ரூ 65 லட்சம் கடனுக்கு ரஜினியை இழுத்து விட்ட தனுஷ் தந்தை கஸ்துாரி ராஜா..; ஐகோர்ட் எச்சரிக்கை

கடந்த 2012ம் ஆண்டில் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் நடிகர் தனுஷின் தந்தை கஸ்துாரி ராஜா 2 தவணைகளில் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

அப்போது 2 புரோ நோட்டுகளையும் எழுதிக் கொடுத்திருந்தார்.

கடனைத் முகுந்த் சந்த் திருப்பி கேட்டபோது கஸ்தூரி ராஜா கொடுக்கவில்லை. இழுத்தடித்துள்ளார்

ஒரு கட்டத்தில், கடன் தொகையை தான் தரவில்லை என்றால் சம்பந்தியான ரஜினி தருவார் எனவும் போத்ராவுக்கு கஸ்தூரி ராஜா கடிதம் கொடுத்துள்ளார்.

அதன் பிறகும் பணம் கொடுக்காததால், போத்ரா தரப்பில், 2016ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில், கஸ்தூரி ராஜா வாங்கிய கடனுக்கு தான் பொறுப்பாக முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை ஏற்றுக் கொண்டார் நீதிபதி.

எனவே முகுந்த்சந்த் போத்ரா சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து முகுந்த்சந்த் போத்ரா இறந்து விட்டடார். இவ்வழக்கை தொடர்ந்து நடத்த அவரது மகன் ககன் போத்ராவுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்தது.

இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என கஸ்தூரிராஜா தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் பணத்தை திருப்பி தருவது தொடர்பாக கஸ்தூரிராஜா எழுதிய கடிதம், நடிகர் ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும் எனவும் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

தீ்ர்வுகாண முடியாவிட்டால், வழக்கை விசாரித்து, தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்பின்னர் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

High court warns Dhanush father Kasthuri Raja

Overall Rating : Not available

Latest Post