கிராமப்புற ஆசிரியரை 3 வருடத்திற்கு தத்தெடுத்த ஜிவி. பிரகாஷ்

கிராமப்புற ஆசிரியரை 3 வருடத்திற்கு தத்தெடுத்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashs noble gesture for education He adopt a Govt teacher for 3 yearsநடிகர், இசையமைப்பாளர் என பிஸியாக வலம் வந்தாலும் தமிழ் சமுதாயத்திற்காக எப்போதும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது குரல் கொடுப்பவர் ஜி.வி.பிரகாஷ்.

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க நிதியளித்த முதல் நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தாய்மொழியில் தமிழில் கையெழுத்து இட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், விழுப்புரம் மரக்காணம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியரை 3 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு அந்த ஆசிரியரின் சம்பளம் சம்பந்தப்பட்ட அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுள்ளார்.

மேலும், ஆசிரியர் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் கிராமப்புற பள்ளிகளின் ஆசிரியர்களை தத்தெடுத்தால், கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத பற்றாக்குறை நீங்கி விடும் என தெரிவித்துள்ளார்.

எனவே நல்ல உள்ளங்கள் தாமாகவே முன்வந்து ஆசிரியர்களை தத்தெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

GV Prakashs noble gesture for education He adopt a Govt teacher for 3 years

சீறும் புலிகள் படத்தில் விடுதலைப்புலி பிரபாகரனாக பாபி சிம்ஹா

சீறும் புலிகள் படத்தில் விடுதலைப்புலி பிரபாகரனாக பாபி சிம்ஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In LTTE Chief Prabhakaran Biopic Bobby Simha Will Be Castedஜிகர்தண்டா படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து தேசிய விருதை வென்றவர் பாபி சிம்ஹா.

அதனையடுத்து ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அண்மையில் சாமி2 படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

தற்போது ரஜினிகாந்துடன் பேட்ட, அக்னிதேவ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்தப்படியாக விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபாகரனாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ஸ்டூடியோ 18 நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை லைட்மேன், நீலம் படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.

இவர், மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இவர் இயக்கிய நீலம் படம் சென்சார் பிரச்னையால் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

In LTTE Chief Prabhakaran Biopic Bobby Simha Will Be Casted

ரஜினி என்ற புத்தகத்தை படிக்க முடியாது; பெருமைப்படுகிறேன்.. : மணிகண்ட ஆச்சாரி

ரஜினி என்ற புத்தகத்தை படிக்க முடியாது; பெருமைப்படுகிறேன்.. : மணிகண்ட ஆச்சாரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manikandan Achari shares his working experience with Rajini in Pettaரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் படம் பேட்ட.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் தமிழ் திரையுலகைச் சேர்ந்த விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் பாலிவுட்டை சேர்ந்த நவாசுதீன் சித்திக் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த மணிகண்ட ஆச்சாரி என்பவரும் நடித்து வருகிறார்.

அண்மையில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கம்மட்டிப்பாடம் என்ற படத்தில் ரசிகர்களின் முழு கவனம் ஈர்த்தவர் மணிகண்ட ஆச்சாரி.

ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பரவசத்துடன் பகிர்ந்துள்ளார் அவர்.

“ரஜினி சாரிடம் நான் ஆச்சர்யப்பட்ட விஷயங்கள் மனிதநேயமும் நேரம் தவறாமையும் தான். இப்போதும் ஒரு இளைஞனைப் போல சுறுசுறுப்போடுதான் இருக்கிறார்.

மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் இயக்குனரிடம் சந்தேகங்களை கேட்டு அவர்களை சொல்வதை அப்படியே செய்கிறார்.

அவர் மிகப்பெரிய புத்தகம். என்னால் அந்த முழு புத்தகத்தையும் படிக்கமுடியாது. அவருடன் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார் மணிகண்ட ஆச்சாரி.

Manikandan Achari shares his working experience with Rajini in Petta

மக்கள் மனமேறிய பரியேறும் பெருமாள்.; காலா இயக்குனர் ரஞ்சித்தை வாழ்த்திய கமல்!

மக்கள் மனமேறிய பரியேறும் பெருமாள்.; காலா இயக்குனர் ரஞ்சித்தை வாழ்த்திய கமல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan with pa ranjith“இந்த முயற்சியையும், பயிற்சியையும் விட்டுவிடாதீர்கள்” பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு பா.இரஞ்சித்தையும் ,மாரி செல்வராஜையும் வாழ்த்திய நடிகர் கமல்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “பரியேறும் பெருமாள்” படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று படம் பார்த்த கமலஹாசன், “தனது நண்பர்கள் பலர் போன் செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரி செல்வராஜிடமும் இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள்… உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.

கன்னட சூப்பர் ஹிட்டான *நிஷ்யப்டா2* படம் தமிழில் *மஞ்சக்காடு* பெயரில் ரீமேக்!

கன்னட சூப்பர் ஹிட்டான *நிஷ்யப்டா2* படம் தமிழில் *மஞ்சக்காடு* பெயரில் ரீமேக்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

manjakkadu krishnaரீமேக் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது கன்னடத்தில் 2017ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நிஷ்யப்டா 2’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது.

நிஷ்யப்டா 2’ படம் தமிழில் ‘மஞ்சக்காடு’ என்ற பெயரில் உருவாக இருக்கிறது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் பி.கிருஷ்ணா இயக்க இருக்கிறார்.

இப்படத்தின் ரீமேக் உரிமையை ரவிபாபு என்பவரிடம் முறைப்படி பெற்று, தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து பி.கிருஷ்ணா இயக்க இருக்கிறார்.

அலைன்ஸ் பிக்சர்ஸ் சார்பில் உருவாக இருக்கும் இப்படம் கிரைம் திரில்லர் கதையாக தயாராகி வருகிறது.

இப்படத்தின் கதாநாயகன், நாயகி, பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது.

மேலும் படப்பிடிப்பு, டீசர் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது.

*ராட்சசன்* கதையின் பின்னணி இசையில் சவால்களை உணர்ந்தேன்.. : ஜிப்ரான்

*ராட்சசன்* கதையின் பின்னணி இசையில் சவால்களை உணர்ந்தேன்.. : ஜிப்ரான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ghibranஒரு சிறப்பான திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகும்போது, ஒட்டு மொத்த குழுவிடமும் பொதுவாக நிலவுகின்ற ஒரு நம்பிக்கை மற்றும் திருப்தியை நீங்கள் காணலாம். குறிப்பாக, தொழில்நுட்ப கலைஞர்களிடமும், இசையமைப்பாளர்களிடமும் இதை அதிகமாகவே காண முடியும். இசையமைப்பாளர் தான் தன் இசையால் படத்துக்கு முழு உயிரை கொடுக்கிறார். எப்போதும் அமைதியுடன் காணப்படும் இசையமைப்பாளர் ஜிப்ரான், அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் ‘ராட்சசன்’ படத்தின் மீது மிகுந்த உற்சாகமாத்துடன் இருக்கிறார்.

ராட்சசன் படத்தின் ஒட்டுமொத்த குழுவும் ஜிப்ரானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை பாராட்டி வருகிறார்கள். இது குறித்து ஜிப்ரான் கூறும்போது, “எந்த ஒரு படத்திலும் பாராட்டு எந்த அளவுக்கு வருகிறதோ, அந்த அளவுக்கு பொறுப்பும் என் தோள்களில் வந்து சேர்கிறது. மக்கள் என் பின்னணி இசையை அதிகம் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். அதனாலேயே படத்தை தேர்வு செய்வதில் நான் அதிகம் கவனம் செலுத்த வேண்டியதாகி விட்டது. உண்மையில், எந்த ஒரு இயக்குனரும் எனக்கு ஒரு கதை சொல்லும்போது, அதில் பின்னணி இசைக்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனிப்பேன். சில நேரங்களில், அது என் கருத்துக்கு ஆதரவாகவும், ஒரு சில நேரங்களில் முரண்பாடாகவும் இருந்திருக்கின்றன. ஆனால், ‘ராட்சசன்’ கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக்குறிப்புகள் ஓடியது. கதையை கேட்கும்போது பின்னணி இசையில் நிறைய சவால்கள் இருப்பதை நான் உணர்ந்தேன்” என்றார்.

ராட்சசன் படத்தில் பணிபுரியும்போது ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களை பற்றி ஜிப்ரான் கூறும்போது, “பின்னணி இசையின் வழக்கமான கூறுகளை கொண்டு இசையமைப்பதை தாண்டி, நிறைய இடங்களில் ‘இசையுடன் ஒலியை’ கலந்து தர வேண்டி இருந்தது. கதை சொல்லல் மற்றும் பிவி சங்கரின் சிறப்பான காட்சியமைப்புகளுக்கு இசை மூலம் சிறந்த விஷயங்களை வழங்க வேண்டும் என்று நினைத்தேன். நடிகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவருமே புதிய பரிமாணம் எடுத்திருக்கிறார்கள். ஒரு ரசிகனாக என்னை கவர்ந்தனர். இந்த படத்தில் எல்லோரும் திறமையாளர்கள். அதனால் நானும் மிகச்சிறப்பாக பணிபுரிய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டேன். திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு மற்றும் அவர்களின் கருத்துகளை கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

விஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், சுசானே ஜார்ஜ், காளி வெங்கட் மற்றும் முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த ராட்சசன் திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. ஜி.டில்லிபாபு (ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி) மற்றும் ஆர்.ஸ்ரீதர் (ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்) ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

More Articles
Follows