தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு சில ஹீரோக்களே தங்கள் படங்களில் வரும் பாடல்களுக்கு முக்கியவத்துவம் கொடுக்கின்றனர்.
அந்த பாடல் ஹிட்டாக அவர்கள் பலவிதமான புரோமோசன்களில் ஈடுபடுவதும் வழக்கம்.
அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் படத்தின் பாடல்கள் பெரும்பாலும் ஹிட்டடித்து விடும். அதற்கேற்ப இவரது படங்களுக்கு இமான் அல்லது அனிருத் இசையமைப்பார். இதுவே தொடர்கதையாக இருக்கிறது.
தற்போது நடித்து வரும் அயலான் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இது இவர்களின் முதல் கூட்டணியாகும்.
இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கலாம் என தகவல்கள் வந்துள்ளது.
அப்படி அமைந்தால் சிவகார்த்திகேயன் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் முதல்படமாக இது அமையும். ஏற்கெனவே கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்குகிறார்.
Harris Jayaraj to compose music for SK next film?