சூர்யாவின் வாடி வாசல்… பட்டைய கிளப்ப பாடலை துவக்கிய GV பிரகாஷ்

சூர்யாவின் வாடி வாசல்… பட்டைய கிளப்ப பாடலை துவக்கிய GV பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashசூரரைப் போற்று படத்தை முடித்துவிட்டு வாடி வாசல் மற்றும் அருவா ஆகிய இரு படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இதில் வாடிவாசலி படத்தை வெற்றிமாறன் இயக்க கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் வாடிவாசல் என்ற நாவலை தழுவி எடுக்கப்படவுள்ளது.

இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 75வது படமாகும்,

எனவே இந்த படம் தனக்கு மிகவும் ஸ்பெஷல் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஜிவி. பிரகாஷ்.

வாடிவாசல் படத்துக்கான இசை பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

வெற்றி மாறன், சூர்யா, வி கிரியேஷன்ஸ் என எனது சக்திவாய்ந்த கூட்டணியுடன். படத்தின் ஒலி தனித்துவமாக இருக்கும் என ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.

சூர்யா-ஜோதிகாவுடன் கைகோர்த்த 5 சூப்பர் ஹிட் டைரக்டர்ஸ்

சூர்யா-ஜோதிகாவுடன் கைகோர்த்த 5 சூப்பர் ஹிட் டைரக்டர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya jothikaநடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’.

ஜே.ஜே.பிரட்ரிக் என்ற புதுமுகம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார்.

ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இதில் ஜோதிகாவுடன் பிரபல நடிகர்களும் இயக்குனர்களுமான 5 பேர் இணைந்துள்ளனர்.

கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன் ஆகிய 5 இயக்குனர்களும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தியாகராஜன் தொழில் அதிபராகவும், பாண்டியராஜன், பிரதாப், பார்த்திபன் வழக்கறிஞர்களாகவும், கே.பாக்யராஜ் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேல் இந்த படத்தை வெளியிடுகிறார்.

ஊரடங்கில் ஏப்ரல் 20க்கு பிறகு எதற்கெல்லாம் தளர்வு.? ஒரு பார்வை

ஊரடங்கில் ஏப்ரல் 20க்கு பிறகு எதற்கெல்லாம் தளர்வு.? ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Guidelines and relaxation criteria for lockdown after 20th April கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மீண்டும் ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டு இருந்தார் பிரதமர் மோடி.

அதே சமயத்தில் பாதிப்பு குறைவான இடங்களில் ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பின் சிலவற்றில் தளர்வு ஏற்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில் பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

அதில…

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் வேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிகளை தொடரலாம்.

சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களை திறக்கலாம்.

கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள், மால்கள், வணிக வளாகங்களுக்கு தடை தொடரும்.

கனரக வாகன பழுது பார்ப்பு கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும்.

நோய்த்தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Guidelines and relaxation criteria for lockdown after 20th April

என் சம்பளத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் கொடுத்துடுங்க..; கதிரேசனுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்

என் சம்பளத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் கொடுத்துடுங்க..; கதிரேசனுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Lawrence donates rs 25 lakhs to sanitary workersகொரோனா தடுப்பு நிதியாக ரூபாய் 3 கோடியை ஏற்கெனவே வழங்கியிருக்கிறார் நடிகர் லாரன்ஸ்.

தற்போது இரவு பகல் பாராது தங்கள் உயிரையே பணயம் வைத்து பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்காக ரூ.25 லட்சத்தை வழங்க முன்வந்துள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் கதிரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பத்திரிக்கை மற்றும் ‌ஊடகத்துறை நண்பர்கள் ‌அனைவருக்கும்‌ என்‌ இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்‌. இன்று தமிழ்புத்தாண்டு, நாம்‌ அனைவரும் வீட்டில்‌ இருக்கிறோம்‌.

இந்த தருணத்தில் மருத்துவர்களாக, செவிலியர்களாக, காவலர்களாக, தூய்மை பணியாளர்களாக, நமக்காக பணிபுரிந்து கொண்டிருக்கும் மனித உருவில்‌ வாழும் கடவுள்களுக்கு வாழ்த்துக்களையும்‌, நன்றியையும் தெரிவித்துக்‌ கொள்றேன்‌.

இன்று காலை ராகவாலாரன்ஸ்‌ அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூற தொலைபேசியில்‌ அழைத்து இருந்தேன்‌. அப்போது அவர் பேசும்போது,

“அண்ணா, நாம் வீட்டிற்கு வாங்கி வரும் ‌அத்தியாவசிய பொருட்களையே 12 மணிநேரம் வெளியில் வைக்கும் ‌இச்சமயத்தில்‌, நம் வீட்டு குப்பைகளை முகம் சுளிக்காமல் தினமும்‌ எடுத்து செல்லும் தூாய்மை பணியாளர்களுக்கு ௨தவி செய்ய விரும்புவதாகவும்‌, தாங்கள்‌ எனக்கு கொடுக்கவிருக்கும்‌ சம்பளத் தொகையில் 25 லட்சம் ரூபாயை தூய்மைபணியாளர்களுக்கு, அவர்களின் வங்‌கிகணக்கில் நேரிடையாக சென்றடைய வழி செய்யுமாறும்‌ கூறினார்‌”. இத்தகைய நல்லுள்ளம் கொண்ட ராகவாலாரன்ஸ்‌ அவர்களுடன்‌ இணைந்து பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன்‌.

ஆகவே ராகவாலாரன்ஸ் ‌அவர்களின் விருப்பபடி 25லட்ச ம்ரூபாயை தூய்மைபணியாளர்களின் வங்கிகணக்கில் செலுத்தவுள்ளோம்‌.

எனவே தூய்மை பணியாளர்கள் தங்களின்‌ அடையாள அட்டை மற்றும்‌ அடையாள அட்டையில்‌ உள்ள நபரின் வங்கிகணக்கு எண் விவரங்களை கீழ்க்கண்ட எண்ணிற்கு வாட்ஸ்‌அப் மூலம்‌ அனுப்புமாறும்‌, இதற்கு ஊடக மற்றும்‌ பத்திரிக்கைதுறை நண்‌பர்கள்‌ உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்‌.

வாட்ஸ்‌அப்‌ எண்‌: 63824 81658

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் தயாரிப்பாளர் கதிரேசன்.

Actor Lawrence donates rs 25 lakhs to sanitary workers

அந்த அரசு சொல்றத கேளுங்க.. குடும்பத்தாருக்கு பரிசு கொடுங்க. – ரஜினி (வீடியோ)

அந்த அரசு சொல்றத கேளுங்க.. குடும்பத்தாருக்கு பரிசு கொடுங்க. – ரஜினி (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis advice to Tamil peoples who lives around the worldஇன்று ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து சொல்லியிருந்தார் என்பதை பார்த்தோம்.

அதன்பின்னர் இன்று மாலை புத்தாண்டு வீடியோ ஒன்றில் அவர் பேசியுள்ளார்.

அதில்…

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு இந்த புதிய ஆண்டு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

கொரோனா வைரஸால் முழு உலகமே பாதிப்படைந்துள்ளது. இதற்கு இந்தியாவும் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல.

உங்களைப் பிரிந்து வாழும் உங்கள் உறவினர்கள், குடும்பத்தினர்கள் சதா நேரமும் உங்களை பற்றி தான் சிந்திக்கின்றனர். உங்களைப் பத்திதான் அக்கறையில் உள்ளனர்.

நீங்கள் எந்த நாட்டில் வாழ்கின்றீர்களோ, அந்த அரசின் விதிமுறைகளை கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கொடுக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய பரிசு இதுதான். கவலைப்படாதீர்கள்.

இதுவும் கடந்து போகும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Rajinis advice to Tamil peoples who lives around the world

நயன்தாரா கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் டைரக்டர் யோகி பாபு..?

நயன்தாரா கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் டைரக்டர் யோகி பாபு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara will play the lead in Yogi Babus debut directorialதமிழ் சினிமாவில் நடிகராக வளர்ந்துவிட்டால் எல்லா நடிகர்களுக்கும் ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும்… தயாரித்து விட வேண்டும் என்பது கனவாக மாறிவிடும் போல..

தற்போது இந்த ஆசை யோகிபாபுக்கு வந்துவிட்டதாம்.

தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல் புரொடக்ஷன் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க யோகி பாபு திரைக்கதை எழுதி வருகிறாராம்.

இது நாயகிக்கான கதை என்பதால் இவருக்கு கோலமாவு கோகிலா படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க முயற்சித்து வருகிறாராம்.

தற்போது மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் என இரண்டு படங்களிலுமே நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

கொரோனா ஊரடங்குக்கு பின் யோகி பாபுவின் படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஒரு வேளை அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அடுத்த நாயகியை தேடும் முடிவில் இருக்கிறாராம் இந்த புதுமுக இயக்குனர் யோக பாபு.

ஒரு திறமையான ஏழை இளைஞன் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்று பணக்காரன் ஆகிறான் என்பது தான் கதையாம்.

(இது கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி கதையா இருக்கே.. என்கிறீர்களா..? )

Nayanthara will play the lead in Yogi Babus debut directorial

More Articles
Follows