கமலின் அரசியல் (ஆரம்ப) பயணத்தில் ஆர்வமில்லாத ஸ்ருதி..?

கமலின் அரசியல் (ஆரம்ப) பயணத்தில் ஆர்வமில்லாத ஸ்ருதி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan and Shruti Haasanநாளை மறுநாள் பிப்ரவரி 21ஆம் தேதி தனிக்கட்சி தொடங்கி தன் கட்சி பெயர் மற்றும் கட்சி கொள்கைகளை அறிவிக்க உள்ளார் கமல்ஹாசன்.

இதனால் பட சூட்டிங்கை நிறுத்தி வைத்துவிட்டு பல அரசியல் பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

மேலும் தன் மன்ற நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கு அவரது மகள் ஸ்ருதிஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது…

“எனக்கு அரசியல் தெரியாது. அப்பாவின் அரசியலுக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு.

ஆனால், அவருடன் பயணிக்கும் திட்டம் எதுவுமில்லை. பிப்ரவரி 21ஆம் தேதி எனக்கு சூட்டிங் இருப்பதால் அன்று நான் ராமேசுவரம் செல்லவில்லை” என்று தெரிவித்தார்.

காலா-வுக்கு முன் காத்திருக்கும் சவால்கள்

காலா-வுக்கு முன் காத்திருக்கும் சவால்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaalaa posterசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் ரஜினி படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். இந்த முறை ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டதால் காலாவிற்கு விண்ணை முட்டும் உச்சகட்ட எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படமும் அரசியல் சார்ந்தே இருக்கும் என கூறப்படுகிறது.

எனவே தமிழகத்தில் ‘காலா’வுக்கு போட்டியாக வேறெந்த படமும் வெளியாகப் போவது கிடையாது.

இதற்கு முன் அறிவிக்கப்பட்டு இருந்த ‘மிஸ்டர். சந்திரமௌலி’ படத்தின் வெளியீடு தேதியை மாற்றிக்கொள்வதாக அந்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்துவிட்டது.

தமிழ்நாட்டை தாண்டி ஆந்திராவிலும் ரஜினிக்கு மிகப்பெரிய மார்கெட் உள்ளது.

ஆனால் மகேஷ்பாபுவின் அரசியல் த்ரில்லர் படமான ‘பரத் அனே நேனு’ படமும் (ஏப்ரல் 26ம் தேதி) வெளியாகிறது.

இதில் மகேஷ்பாபு முதல்வராக நடித்து இருப்பதால் இந்த தேதியை மாற்ற முடியாது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டிஸ்னி, ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார்’ என்ற தங்களின் பிரம்மாண்ட படைப்பை அமெரிக்காவில் வெளியிடும் முன்னரே ஏப்ரல் 27 அன்று இந்தியாவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ‘அவெஞ்சர்ஸ்’ படம் திரையிடப்படவுள்ளது.

மேலும் சில ஹிந்தி திரைப்படங்களும் காலாவுக்கு போட்டியாக வரும் என சொல்லப்படுகிறது.

தானா சேரனும் கூட்டம்; காசுக்காக வரக்கூடாது.. கமல் கட்டளை

தானா சேரனும் கூட்டம்; காசுக்காக வரக்கூடாது.. கமல் கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal art60 வருடங்களுக்கு மேலாக தன் நடிப்பால் இந்திய ரசிர்களை கவர்ந்த நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 21-ம் தேதி தொடங்குகிறார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் வீட்டில் இருந்து தன் பயணத்தை தொடங்க உள்ளார்.

அன்றைய தினம் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார். பின்னர் பிப்ரவரி 23-ம் தேதி திண்டுக்கல்லுக்கு வருகிறார்.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

இதில்… திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்துகொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பொதுக்கூட்டத்திற்கு வருமாறு கட்டாயப்படுத்த கூடாது.

யாருக்கும் உணவு, பணம் கொடுத்து அழைத்து வரக்கூடாது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாம்.

இது கமல்ஹாசனின் கட்டளையாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kamalhassan political tour news updates

விசுவாசம் சூட்டிங் தள்ளிப்போவதால் டென்ஷனாகும் அஜித் ரசிகர்கள்

விசுவாசம் சூட்டிங் தள்ளிப்போவதால் டென்ஷனாகும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith fans disappointed due to Viswasam shooting postponedவிவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள படம் விசுவாசம்.

கடந்த சில வருடங்களாகவே அஜித் பட சூட்டிங் முடிவடையும் தருவாயில்தான் படத்தின் தலைப்பையே வெளியிடுவார்கள்.

ஆனால் தற்போது பட சூட்டிங் தொடங்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே படத்தலைப்பை அறிவித்துவிட்டது சத்யஜோதி நிறுவனம்.

சிவா இயக்கும் இப்படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க இமான் இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் ஜனவரியில் தொடங்கப்படும் என தெரிவித்தனர். பின்னர் பிப்ரவரி ஆனது.

தற்போது பிப்ரவரி மாதமே முடிவடையும் நிலையில் இருப்பதால் மார்ச் மாதத்திற்கு இதன் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்படம் இந்தாண்டு 2018 தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி அடிக்கடி சூட்டிங்கை தள்ளி வைப்பதால் சொன்ன நேரத்தில் படம் வெளியாகுமா? என அஜித் ரசிகர்கள் டென்ஷனில் இருக்கிறார்களாம்.

Ajith fans disappointed due to Viswasam shooting postponed

விஜய் நடித்த மெர்சல் படத்தின் சாதனைகள்

விஜய் நடித்த மெர்சல் படத்தின் சாதனைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijayதளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியையும் ,வசூல் சாதனையும் படைத்தது.
தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட
டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது .
டீசர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் Views தொட்டு சாதனை படைத்துள்ளது .

தென்னிந்திய அளவில் அனைவராலும் U-TUBE இல் பார்க்கப்பட்ட விடீயோஸ் மற்றும் அதிக LIKES பெற்ற வீடியோகளில் மெர்சல் படம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

*அதிக அளவில் பார்க்கப்பட்ட லிரிக்ஸ் சாங்

*அதிக அளவில் லைக் செய்யப்பட்ட லிரிக்ஸ் சாங்

*அதிக அளவில் பார்க்கப்பட்ட ஆடியோ டீஸர்

*அதிக அளவில் லைக் செய்யப்பட்ட வீடியோ சாங்

*மிக விரைவில் பார்க்கப்பட்ட 20 மில்லியன் வீடியோ சாங்

*அதிக அளவில் லைக் செய்யப்பட்ட ப்ரோமோ சாங்

தளபதி விஜயின் கடைசி 10 படங்களில் கேரளா BOX OFFICE
காலெக்க்ஷன்களில் மெர்சல் படமானது 21.9 கோடி வசூல் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

தமிழ் நடிகர்களில் U-Tubeல் 25 வீடியோஸ் 100K LIKES பெற்றுள்ள ஒரே நடிகர் விஜய் மட்டுமே.இதில் மெர்சல் திரைப்படத்தின் 16 வீடியோ 100K LIKES பெற்றுள்ளது.

மெர்சல் தமிழ் மொழி வீடியோ சாங்ஸ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த அதிரிந்தி வீடியோ சாங்ஸ் இரண்டும் சேர்ந்து 1 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

மிக விரைவில் U -TUBEல் பார்க்கப்பட்ட 10 மில்லியன் வீடியோ சாங்ஸ் லிஸ்டில் ஆளப்போறன் தமிழன் பாடல் 20 நாளில் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

உலக அளவில் மிக விரைவில் 150K லைக்ஸ் பெற்ற டீசரில் மெர்சல் படத்தின் டீஸர் முதல் இடத்தில உள்ளது மற்றும் ஆளப்போறன் தமிழன் ஆடியோ டீஸர் தென்னிந்திய அளவில் 150K லைக்ஸ் பெற்று முதல் இடம் வகிக்கிறது.ஆளப்போறன் தமிழன் லிரிக் வீடியோ
சாங் மற்றும் வீடியோ சாங் மிக விரைவில் 150K லைக்ஸ் பெற்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

தென்னிந்திய சினிமா வில் மிக விரைவில் 50K லைக்ஸ் பெற்ற பட டீசர்களில் மெர்சல் டீஸர் 5 நிமிடத்தில் 50K லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

மெர்சல் படத்தின் அனைத்து பாடல்களும் சேர்த்து 400K லைக்ஸ் பெற்றுள்ளது,மொத்தம் 2.34 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.

2017 ஆண்டு SAAVN -ல் அதிக பேர் விரும்பி கேட்ட தமிழ் ஆல்பங்களில் தென்னினிய அளவில் மெர்சல் முதல் இடத்தில உள்ளது.

WTP- ZEE தமிழ்-தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மற்ற படங்களை விட மெர்சல் மூன்று மடங்காக 6473000 BARC யை பெற்றுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் ரிலீஸ் படங்களில் மெர்சல் 23 வது RANK யை பெற்றுள்ளது.தெறி திரைப்படம் இன்டர்நேஷனல் மார்க்கெட் வசூலில் (US)
$7.2 மில்லியன் பெற்று 50
வது RANK ல் இருந்தது.இதனை மெர்சல் படம் முறியடித்து (US)$ 11.89 பெற்று 23 வது இடத்தில உள்ளது.

ZEE தமிழ்-தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்களில் மெர்சல் WTP -8.5 POINTS பெற்று முதல் இடத்தில் உள்ளது.

மெர்சல் படத்திற்கு “NATIONAL FILM AWARDS UNITED KINGDOM ” இல் இருந்து இரு விருதுகள் வழங்கப்பட்டது.சிறந்த நடிகருக்கான விருது தளபதி விஜய்க்கும் ,சிறந்த படத்திற்கான விருது மெர்சல் படத்திற்கும் வழங்கபட்டது.

தமிழ் (USA ) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் மெர்சல் படம் டாப் இல் உள்ளது.

2017 ரேடியோ மிர்ச்சி 93.8 FMல் டாப் 100 பாடல்களில் மெர்சல் படத்தின் ஆளப்போறன் தமிழன் பாடல் முதல் இடத்தில் உள்ளது. 92.2 BIG FM இல் 100 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து முதல் இடத்தில் மெர்சல் ஆல்பம் உள்ளது.

2018 ஆனந்த விகடன் விருதுகளில் மெர்சல் படத்திற்கான விருதுகள்:

சிறந்த நடிகருக்கான விருதினை தளபதி விஜய்க்கும், சிறந்த பின்னணி பாடகி விருது ஸ்ரேயா கோஷலுக்கும்,
சிறந்த இசையமைப்பாளர் விருது ஆர்.ரஹ்மானுக்கும்
சிறந்த ஆடை வடிவமைப்பு விருது கோமல் ஷாஹினிகும் வழங்கப்பட்டது.

இந்தியா அளவில் TREND ஆகிய 2017 HASTAGS ல் மெர்சல் TAG மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

பிரான்சில் மெர்சல் திரைப்படம் 32471 ENTRIES பெற்று மற்ற தமிழ் படங்களை விட முதல் இடத்தில் உள்ளது.

சென்னை சிட்டி 9 நாள் கலெக்ஷன்ஸ் ல் 9.23 கோடி வசூல் பெற்று 7 வது இடத்தில் உள்ளது.

தென்னிந்திய அளவில் BOOKMYSHOW ல் அதிக பேரால் விரும்பப்பட்ட படங்களின் பட்டியலில் மெர்சல் படம் இடம் பெற்றுள்ளது.

சமூக வலைத்தளமான ட்விட்டர் இல் 2017 இல் அதிகமாக பேசப்பட்ட படங்களுள் மெர்சல் படம் முதல் இடத்தில் உள்ளது.

இந்திய படங்களில் IMDB USERS ஆல் RATE செய்யப்பட்டு 9 வது இடத்தில் உள்ளது.

உலக அளவில் APPLE MUSIC வீடியோ சாங்க்ஸ் லிஸ்டில் முதல் தமிழ் பாடலாக மெர்சல் படத்தின் ஆளப்போறன் தமிழன் பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆன HASTAG இல் #MERSL டேக் மூன்றே நாளில் 1.7 மில்லியன் ட்வீட்ஸ் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

மேலும் முதல் தமிழ் திரைப்படம் ட்விட்டர் இல் EMOJI யை அறிமுகப்படுத்திய பெருமை மெர்சல் திரைப்படத்தினை சேரும்.

ANNA UNIVERSITY TECHOFES விருதுகள் 2018

MERSAL :

சிறந்த பட விருது மெர்சல் படத்திற்க்கும்,சிறந்த நடிகருக்கான விருது மெர்சல் படத்திற்காக தளபதி விஜய்க்கும் ,சிறந்த நடன இயக்குனர் விருது ஷோபி மாஸ்டர்க்கும் ,ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக சிறந்த பாடகி விருது பூஜா வைத்யநாதனுக்கும்,ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக சிறந்த பாடகர் விருது சத்யப்பிரகாஷுக்கும் ,சிறந்த வில்லன் விருது மெர்சல் படத்திற்காக S.J சூர்யாவிற்க்கும் ,
சிறந்த கலை இயக்குனர் விருது T.முத்துராஜ்க்கும், சிறந்த இயக்குனர் விருது அட்லி அவர்களுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது G.K விஸ்ணு அவர்களுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது விவேக் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

ரஜினிக்கு வெல்கம்; கமலுக்கு குட்பை… விரக்தியில் விசு..?

ரஜினிக்கு வெல்கம்; கமலுக்கு குட்பை… விரக்தியில் விசு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Kamal haasanரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளனர்.

இதற்கான பணிகளில் இருவரும் தனி தனி பாணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது.

பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான விசு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

ரஜினியின் ஆன்மீக அரசியலை வரவேற்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து கமலின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாராக உள்ளேன், தயவு செய்து கமல்ஹாசனை பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள் என கூறி கையெடுத்து கும்பிட்டப்படி எழுந்து சென்றுவிட்டார்.

கமல்ஹாசன் குறித்து எதுவும் கேட்காதீர்கள் என விரக்தியோடு விசு கூறியது தமிழ்த்திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Articles
Follows