எனக்கும் இயக்குனர் சரவணனுக்கும் ஒரே அலைவரிசை – இசையமைப்பாளர் சத்யா

எனக்கும் இயக்குனர் சரவணனுக்கும் ஒரே அலைவரிசை – இசையமைப்பாளர் சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரவணன் இயக்கத்தில் தர்ஷன் மகிமா இணைந்துள்ள படம் ‘நாடு’.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இசையமைப்பாளர் சத்யா பேசும்போது…

“எனக்கு இயக்குனர் சரவணனுக்கும் அலைவரிசை ஒரே மாதிரி இருப்பதால் தான் தொடர்ந்து அவருடன் பணியாற்றி வருவது எளிதாக இருக்கிறது. இந்தப்படத்தை எடுத்து முடித்தபின் பார்த்தபோது இதற்கு பின்னணி இசை மிகப்பெரிதாக தேவைப்படுகிறது என்பதை உணர முடிந்தது. அதற்கேற்ற வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

நாம்தான் டெக்னாலஜி ஆதிவாசிகள்; கலை இயக்குனர் இளையராஜா குமுறல்

நாம்தான் டெக்னாலஜி ஆதிவாசிகள்; கலை இயக்குனர் இளையராஜா குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரவணன் இயக்கத்தில் தர்ஷன் மகிமா இணைந்துள்ள படம் ‘நாடு’.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலை இயக்குனர் இளையராஜா பேசும்போது…

“இந்த படத்திற்கு நாடு என டைட்டில் வைத்திருந்ததை பார்க்கும்போது எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. படப்பிடிப்பு நடக்கும் லொக்கேசனுக்கு சென்றபோதுதான் அங்கு 28 நாடுகளை எனக்கு காட்டினார் இயக்குனர் சரவணன்.

அங்குள்ளவர்கள் சமுதாயம், மொழி, இனம் என தங்களுக்குள் ஒரு நாடாக உருவாக்கி வாழ்ந்து வருகின்றனர். அதே சமயம் அவர்கள் எளிமையான மக்கள்.. அங்கே படப்பிடிப்பு நடந்த நாட்களில் நான் கவனித்த அளவில் ஆதிவாசிகள் அவர்கள் அல்ல.. இங்கே இருக்கும் நாம்தான் டெக்னாலஜி ஆதிவாசிகள் என்பதை புரிந்து கொண்டேன்” என்று கூறினார்.

சினிமா காலடி படாத இடங்களில் ‘நாடு’ படப்பிடிப்பை நடத்தினோம் – ஒளிப்பதிவாளர் சக்திவேல்

சினிமா காலடி படாத இடங்களில் ‘நாடு’ படப்பிடிப்பை நடத்தினோம் – ஒளிப்பதிவாளர் சக்திவேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரவணன் இயக்கத்தில் தர்ஷன் மகிமா இணைந்துள்ள படம் ‘நாடு’.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒளிப்பதிவாளர் சக்திவேல் பேசும்போது….

“கொல்லிமலை பின்னணியில் இந்தப்படத்தின் கதை நிகழ்கிறது என்று சொன்னபோது, நிச்சயமாக இதை வித்தியாசமான படமாக உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அதற்கேற்றபடி இதுவரை சினிமாவின் காலடி படாத பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்” என்று கூறினார்.

தர்ஷன் யாருன்னே தெரியாது.; நான் கண்ட உண்மை சம்பவமே ‘நாடு’ – இயக்குனர் சரவணன்

தர்ஷன் யாருன்னே தெரியாது.; நான் கண்ட உண்மை சம்பவமே ‘நாடு’ – இயக்குனர் சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அழகுச்சிலை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து இயக்குனர் சரவணனுடன் இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சத்யா தான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் இளையராஜா இந்த படத்தின் கலை வடிவமைப்பை கவனித்துள்ளார். பொன் கதிரேசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்தப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நவம்பர் 11 மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குனர் சரவணன் பேசும்போது,

“இப்போது சினிமாவில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ரொம்பவே புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மை வாய்ந்த கதாபாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. நாங்கள் அதிலிருந்து விலகி எளிய மனிதர்கள் பற்றிய கதையாக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்சனையை பேசி உள்ளோம்.

கொல்லிமலை பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கொல்லிமலைக்கு சென்றிருந்த சமயத்தில் நேரிலேயே நான் கண்ட ஒரு நிகழ்வு என் மனதை பாதித்தது. ரொம்ப நாட்களாக மனதில் இருந்த அந்த நிகழ்வை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கினேன்.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த தர்ஷனை அவர் ஆடிஷன் வருவதற்கு முன்புவரை நான் பார்த்ததே இல்லை.. காரணம் நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை.

ஆடிஷனுக்கு வருவதற்கு முன்பு கூட அவரது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை தான் காட்டினார்கள். ஆனால் நேரில் அவரை பார்த்ததுமே இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியான நபர் என்று தோன்றிவிட்டது.

உடனே அவரிடம் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டேன். அதேபோல இந்த படத்தின் ஒர்க்ஷாப்புக்கு வரும்போது பேண்ட் சர்ட் எல்லாம் போடாமல் லுங்கியை வாங்கி கட்டிக்கொண்டு வாருங்கள் என கூறிவிட்டேன்.

அதிலிருந்து இந்தக்கதையுடன் அவர் தினசரி பயணிக்க துவங்கி விட்டார். அதனால்தான் படப்பிடிப்பில் கூட அவர் ஸ்கிரிப்ட் பேப்பர் இல்லாமல் எல்லா வசனங்களையும் மனப்பாடமாக பேச முடிந்தது” என்று கூறினார்.

யம்மாடி… ‘யசோதா’ கலெக்சன் இவ்ளோவா.? சந்தோஷத்தில் சமந்தா & டீம்

யம்மாடி… ‘யசோதா’ கலெக்சன் இவ்ளோவா.? சந்தோஷத்தில் சமந்தா & டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதையின் நாயகியாக சமந்தா நடித்த ‘யசோதா’ படம் நேற்று நவம்பர் 11ஆம் தேதி வெளியானது.

தமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் 3டி படம் `அம்புலி’யை எடுத்த ஹரி மற்றும் ஹரிஷ் என்ற இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கியிருந்தனர்.

Surrogacy என்ற வாடகைத்தாய் என்பதை கதைக்களமாக்கி இந்த படத்தை கொடுத்துள்ளனர்.

இத்துடன் எமோசன், சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் சென்டிமென்ட் மெடிக்கல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் என அனைத்தையும் கலந்த ஒன்றாக இந்த ‘யசோதா’ வந்திருக்கிறாள்.

சமந்தா உடன் வரலட்சுமி, முரளி சர்மா, உன்னி முகுந்தன், சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.

நேரடி தெலுங்கு படமான `யசோதா’வை தமிழில் டப்பிங் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவகும் ரூபாய் 6.32 கோடி வசூலை அள்ளி உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

காதல் ஜோடி கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் தேதி அப்டேட்

காதல் ஜோடி கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1960 மற்றும் 70களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கியவர் முத்துராமன்.

இவரது மகன் நவரச நாயகன் கார்த்திக் 1980 மற்றும் 90களில் முன்னணி நடிகராக விளங்கினார்.

தற்போது 2020களில் கார்த்திக்கின் மகன் கௌதம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

அதன்பின்னர் ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகா தேவகி, தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

தன் தந்தை கார்த்திக் உடன் மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தில் கெளதம் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தையா இயக்கிய ‘தேவராட்டம்’ படத்தில் நடித்த போது அந்த பட நாயகி மஞ்சிமா மோகனுடன் காதல் கொண்டார்.

சில தினங்களுக்கு முன் கௌதம் மற்றும் மஞ்சிமா ஆகிய இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இவர்களின் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நவம்பர் 28 இல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Gautham Karthik – Manjima Mohan Wedding Date Update is here

More Articles
Follows