வேற ஹீரோவ வச்சு படம் பண்ணுங்க..; ‘மெமரீஸ்’ வாய்ப்பை மறுத்தும் நடித்த வெற்றி

வேற ஹீரோவ வச்சு படம் பண்ணுங்க..; ‘மெமரீஸ்’ வாய்ப்பை மறுத்தும் நடித்த வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shiju Thameen’s Film Factory Pvt Ltd வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மெமரீஸ்” திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும்.

ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரச்செய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துக் கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இப்படத்தில் வெற்றி நாயகன் பாத்திரத்தில் நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடித்துள்ளார். ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார். கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நாயகி பார்வதி அருண் பேசியதாவது…

இது தான் எனது முதல் தமிழ்ப்படம் ஆனால் காரி முதலில் வெளியாகிவிட்டது. படப்பிடிப்பு எல்லாமே காட்டில் தான் நடந்தது. என்னுடைய கேரக்டர் ரொம்ப சின்னது தான் ஆனால் உங்களுக்குப் பிடிக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

நடிகர் வெற்றி பேசியதாவது…

எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன் ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள்.

என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள், கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

மெமரீஸ்

Actor Vetri refused to act in memories movie

ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்த தனுஷின் ‘வாத்தி’

ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்த தனுஷின் ‘வாத்தி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வெளியான படம் ‘வாத்தி’.

இப்படத்தில் தனுஷ் , சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகெள பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 17 அன்று தமிழ் – தெலுங்கு என இருமொழிகளில் திரையரங்குகளில் வெளியானது

இந்த நிலையில், ‘வாத்தி’/’சார்’ படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இப்படம் அதிகாரப்பூர்வமாக ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் கிளப்பில் நுழைந்ததாக தயாரிப்பு நிறுவனம் மார்ச் 4 அன்று ட்விட்டரில் அறிவித்தது.

புதிய போஸ்டரைப் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர்கள், “வாத்தி/ சார் மீதான காதல் தடுக்க முடியாதது. படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அபரிமிதமான ஆதரவிற்கு அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளனர்.

வாத்தி

dhanush’s ‘vaathi’ collections in 100 crore

‘அகிலன்’ மேடையில் 2 சூப்பர் அப்டேட் தந்த மோகன் ராஜா & பிரதீப் ரங்கநாதன்

‘அகிலன்’ மேடையில் 2 சூப்பர் அப்டேட் தந்த மோகன் ராஜா & பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘அகிலன்’. இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘பூலோகம்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர்.

ஸ்க்ரீன் ஸ்கின் ஸ்டூடியோ தயாரித்திருந்த அகிலன் திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் நாயகிகளாக பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் இணைந்து நடித்துள்ளனர்.

அகிலன்

மார்ச் 10ல் இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள ஒரு பிரபல மாலில் நடைபெற்றது.

இந்த விழாவில் தனது 20 ஆண்டுகால சினிமா பயணத்தை தன் சூப்பர் ஹிட் இயக்குனர்களுடன் கொண்டாடினார் ஜெயம் ரவி.

அகிலன்

அப்போது மோகன் ராஜா, கல்யாண், ஏ எல் விஜய், பிரதீப் ரங்கநாதன், எம் ராஜேஷ் உள்ளிட்ட இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

மோகன் ராஜா பேசும்போது தனி ஒருவன் படத்தில் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என அறிவித்தார்.

அதன் பின்னர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில்.. ஜெயம் ரவிக்கு ஒரு புதிய கதை சொல்லி உள்ளேன். விரைவில் நாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்தார்.

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தை பிரதீப் இயக்கி இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகிலன்

Mohan Raja & Pradeep Ranganathan gave 2 super updates on ‘Agilan’ stage

‘அகிலன்’ பட விழாவில் தன் சூப்பர் ஹிட் இயக்குனர்களை கௌரவித்த ஜெயம் ரவி

‘அகிலன்’ பட விழாவில் தன் சூப்பர் ஹிட் இயக்குனர்களை கௌரவித்த ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘அகிலன்’. இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘பூலோகம்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர்.

ஸ்க்ரீன் ஸ்கின் ஸ்டூடியோ தயாரித்திருந்த அகிலன் திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

அகிலன்

இந்த படத்தில் நாயகிகளாக பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் இணைந்து நடித்துள்ளனர்.

மார்ச் 10ல் இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள ஒரு பிரபல மாலில் நடைபெற்றது.

இந்த விழாவில் ஜெயம் ரவி தனது 20 ஆண்டு கால சினிமா பயண வெற்றி பயணத்தை ரசிகர்களுடன் கொண்டாடினார்.

அகிலன்

அப்போது அவருடன் இணைந்து பணியாற்றிய சூப்பர் ஹிட் இயக்குனர்கள் மோகன் ராஜா, பிரதீப் ரங்கநாதன், ஏ எல் விஜய், எம் ராஜேஷ் கல்யாண் உள்ளிட்ட இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

தனது சினிமா பயணத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர்களை ஜெயம் ரவி தன் பட விழாவுக்கு அழைத்த கௌரவித்தது ரசிகர் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.

20 வருடங்களை கடந்தாலும் என்றும் ஜெயம் ரவி நன்றி மறவாத நடிகர் என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

அகிலன்

Jayam Ravi honored directors at ‘Akilan’ film festival

‘பத்து தல’ படத்தில் நடிக்கும் பிரபல தமிழ் ஜோடி. அதிகார பூர்வ அறிவிப்பு

‘பத்து தல’ படத்தில் நடிக்கும் பிரபல தமிழ் ஜோடி. அதிகார பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் ‘கப்பான்’ மற்றும் ‘டெடி’ படங்களில் இணைந்து நடித்துள்ளனர் ஆர்யா – சயீஷா ஜோடி . பின்னர் நடிப்பிலிருந்து விலகி, அரியானா என்ற மகளை பெற்றெடுத்தார் ஆயிஷா. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘பத்து தல’ படத்தில் இந்த ஜோடி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் டீஸர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரீன் சினிமாஸில் நடந்த நிகழ்வின் போது, ​​​​ஆர்யா மற்றும் சாயிஷா முக்கிய கேமியோக்களில் நடிக்கிறார்கள் என்று இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணா தெரிவித்தார்.

Arya and Sayyeshaa’s special roles in ‘Pathu Thala’ revealed officially

கௌதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16 1947’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

கௌதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16 1947’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் ‘ஆகஸ்ட் 16 1947’.

இப்படத்தில் அறிமுக நாயகி ரேவதி நடிக்க, குக் வித் கோமாளி புகழ், ஷர்மா ரிச்சர்ட், அஸ்தன் ஜேசன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

என்.எஸ்.பொன்குமார் இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தை ஏப்ரல் 7, 2023 அன்று திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனை கௌதம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

மேலும், கௌதம் கார்த்திக், சிம்பு உடன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘பத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

ஆகஸ்ட் 16 1947

Gautham Karthik’s ‘August 16 1947’ release date Announcement

More Articles
Follows