தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மெர்சல் படத்தின் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா வசனங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் மெர்சல் படத்துக்கான தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்த கோர்ட் சரமாரி கேள்விகளை கேட்டது.
மெர்சல் படத்தில் அப்படி என்ன குறை கண்டீர்கள்? அந்த படத்தில் பேசப்பட்ட வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?
மேலும் மெர்சல் என்பது ஒரு படம், உண்மையில் பொதுநல அக்கறையிருந்தால் குடிப்பது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை நீக்கி சொல்லி நீங்கள் உயர் நீதிமன்றத்தை நாடலாம்.
மேலும் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு.
உங்களுக்கு படம் பிடிக்கவில்லை எனில் நீங்க அதை பார்க்காமல் இருக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
High court dismisses petition against Mersal issue of Censor Certificate