‘விஜய்-அஜித் இப்படி வருவாங்கன்னு நான் எதிர்பாக்கல..’ பிரபல நடிகை

sanghaviவிஜய், அஜித்தின் ஆரம்ப கால படங்களில், அவர்களுடன் நடித்தவர் சங்கவி.

அதன்பின்னர் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர், திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார்.

தற்போது 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், கொளஞ்சி என்ற படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்து வருகிறார்.
இதில் இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்து வருகிறார்.

இப்படம் குறித்த இவரது சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

கொளஞ்சி படம் எனக்கு, 99வது படம். இரண்டு குழந்தைகளுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.

புஷ்பா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். நாத்திகவாதியாக சமுத்திரக்கனி நடிக்கிறார். தன்ராம் சரவணன் இயக்குகிறார்.

அஜித், விஜய்யுடன் நடித்தது குறித்து கேட்டதற்கு…

அமராவதி படத்தில் அஜித்துடன் நடிக்கும்போது நான் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

அதன்பின்னர் விஜய்யுடன் பல படங்களில் நடித்தேன்.

அவர்கள் இருவரும் இப்படி இவ்வளவு பெரிய நடிகர்களாக வருவார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது.
அவர்களின் கடின உழைப்பும், விடா முயற்சியுமே இதற்கு காரணம்.” என்றார் சங்கவி

Overall Rating : Not available

Related News

நடிகர் அஜித்குமார் அறிமுகமான ‘அமராவதி’ படம்…
...Read More
அமராவதி படத்தின் முலம் திமிழ் சினிமாவில்…
...Read More
அமராவதி படத்தில் அறிமுகமாகி இன்று 56…
...Read More

Latest Post