அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சம்பளம் தரும் ஜிவி. பிரகாஷின் புதிய முயற்சி

GV Prakashநடிகர், இசையமைப்பாளர் என திரையுலகில் வெற்றிகரமாக வலம் வரும் ஜிவி. பிரகாஷ், நம் சமுதாயத்திற்கும் தன்னால் இயன்ற உதவிகளை தினம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் அரசுப்பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது…

கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவை. அது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளது. அதற்கு நாம் இப்போது முயற்சி எடுக்க வேண்டும்.

பைக் ரேஸர் ஜிவி. பிரகாஷ்; போலீஸ் சித்தார்த்.. சசி போட்ட திட்டம்

ஏற்கனவே கல்வி என்பது வியாபாரமாகிவிட்டது.

இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவச கல்வி என்பதே சாத்தியம் இல்லாமல் போய்விடும் நிலை ஏற்படும்.

உலகஅளவில் சாதித்த பல தமிழர்கள், அரசு பள்ளிகளில் படித்தவர்களே.

தற்போது 890 அரசுப் பள்ளிகள் மூடும்நிலையில் உள்ளது. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான அளவிலான மாணவர்களே உள்ளனர்.

நகர்ப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இதில் எனது சிறிய முயற்சியாக சென்னையில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. சொல்லித் தரும் ஒரு தனியார் ஆசிரியரின் சம்பளத்தை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன்.

என்னை இந்த நல்முயற்சிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி, இவ்வாறு கூறினார்.

Overall Rating : Not available

Latest Post