கீர்த்தி சுரேஷ்க்கு பிரம்மாண்ட கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்கள்

கீர்த்தி சுரேஷ்க்கு பிரம்மாண்ட கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் ‘சர்காரு வாரி பாட்டா’. பரசுராம் என்பவர் இயக்கிய இந்த படத்தில் மகேஷ்பாபுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்திருந்தார்.

மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த படத்தில் தமிழில் காட்டாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார் கீர்த்தி.

ஷங்கர் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.; ஹீரோ யார் தெரியுமா?

இசையமைப்பாளர் தமன் இசைக்கு சரியான குத்தாட்டம் போட்டு இருந்தார்.

கீர்த்தியின் ஆட்டத்தையும் நடிப்பையும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கீர்த்தி ரசிகர்கள் அவருக்கு 35 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பெரும்பாலும் ஹீரோக்களுக்கு தான் ரசிகர்கள் கட்-அவுட் வைப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் கீர்த்திக்கு ரசிகர்கள் கட்-அவுட் வைத்துள்ளது அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் வைத்துள்ளதாம்.

Keerthy Suresh cut out

Huge cut-out for Keerthi Suresh by her fans in Andhra

விஜய் மகனுடன் டூயட் பாட ஆசைப்படும் நடிகை.; ஓ.. அட்வான்ஸ் புக்கிங்.?

விஜய் மகனுடன் டூயட் பாட ஆசைப்படும் நடிகை.; ஓ.. அட்வான்ஸ் புக்கிங்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்லாலுடன் விஜய் இணைந்து நடித்த ’ஜில்லா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ரவீனா தாஹா.

இவர் தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீசன் 2 சீரியலில் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விஜய்யின் மகன் சஞ்சய் வீடியோவை வைரலாக்கும் ‘தளபதி்’ ரசிகர்கள்

விஜய்யின் மகன் சஞ்சய் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் திரையுலகில் நடிகராகவோ அல்லது இயக்குனராகவோ அறிமுகமாவார் என கூறப்படுகிறது.

கனடா நாட்டில் திரைப்பட படிப்பை முடித்துள்ளார் சஞ்சய் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ… இதான் அட்வான்ஸ் புக்கிங் போல!?.. ரைட்டு நடக்கட்டும்..

Raveena Daha

Actress wants to romance with Vijay’s son?

அன்றே சொன்னார் விஜய்ஸ்ரீ.; பெண்கள் பிரச்சினைக்கு ‘ஹரா’ வாய்ஸ்.; முக.ஸ்டாலின் முன்னெடுப்பாரா.?

அன்றே சொன்னார் விஜய்ஸ்ரீ.; பெண்கள் பிரச்சினைக்கு ‘ஹரா’ வாய்ஸ்.; முக.ஸ்டாலின் முன்னெடுப்பாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ண்ண்……ட இடைவெளிக்கு பின் மீண்டும் நாயகனாக நடித்து மோகன் ரீஎன்ட்ரி கொடுக்கவிருக்கும் படம் ’ஹரா’.

மோகன் ஜோடியாக குஷ்பூ நடித்து வருகிறார்.

விஜய்ஸ்ரீ இயக்கி வரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் யோகிபாபு, மனோபாலா, சாருஹாசன், மொட்டை ராஜேந்திரன், ஜெயக்குமார், ரயில் ரவி, ஸ்வாதி, பிருந்தா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மனோ & பிரஹத் ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்து வருகிறார்.

பாமரன் முதல் அனைவரும் சட்டத் திட்டங்களை அறிந்திருக்க வேண்டும் என்பதை மையக்கருவாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

காவி கொடி… கல்லூரி பார்ட்டி.; மோகன் பிறந்தநாளில் விஜய்ஸ்ரீ கொடுத்த ‘ஹரா’ ட்ரீட்

மேலும் பெண் குழந்தைகளுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்ற ஒரு சாதாரண அப்பாவின் கோபமும் இதன் மையப் புள்ளி என கூறப்படுகிறது.

மே 10ல் மோகன் பிறந்தநாளில் இப்பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது. இதில் காவி கலர் கொடி.. சாருஹாசனின் ‘பால்தாக்ரே’ தோற்றம் ஆகியவை பெரிதாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் ’ஹரா’ படக்குழுவினர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

“பெண்களுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது ஸ்பெயின் நாட்டில் அமலில் உள்ளதை போல தமிழகத்திலும் மூன்று நாட்கள் விடுமுறை அளித்து நாட்டிற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் ’ஹரா’ பட சூட்டிங்கில் மோகன் தனது மகளுக்காக மாதவிடாய் நாட்களில் பள்ளியில் விடுமுறை கேட்கும் காட்சியை படமாக்கினாராம் விஜய்ஸ்ரீ.

கமல் பட பாணியில் ‘ஹரா’ டைட்டில் டீசர்.; மைக் மோகனை ஆக்‌ஷனில் தெறிக்க விடும் விஜய் ஸ்ரீ

தற்போது இது ஒரு நாட்டில் சட்டமாகியுள்ளது.

எனவே தற்போது இந்த கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘ஹரா’வின் இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பரிசீலனை செய்ய முன்னெடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

*கூடுதல் தகவல்..*

ஒவ்வொரு படமும் திரையிடப்படும் போது DISCLAIMER ல்… “புகை பிடித்தல் உடலுக்கு தீங்கு… மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு..” என்ற வாசகங்கள் இடம்பெறும்.

அத்துடன் “பெண்களின் அனுமதியின்றி அவர்களை தொடுவது குற்றம்..” என தான் முதன்முதலாக இயக்கிய ‘தாதா 87’ படத்தில் வாசகம் இடம் பெற செய்தவர் விஜய்ஸ்ரீ என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Haraa director Vijay Sri requests TN CM

படத்தலைப்பிலே வெற்றி.. – தியாகராஜன்.; பட்ஜெட்டை விட கதையே முக்கியம் – சுரேஷ்..; ‘கன்னித்தீவு’ விழா ஹைலைட்ஸ்

படத்தலைப்பிலே வெற்றி.. – தியாகராஜன்.; பட்ஜெட்டை விட கதையே முக்கியம் – சுரேஷ்..; ‘கன்னித்தீவு’ விழா ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குனர் தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் பேரரசு, நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி, தயாரிப்பாளர் சஞ்சய் லால்வானி ஆகியோருடன் நடிகர் ராஜ்குமார், நடிகை சுபிக்‌ஷா, இயக்குனர் சுந்தர் பாலு, இசையமைப்பாளர் ராஜ் பிரதாப், ஒளிப்பதிவாளர் சிட்டி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

நச்-ன்னு நாலு நாயகிகள் இணைந்த ‘கன்னித்தீவு’ பட பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

இயக்குனர், தயாரிப்பாளர் தியாகராஜன் பேசும்போது…

, ‘தினமும் செய்தித் தாளை எடுத்ததும் படிக்கும் முதல் விஷயம் கன்னித்தீவு. இதுவரை யாரும் இந்த தலைப்பை வைத்தது இல்லை. அது ஏன் என்று இதுநாள் வரை எனக்கு தெரியவில்லை. படத்தின் தலைப்பிலேயே இயக்குனர் வெற்றியடைந்து விட்டார். அனைவரையும் ஈர்க்கும் பெயரை கொண்ட கன்னித்தீவு வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என்றார்.

இயக்குனர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது,…

‘13 ஆண்டுகளாக என்னை இந்த துறையில் ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி. ரூ.1000 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பது சரியான வழிமுறை கிடையாது.

இப்படியே சென்றால் இதுபோன்ற படங்கள் விரைவில் தோல்வியடைந்து விடும். படத்திற்கு பட்ஜெட்டை விட கதை தான் முக்கியம். தயாரிப்பாளர் கே. ராஜன் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். இப்போது மஹா மற்றும் மாமனிதன் படங்களை வெளியிடுகிறேன். ஆகையால், திரைப்படங்களை என்னிடம் தாருங்கள் நான் வெளியிட்டு தருகிறேன்.

மற்ற மாநில மொழி படங்கள் 30% மட்டும் தான் வர வேண்டும். பான் இந்தியா படம் என்கிறார்கள். அப்போது அதை ஓடிடியில் வெளியிடுங்கள்.

திரையரங்கம் நிலைக்க வேண்டுமென்றால் சிறிய படங்கள் அதிகம் வர வேண்டும். அந்த திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாக வேண்டும். கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட எத்தனை படங்கள் வெற்றியடைந்துள்ளது என்று கூறுங்கள். புது இயக்குனர்கள் கதைகளை மையப்படுத்தி திரைப்படம் இயக்குங்கள். இது என்னுடைய வேண்டுகோள்’ என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,….

‘ராமநாராயணன் 28 நாட்களில் படம் எடுப்பார். 100 நாட்கள் ஓடும். ஆனால், இப்போது 280 நாட்கள் படம் எடுக்கிறார்கள் 20 நாட்கள் கூட ஓடுவது இல்லை. ஏழைகளுக்கு உதவுங்கள்.

நான் என்னால் இயன்றதை இயலாதவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். புகழுக்காக அல்ல; புண்ணியத்திற்காக! எப்போதும் மனதை சுத்தமாக வைத்திருங்கள்.

பெண்களை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் மதுபானம் தான்.

அனைத்து பெண்களும் சேர்ந்து தான் மதுவை ஒழிக்க வேண்டும். 4 பெண்களை வைத்து கன்னித்தீவு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் பாலு.

இரண்டு பாடல்களும் நன்றாக இருந்தது. இசையும், பின்னணி இசையும் நன்றாக இருந்தது. டிரைலரைப் பார்க்கும் போது ஆங்கில படம் போன்று இருக்கிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்’ என்றார்.

இயக்குனர் பேரரசு பேசும்போது,…

‘கன்னித்தீவு போல கச்சத்தீவும் எப்போதும் முடியும் என்று தெரியவில்லை. சில படங்களின் டிரைலரைப் பார்த்தால் இது தான் கதை என்று யூகிக்க முடியும். ஆனால், இப்படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது கதையை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருக்கிறது.

இதிலேயே இயக்குனரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. பெண் என்றால் மாபெரும் சக்தி. இப்படத்தில் 4 பெண்கள் நடித்திருக்கிறார்கள். நிச்சயம் இப்படம் வெற்றியடையும்’ என்றார்.

முதலையுடன் மோதும் கன்னித்தீவின் நான்கு நாயகிகள்

இயக்குனர் சுந்தர் பாலு பேசும்போது….

, ‘1999 ஆம் ஆண்டு தியாகராஜன் சாரிடம் நான் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறேன். அப்போது அவர் ஒரு விஷயம் கூறினார். அது, சினிமாவில் தெரியும் என்று சொல்வதைவிட தெரியாது என்று கூறுவதில் தான் மரியாதை அதிகம் என்று கூறினார். அதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

என்னுடைய முதல் படம் கர்ஜனை. திரிஷா நடிப்பில் உருவான இப்படம் இன்னும் வெளியாகவில்லை. முதலில் இயக்குனராகி விட்டு பின்பு தான் தயாரிப்பாளார் ஆனேன். கன்னித்தீவு படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறேன். குறைவான நாட்களில் இப்படத்தை இயக்கிருக்கிறேன்.

இப்படம் துவங்குவதற்கு முக்கிய காரணம் நீல்கிரிஸ் முருகன் சார் தான். கன்னித்தீவு இப்படம் வெற்றியடைய வேண்டுமென்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’ என்றார்.

நடிகை சுபிக்‌ஷா பேசும்போது,…

‘கன்னித்தீவு படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் ஆக்‌ஷன், பாடல் பாடுவது என்று ஒரு கதாநாயகன் செய்யும் அனைத்தையும் கதாநாயகிகளான நாங்கள் செய்திருக்கிறோம்.

திரைப்படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இயக்குனர் சுந்தர் பாலு சார் இயக்கி இருக்கிறார்’ என்றார்.

Kanni Theevu audio launch highlights

‘தசாவதாரம் 2’ எப்போ? – கே.எஸ். ரவிக்குமார்.; நான் நடிக்க ஆசைப்பட்டப்ப பெற்றோரே கிண்டலடிச்சாங்க – தர்ஷன்.; ‘கூகுள் குட்டப்பா’ விழா சுவாரஸ்யங்கள்

‘தசாவதாரம் 2’ எப்போ? – கே.எஸ். ரவிக்குமார்.; நான் நடிக்க ஆசைப்பட்டப்ப பெற்றோரே கிண்டலடிச்சாங்க – தர்ஷன்.; ‘கூகுள் குட்டப்பா’ விழா சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வேற லெவல் ஹிட்டப்பா என்று ஆகியிருக்கிற ‘கூகுள் குட்டப்பா’படத்தின் தயாரிப்பாளரும் அதன் முன்னணி கதாபத்திரத்தில் ஜொலித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தின் நாயகன் தர்ஷன் நாயகி லாஸ்லியா ஆகியோருடன் சென்னை, திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என். கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காலை கலந்துகொண்டார்.

‘கூகுள் குட்டப்பா’ மிக விரைவில் ஆஹா ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து ஆஹா ஓ.டி.டி தளம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் உற்சாகமாக விசிலடித்து ஆர்ப்பாட்டமாக இக்குழுவினரை வரவேற்ற நிலையில் அந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்…

“ உங்கள் ஆரவாரத்தைப் பார்க்கும்போது எனக்கு என் கல்லூரி காலங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. அப்போதெல்லாம் என் கல்லூரியின் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு திரு.பாலையா உட்பட பல நடிகர்களின் குரலில் மிமிக்ரி செய்வேன். சிதம்பரம் ஜெயராமன் குரலில் பாடுவேன்.

கூகுள் குட்டப்பா விமர்சனம் 3.25/5..; நீ GOOD அப்பா…

ஆனால் உங்களைப் போல் இவ்வளவு சத்தமாக விசில் அடிக்க கற்றுக்கொள்ளவில்லை. எனக்கு விசில் அடிக்கும்போது வெறும் சத்தம் மட்டும்தான் வரும். ஆனால் நடிகை குஷ்பூ எங்களோடு இங்கு வந்திருந்தால் உங்களை விட சிறப்பாக விசில் அடிப்பார்.

படத்தில் நான் விசில் அடிக்கும்படியாக காட்சி வந்தால் நான் வெறுமனே வாயை மட்டும் அசைக்க எனக்காக அவர்தான் விசில் அடிப்பார்.

உங்களை இவ்வளவு உற்சாகமாகப் பார்க்கும்போது எனக்கும் புது எனர்ஜி தொற்றிக்கொண்டுவிட்ட வகையில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த நேரத்தில் உங்களை அட்வைஸ் என்று எதுவும் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. அப்படி சொன்னா மட்டும் கேக்குற வயசா இது. ஆனால் இது வாழ்வின் முக்கியமான பருவம். வாழ்க்கையை நல்லா எஞ்சாய் பண்ணுங்க. ஆனா ஜஸ்ட் பாஸ் ஆகுற அளவுக்காவது படிக்கவேண்டியதும் ரொம்ப முக்கியம்”

அடுத்து மாணவ,மாணவியர் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கமலுடன் ‘தசாவதாரம்’ படத்தில் நடந்த சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “ கமல் எப்போதும் கடினமான உழைப்பை நம்பக்கூடியவர். NO PAIN NO GAIN என்பது அவரது பாலிசி. தசாவதாரம் படத்துக்கும் அப்படித்தான் உழைத்தார். சில தினங்களுக்கு முன் தசாவாதாரம் ரிலீஸாகி 12 வருஷம் ஆச்சா? என்று ஆச்சரியத்துடன் 2 மணி நேரம் பேசினார். சில வருடங்களாகவே கமலையும் என்னையும் பார்த்து ‘தசாவதாரம் 2’ எப்போது என்று கேட்கிறார்கள். ஆனால் எங்கள் இருவருக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் தசாவதாரம் போன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது. எனவே தசாவதாரம் 2’க்கு வாய்ப்பே இல்லை.

ஓ.டி.டி. தளங்களால் சினிமாவுக்குப் பாதிப்பா இல்லையா என்பது குறித்தெல்லாம் விவாதிக்கவேண்டியதில்லை. தொலைக்காட்சி வந்தபோதும் இப்படித்தான் சினிமாவே அழிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சினிமாவை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது.

கமல் தயாரிப்பாளராக்கினார்… ரஜினி உதவினார்..; ‘கூகுள் குட்டப்பா’ விழாவில் KSR பேச்சு

அதே சமயம் ஓ.டி.டி என்பது இன்னொரு விஞ்ஞான வளர்ச்சி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அண்மையில் வெளியான எங்கள் ‘கூகுள் குட்டப்பா’வை திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். அப்படிப் பார்க்காதவர்கள் விரைவில் வெளியிடப்படவிருக்கும் ஆஹா ஓ.டி.டி. தளத்தில் பாருங்கள்’ என்றார்.

அடுத்து பேசிய நடிகர் தர்ஷன்,….

‘நான் ஒரு நடிகனா உங்க முன்னாடி நிக்குறதுக்கு 7 வருஷ கடுமையான உழைப்பு தேவைப்பட்டிருக்கு. 300க்கும் மேற்பட்ட ஆடிஷன்கள் அட்டெண்ட் பண்ணியிருக்கேன். அதுல பல சமயங்கள் இவ்வளவு கேவலமா நடிச்சிருக்கோம் நாம எப்படி செலக்ட் ஆவோம்னு எனக்கே தோணியிருக்கு.

கல்லூரி காலத்துல நாம முக்கியமா சம்பாதிக்கவேண்டியது நல்ல நண்பர்களை. படிப்பு கூட அடுத்ததுதான். ஏன்னா இங்க கிடைக்கிறது மட்டும் தான் நம்ம தகுதி என்னன்னு பாக்காம கிடைக்கிற தூய்மையான நட்பு. அடுத்து கிடைக்கிறதெல்லாம் நம்ம அந்தஸ்தைப் பாத்து கிடைக்குற நட்புதான்.

நான் நடிகனாக ஆசைப்பட்டப்ப எங்க அம்மாவும் அப்பாவும் கூட கிண்டலடிச்சாங்க. தமிழ்நாட்டுல கோடிக்கணக்கான ஆட்கள் இருக்குறப்போ இலங்கைக்காரனான உனக்குத்தான் சான்ஸை அப்படியே தூக்கித் தரப்போறாங்களான்னு கேட்டாங்க. ஆனா என்னோட நண்பர்கள் தான் என்னை மோடிவேட் பண்னிக்கிட்டேயிருந்தாங்க. அவங்க கொடுத்த உற்சாகத்தாலதான் ‘கூகுள் குட்டப்பா’ படம் மூலமா உங்க முன்னாடி நிக்குறேன். அதனாலதான் சொல்றேன் கல்லூரி காலத்துல நல்ல நண்பர்களை சம்பாதிச்சுக்கோங்க” என்றார்.

அடுத்து பேசிய நடிகை லாஸ்லியா கையாலேயே ஹார்ட்டின் சிம்பள் காட்டி மாணவர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார், “ நானும் உங்களை மாதிரியே கல்லூரி காலங்கள்ல இப்படி விசிலடிச்சிக் கொண்டாடினவதான். உங்களை இவ்வளவு எனர்ஜியோட பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்க்கையில நீங்க என்னவா ஆக நனைக்கிறோங்களோ அதை விடா முயற்சியால சாதிக்க முடியும்/ நாங்க நடிச்ச ‘கூகுள் குட்டப்பா’ படத்தை தியேட்டர்ல பாக்காதவங்க ஆஹா ஓ.டி.டி தளத்துல பாருங்க” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

தமிழ் பார்வையாளர்களை புத்தம் புது நிகழ்ச்சிகளால் அசத்தி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில், ‘செல்ஃபி’, ‘மன்மத லீலை’ போன்ற திரைப்படங்கள் வெளியானது. ஆஹா ஒரிஜினல் படைப்பான‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற திரைப்படமும் வெளியானது.

இதற்கு பார்வையாளர்களிடையே பெருகி வரும் பேராதரவால் விரைவில் திரையரங்கில் வெளியாகியிருக்கிற ஜீ வி பிரகாஷ்குமாரின் ‘ஐங்கரன்’ திரைப்படத்தையும் ‘ஆஹா டிஜிட்டல் தளம் விரைவில் வெளியிடயிருக்கிறது.

Koogle Kuttapa team interactes with the students of SSN College

கமல் பட இசை விழாவில் ரஜினி விஜய் சூர்யா விக்ரம் பங்கேற்பு..; அஜித் மட்டும்.?

கமல் பட இசை விழாவில் ரஜினி விஜய் சூர்யா விக்ரம் பங்கேற்பு..; அஜித் மட்டும்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசனே இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இதில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ், ஷிவானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமலின் ‘விக்ரம்’ பட இசை வெளியீடு

கேங்ஸ்டர் கதையுடன் சிறை கைதிகளை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடக்கின்றன.

ஜூன் 3ல் படம் தியேட்டர்களில் வர உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி பெற்றுள்ளார்.

மே 11 மாலை 7 மணிக்கு (சொன்ன நேரத்தில் ரிலீசாகல) ‘விக்ரம்’ படத்தில் கமல் பாடிய ‘பத்தல…. பத்தல… ‘ என்ற பாடலின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர்.

இந்த பாடல் வரிகள் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பத்தல பாட்டு வைத்த வேட்டு..; ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல.; கமலை எச்சரிக்கும் RTI ஆர்வலர்

இந்த நிலையில் வருகிற மே 15ல் இசை மற்றும் டிரைலர் வெளியாக உள்ளது.

இந்த விழாவில் ரஜினி விஜய் சூர்யா விக்ரம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

நடிகர் அஜித் அழைத்தாலும் எதிலும் கலந்துக் கொள்ள மாட்டார் என்பதால் அவரை அழைக்க வாய்ப்பில்லை.

4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் படத்தின் இசை வெளியீடு நடைபெற இருப்பதால் விக்ரம் படத்தின் பாடல்கள் & படம் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kollywood top celebrities to attend Vikram audio launch function

More Articles
Follows