடங்கி, அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்துனும்னு எனக்கு ஆசை. அது இந்த தலைமுறையில் நடக்கனும்னு எல்லாரும் ஆசைப்படுறாங்க.
ஒரு முறையான பத்திரிகையாளர் சந்திப்பு விரைவில் நடக்கும். அப்போது உங்களை சந்தித்து நிறைய பேசறேன்.” இவ்வாறு ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசினார்.
I want to create Political Revolution in Tamilnadu Rajini open talk