தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அமராவதி படத்தில் அறிமுகமாகி இன்று 56 படங்களில் நடித்துள்ளார் அஜித்.
விரைவில் 57வது படத்தில் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இவரை அமராவதி படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் செல்வா.
இப்படம் 1993ஆம் ஆண்டு வெளியானது. இது இயக்குனரின் இரண்டாவது படமாகும்.
மேலும் கர்ணா, பூவேலி, உன்னருகே நானிருந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார் செல்வா.
இந்நிலையில் இன்று அதிகாலை செல்வாவின் மனைவி மரணமடைந்துள்ளார்.
அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு சென்னை, முகப்பேரில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.