ரெண்டு கால விரிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்….; சர்ச்சையை கிளப்பும் ‘பேச்சுலர்’ பட டிரைலர்

ரெண்டு கால விரிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்….; சர்ச்சையை கிளப்பும் ‘பேச்சுலர்’ பட டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் பேச்சுலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜிவி. பிரகாஷ். இவரே இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் மூலம் திவ்யபாரதி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

காதலர்களுக்கு இடையேயான அழுத்தமான காதலையும் காமத்தையும் அதிலுள்ள பிரச்சினைகளையும் இந்த படம் பேசவுள்ளது.

இது ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஸ் பிலிம்ஸ் சார்பாக டில்லி பாபு தயாரித்துள்ளார்.

தற்போது சற்றுமுன் இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த ட்ரைலரை கௌதம் வாசுதேவன், பா ரஞ்சித், ஐஸ்வர்யா ராஜேஷ், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் போன்ற பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த டிரைலரில்..

இளைஞர்களை சூடேற்றும் காட்சிகளும் வசனங்களும் அதிகம் இடம் பெற்றுள்ளன. எனவே இது சர்ச்சைகளை உருவாக்க வாய்ப்புள்ளது.

அடுத்த மாதம் டிசம்பர் 3ஆம் தேதி பேச்சுலர் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

GV Prakash in Bachelor trailer creates controversy

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே அனுமதி.; முடிவை பரிசீலனை செய்ய முதல்வருக்கு சிம்பு பட தயாரிப்பாளர் கோரிக்கை

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே அனுமதி.; முடிவை பரிசீலனை செய்ய முதல்வருக்கு சிம்பு பட தயாரிப்பாளர் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்.

திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன.

அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்த மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பை தந்தது திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு!

ஆனால், இப்போது வேக்சினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை.

பதினெட்டு வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை.

அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்று வர அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உங்கள் ஆட்சியில் வேக்சினேசன் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய்த் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது.

முகக் கவசம், சானிடைசர் போன்றவற்றால் தங்களை பாதுகாத்தே வருகின்றனர் மக்கள்.

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாகப் பாதிக்கும்.

ஆன்டிராய்டு போன் இல்லாதவர்கள் கூட படத்திற்கு வருவார்கள். அவர்களை சர்டிபிகேட் எடுத்துவரச் சொன்னால் திரையரங்கம் வருவதை அவர்கள் தவிர்ப்பார்கள்.

அதுவும் திரையரங்கம் வந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் மீண்டும் திரையரங்குகளின் பக்கமே வரமாட்டார்கள்.

தயைகூர்ந்து 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டுகிறோம்.

விரைந்து முடிவெடுத்து நம் திரையுலகையும்… திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன்.

நன்றி.

இவண்

சுரேஷ் காமாட்சி

தயாரிப்பாளர்/இயக்குநர்

22.11.2021:

*மாண்புமிகு தமிழக முதல்வர் உயர்திரு தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு,:*

அன்பு வணக்கம்.

பதவி ஏற்ற நாள் முதல் பம்பரமாக சுற்றி சுழன்று அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லாட்சி வழங்கி எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும் உழைப்புக்கு உதாரணமாகவும் விளங்கி வருகிறீர்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் தொடர்ந்து எடுத்து வரும் அற்புதமான நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி.

தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்களை நேற்று முதல் திரையரங்குகள் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகின்றன என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு எடுத்து வர விரும்புகிறேன். இதனால் பல திரையரங்குகளில் பார்வையாளர்களே இல்லை எனலாம்.

கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கான தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனமாரப் பாராட்டுகிறோம்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்கள் திரையரங்குகள் மற்றும் மால்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறித்த விழிப்புணர்வை போதுமான அளவில் மக்களிடம் ஏற்படுத்த சிறிது கால அவகாசத்தை வழங்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஏனென்றால், இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக புதிய திரைப்படங்களின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து திரையுலகம் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், இதனால் மீண்டும் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, எனது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்குமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவை ஒழிப்பதற்கான தங்களின் முயற்சிகளுக்கு மனமார்ந்த ஒத்துழைப்பை வழங்க திரையுலகம் உள்ளிட்ட அனைவரும் உறுதி கூறுகிறோம்.

மிக்க நன்றி,

பணிவன்புடன்,

நடிகர் உதயா

Maanaadu producer requets tamil nadu cm

‘மாநாடு’ இசை மேடையில் கண்ணீர் ஏன்.? மனம் திறந்தார் சிம்பு

‘மாநாடு’ இசை மேடையில் கண்ணீர் ஏன்.? மனம் திறந்தார் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இந்த படம் வரும் 25ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஆகிய இரு மொழிகளில் ஒரே நாளில் ரிலீசாகிறது.

தெலுங்கில் ‘தி லூப்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

அண்மையில் சென்னையில் மாநாடு இசை வெளியீடு நடைபெற்றது.

தற்போது தெலுங்கு பட புரமோஷன்ஸ் நடைபெற்று வருகிறது. இதற்காக சிம்பு ஐதராபாத் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அப்போது சிம்பு பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது…

“ஓரிரு ஆண்டுகளுக்கு முன் மனதளவில் பாதிக்கப்பட்டேன். ஆன்மிகத்தில் கவனம் செலுத்தி தற்போது என் பழைய நிலைக்கு வந்துள்ளேன்.

சரக்கு அடிப்பதையும் அசைவ உணவுகளையும் நிறுத்திவிட்டேன். தற்போது 25 கிலோ வரை என் உடலை எடையை குறைத்துள்ளேன்.

சென்னையில் மாநாடு இசை விழாவில் பேசிய போது… எனக்கு சில வருடங்களாக நடந்த சம்பவங்கள் என் கண் முன்னாடி வந்தன. எனவே என்னை மீறி அப்போது கண் கலங்கிவிட்டேன்,” என பேசியுள்ளார் சிம்பு.

Reason behind STR’s emotion at Maanaadu audio launch

JUST IN கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று.; மருத்துவமனையில் அனுமதி

JUST IN கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று.; மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவல் இருந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியளவில் 10,488 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 313 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,45,10,413 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா சென்று வந்த கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவரே தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

“அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது.

பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.”

என பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

Actor Kamal Haasan tests positive for Covid-19

டிராக்கை மாற்றிய சிவகார்த்திகேயன் & சந்தானம்..; சக்ஸஸ் ரூட்டில் டாக்டர் சபாபதி

டிராக்கை மாற்றிய சிவகார்த்திகேயன் & சந்தானம்..; சக்ஸஸ் ரூட்டில் டாக்டர் சபாபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் சந்தானம் இருவருமே விஜய் டிவியில் தங்கள் கேரியரை தொடங்கினர். அதில் பல நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு படிப்படியாக தங்களை உயர்த்தி கொண்டனர்.

பின்னர் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தனர்.

இவர்கள் இருவருமே கவுண்டர் டைமிங் காமெடி கொடுப்பதில் வல்லவர்கள். மக்களும் இதனை மக்களும் அதிகம் ரசிக்கவே இருவரின் வளர்ச்சியும் அசுர வேகத்தில் உயர்ந்தது.

முதலில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் பல படங்களில் நடித்து தற்போது ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

அதுபோல சிவகார்த்திகேயன் 3 படத்தில் சின்ன ரோலில் நடித்து தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார்.

இவர்கள் இருவருமே முதன்முறையாக தங்களது வழக்கமான காமெடி டிராக்கை மாற்றியுள்ளனர்.

நான் ஸ்டாப்பாக கலகலவெனும் பேசும் தங்களது டிரேட் மார்க்கை மாற்றி தங்களது புதிய படங்களில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்.

டாக்டர் படத்தில் அதிகம் பேசவே மாட்டார் சிவகார்த்திகேயன். படம் சூப்பர் ஹிட்டாகி ரூ 100 கோடி வசூலை தாண்டியுள்ளது.

அதுபோல் சபாபதி படத்தில் திக்குவாய் என்பதால் அதிகம் பேசவில்லை சந்தானம். அவரின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்துள்ளன.

இந்த இரு படங்களுமே தற்போது வெற்றிக்கரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள் டாக்டர் சபாபதி..

இருவரும் ஏதாவது ஒரு படத்திலாவது இணைந்து நடிப்பார்களா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Sivakarthikeyan and Santhanam changed their usual way

தமிழ்நாட்டை ஆள்வது முருகன்.. பில்கேட்ஸ் கிட்ட பேசிட்டேன்.. – விஜய்சேதுபதி

தமிழ்நாட்டை ஆள்வது முருகன்.. பில்கேட்ஸ் கிட்ட பேசிட்டேன்.. – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை மற்றும் குற்றமே தண்டனை உள்ளிட்ட தொடர் வெற்றிகளை கொடுத்தவர் இயக்குனர் மணிகண்டன்.

இவரது படங்கள் ஒரு சமூக அக்கறையோடு பயணிப்பதால் இவரது படங்களுக்கு பெண்கள் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் இவர் இயக்கியுள்ள அடுத்த படம் கடைசி விவசாயி.

ஆண்டவன் கட்டளை படத்தை தொடர்ந்து இதன் மூலம் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார் மணிகண்டன்.

முன்னணி கதாபாத்திரத்தை நல்லாண்டி எனும் முதியவர் ஏற்று நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்பட தொடக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்த நிலையில் சில காரணங்களால் அவர் விலக சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை சற்றுமுன் இப்பட டிரைலர் வெளியாகியுள்ளது.

இதில் விவசாயத்தை போற்றும் வகையில் காட்சிகள் உள்ளன. அதே சமயம் விவசாயி சிறைத்தண்டனை பெறும் காட்சிகளும் உள்ளன.

யானை பாகனாக நடித்துள்ளார் யோகிபாபு.

பில்கேட்ஸ் கிட்ட பேசினேன். அவர் இங்கிலீஷ்ல பேசினார். நான் தமிழில் பேசினேன் என்கிறார் விஜய்சேதுபதி.

இறுதியாக தமிழ்நாட்டை ஆள்வது முருகன் தான் என்கின்றனர். எப்போதுமே அவர் தான் நம்மை ஆள்கிறான் என்பதுடன் டிரைலர் முடிவடைகிறது.

Vijay Sethupathi dialogues in Kadaisi Vivasayi Trailer

More Articles
Follows