லாக் டவுன் லவ்வர்ஸ் ஆதித் – ஷிவாணிக்கு கை கொடுத்த ஹிப் ஹாப் ஆதி

www movieஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “WWW”.

ஆதித் அருண், ஷிவாணி ராஜசேகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்திரில்லர் திரைப்படத்தின் புதிய சிங்கிள் பாடல் இன்று ஜூன் 8 வெளியாகியுள்ளது.

பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஹிப்ஹாப் ஆதி “மின்னலை எதிரே” எனும் இப்பாடலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இயக்குநர் KV குகன் கூறியதாவது…

இது ஒரு அழகான மெலோடி பாடல். பொதுமுடக்க காலத்தில் சிக்கி பிரிந்திருக்கும் காதலர்கள் , கணிணி வழியே வெளிப்படுத்திகொள்ளும் உணர்வுகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறோம்.

பல அழகான மெலடி பாடல்களை தந்த இசையமைப்பாளர் சைமன் K கிங் இப்பாடலிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

கண்டிப்பாக அனைத்து இசை ஆர்வலர்களும் “மின்னலை எதிரே” பாடலை கொண்டாடுவார்கள். இப்பாடலை வெளியிட்டு ஆதரவு தந்த நடிகர், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி அவர்களுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் WWW ( Who… Where … Why…. ) எனும் இப்படத்தினை இயக்குவதுடன் படத்தின் திரைக்கதையை எழுதி ஒளிப்பதிவும் செய்துள்ளார் KV குகன்.

Ramantra Creations சார்பில் Dr. ரவி பிரசாத் ராஜு டட்லா தயாரிக்க விஜய் தரன் டட்லா இணை தயாரிப்பு செய்கிறார்.

தொடர்ச்சியாக வெற்றிகரமான ஆல்பங்களை தந்து வரும் சைமன்.K.கிங் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தம்மிராஜு படத்தொகுப்பு செய்ய, KN விஜயகுமார் வசனமெழுதியுள்ளார்.

பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பு செய்ய, மதன் கார்க்கி, கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளனர்.

Hip Hop Tamizha revealed minnalai song from WWW

Overall Rating : Not available

Related News

Latest Post