குரு பிரம்மாவாக மாறினார் ‘மின்னல் முரளி’ குரு சோமசுந்தரம்

குரு பிரம்மாவாக மாறினார் ‘மின்னல் முரளி’ குரு சோமசுந்தரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மின்னல் முரளி சிபுவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த குரு சோமசுந்தரம் குரு பிரம்மாவாக பெல் என்கிற திரைப்படத்தில் கதையின் வில்லனாக நடிக்கிறார். தவறான ஒருவனுக்கு கிடைத்து விடக் கூடாத ஒரு ரகசியம்.

பன்னெடுங்காலமாக அந்த ரகசியத்தை பாதுகாக்கும் பரம்பரையின் கடைசி ஒருவனான கிரகாம் பெல் என்ற பார்வைத் திறனற்ற தனிநபரின் கதையே Bell. பெல் அவன் வாழ்கையில் மற்றவர்களை எப்படி பார்க்கிறான் என்பது திரைக்கதை.

இத்திரைப்படம் ஏற்காடு மற்றும் மலைப்பகுதிகளில் மட்டுமே 60 நாட்களில் உருவாகியுள்ளது.

Brogan movies தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நிதிஷ் வீரா மற்றும் கலைமாமணி ஸ்ரீதர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

ராபர்ட் இசை அமைத்திருக்கிறார் பீட்டர் சக்ரவர்த்தி பாடல்கள் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பரணிகண்ணன் கதை வசனம் வெயிலோன். திரைக்கதை இயக்கம் R வெங்கட் புவன்.

திரைப்படத்தை புரோகன் மூவிஸ் தயாரித்துள்ளது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் பீட்டர் சக்கரவர்த்தி மற்றும் டேவிட் நலச்சக்கரவர்த்தி

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Guru Somasundaram’s next film is titled Bell

பாலிவுட் ஹீரோயின்களையே அஜித்துக்கு ஜோடியாக்கும் போனிகபூர்..; அடுத்து இவரா?

பாலிவுட் ஹீரோயின்களையே அஜித்துக்கு ஜோடியாக்கும் போனிகபூர்..; அடுத்து இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு தயாரிப்பாளரை.. ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவர்களுக்கே தொடர்ந்து வாய்ப்புகள் கொடுப்பது அஜித்தின் வழக்கம்.

நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்த தயாரிப்பாளர் போனிகபூர்… இயக்குனர் வினோத்.. நடிகர் அஜித் கூட்டணி தற்போது வலிமை வரை தொடர்ந்து வருகிறது.

3வது முறையாக அஜித் 61 படத்திலும் இந்த கூட்டணி இணையவுள்ளது.

அஜித் படங்களை ஹிந்தியில் புரோமோட் செய்ய பாலிபுட் நடிகைகளை அஜித்தின் ஜோடியாக்கி வருகிறார் போனிகபூர் என கூறப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் நாயகியாக நடித்தார்.

வலிமை படத்தில் அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். (காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்தவர் இவர்.) இந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை.

இந்த நிலையில் அஜித் 61 படத்தில் தபுவை நாயகியாக்க இருக்கிறதாம் படக்குழு.

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

AK 61 movie heroine from bollywood says Boney Kapoor

மகளை அடுத்து மகனையும் சினிமாவில் இறக்கும் ஷங்கர்..; அப்பா ஆசையை நிறைவேற்றுவாரா?

மகளை அடுத்து மகனையும் சினிமாவில் இறக்கும் ஷங்கர்..; அப்பா ஆசையை நிறைவேற்றுவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர் படங்கள் என்றாலே பிரம்மாண்டம்தான். இவரது படங்கள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பதால் இவருக்கான ரசிகர்களும் இங்கு ஏராளம்.

இவர் எஸ்ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர்தான் ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதற்கு முன்பே சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால் நடிப்பில் ஜொலிக்க முடியாமல் போனதால் தற்போது இயக்குனராகி வசூல் சாதனைகள் படைத்து வருகிறார்.

இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

ஷங்கரின் முதலாவது மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இரண்டாவது மகள் அதிதி ஒரு டாக்டர். அத்துடன் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரின் மகன் அர்ஜித் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளாராம்.

எனவே விரைவில் அர்ஜித் ஷங்கர் நடிக்கவுள்ள பட செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Arjith shankar debut soon in kollywood

தனுஷின் 2 படங்களில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர்கள் விலகல்..; காரணம் அவர்தானா.?

தனுஷின் 2 படங்களில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர்கள் விலகல்..; காரணம் அவர்தானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷின் 2 படங்களில் பணிபுரிந்துக் கொண்டிருந்த 2 ஒளிப்பதிவாளர்கள் அடுத்தடுத்து விலகும் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் மற்றும் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் (சார்) வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த மாதம் நானே வருவேன் பட ஒளிப்பதிவாளர் யாமினி அப்பட பாதியில் வெளியேறினார்.

தற்போது வாத்தி பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் அப்பட பணியில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.

இவர்கள் இருவரும் விலகும்போது மற்ற கலைஞர்களின் பெயர்களை குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் காலங்களில் அவர்களுடன் இணைந்து பணிபுரிய காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டிலும் தனுஷ் பெயரை அவர்கள் குறிப்பிடவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Reason behind Dhanush film cinematographers quits films

இந்த கதையை யாருமே நம்ப மாட்டாங்க..; ‘யாரோ’ டைரக்டர் ஓபன் டாக்

இந்த கதையை யாருமே நம்ப மாட்டாங்க..; ‘யாரோ’ டைரக்டர் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TAKE OK PRODUCTIONS சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ-த்ரில்லர் திரைப்படம் “யாரோ”.

யாரோ ஒரு வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் ஆகும், இது ஒரு கொலை மர்மத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை.

ஒரு மாறுபட்ட களத்தில் புதுமுகங்கள் நடிப்பில், பரபரப்பான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை TRIDENT ARTS சார்பில் R. Ravindran வழங்குகிறார். இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் வெங்கட் ரெட்டி.

அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகி வரும், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்

தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசியதாவது…

‘யாரோ’ திரைப்படம், ஐடி துறையில் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வெங்கட், சினிமா ஆசையில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இயக்குநர் சந்தீப் சாய் அழகாக இயக்கியிருக்கிறார். இப்படத்தை பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியிடுகிறோம் உங்களுக்கு பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் சந்தீப் சாய் பேசியதாவது…

நானும் வெங்கட்டும் ஐடியில் ஒன்றாக வேலை செய்தோம், இருவருக்கும் சினிமா ஆசை இருந்தது, வேலையை விட்ட பிறகு ஒரு குறும்படம் செய்தேன், அதை பார்த்துவிட்டு வெங்கட் படம் செய்யலாம் என்றார், அப்படித்தான் இப்படம் துவங்கியது. அவர் மிக அர்ப்பணிப்புணர்வுடன் படத்தை செய்திருக்கிறார். என்னுடைய குழுவினரால் தான் இப்படம் அழகாக வந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசை தான் படத்தின் முழு பலமும். அவரில்லாமல் படம் இத்தனை சிறப்பாக வந்திருக்காது. ஒளிப்பதிவாளர் K.B. பிரபு என்ன சொன்னாலும் அதனை கூலாக கையாண்டு, அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார். எங்கள் குழுவினருக்கு மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

படத்தின் இறுதி வரையிலும், பரபரப்பாக புதுமையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து தான் படத்தை எழுதினோம், படத்தை பார்க்கும்போது நீங்களும் அதை உணர்வீர்கள். எடிட்டர் அனில் கிருஷ்ணனின் அதிநவீன மற்றும் தனித்துவமான எடிட்டிங் பாணி “யாரோ” படத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியுள்ளது.

இப்படம் உருவாக முழுக்காரணம் என் நண்பர் வெங்கட் தான். இந்தக் கதையை அவ்வளவு எளிதாக யாரும் நம்ப
மாட்டார்கள். ஆனால், அவர் இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்து உழைத்திருக்கிறார். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம் நன்றி.

ஒளிப்பதிவாளர் KB பிரபு கூறியதாவது…

குறும்படம் செய்து தான் திரைத்துறைக்கு வந்தேன். என் ஒளிப்பதிவில் இன்னொரு படமும் தயாராகி வருகிறது. இயக்குநர் சந்தீப்பை எடிட்டர் மூலமாக தான் சந்தித்தேன் மிக திறமையானவர். நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம் ஆதரவு தாருங்கள் நன்றி.

எடிட்டர் அனில் கிரிஷ் பேசியதாவது…

நாங்க இளைஞர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். எப்போது இந்தப் படம் வெளியாகும் என ஆவலாக இருந்தேன். இப்போது சரியான நேரத்தில் வெளியாகிறது. சந்தீப் என் நண்பர், இந்தப்படத்தின் கதை உருவான சமயத்தில் இருந்தே தெரியும். படத்தில் வேலை பார்த்த அனைவரும் நண்பர்கள் தான். நான் லீனியர் பேட்டர்னை எடிட்டிங்கில் முயற்சித்துள்ளேன். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம். இந்தப் படத்தை அழகாக உருவாக்கியுள்ளோம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் பேசியதாவது…

நான் இதற்கு முன் “நெடுநல் வாடை” படத்திற்கு இசையமைத்தேன், அப்படத்திற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. இது என் இரண்டாவது படம். இயக்குநர் சந்தீப் சாய் 10 ஆண்டுகளாக என் நண்பர். இந்த படத்தின் பாடல்களை விட பின்னணி இசைக்கு அதிகம் உழைத்திருக்கிறோம். ஒரு புதுமையான சைக்கோ-திரில்லர் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம் நன்றி

தயாரிப்பாளர், நடிகர் வெங்கட் பேசியதாவது…

தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு முதலில் நன்றி. மிக இயல்பாக என்னிடம் பழகி, எனக்கு சினிமா பற்றி சொல்லி தந்து, இப்படத்தை வெளியிடுவதற்கு நன்றி. இப்படம் திரைக்கு வர அவர் தான் காரணம். இந்தப் படத்தை எடுக்க தீர்மானித்துவிட்ட பிறகு, படத்தை திட்டமிட ஆரம்பித்த போதே, நிறைய சிக்கல்கள் வந்தது. அதையெல்லாம் தாண்டி தான் இப்படத்தை எடுத்தோம்.

படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் வேண்டுமென பல காலமாக தேடினோம், நிறைய பேர் எங்கள் பட்ஜெட்டில் வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள், இறுதியாகத்தான் பிரபு வந்தார். பணத்தை மதிக்காதவர், சினிமாவை நேசிப்பவர். இந்தப்படத்திற்கு ஒரு தூணாக இருந்தவர் எடிட்டர் அனில்.

எங்களுக்கு படத்தில் என்ன சிக்கல் வந்தாலும் அவரிடம் தான் சொல்வோம். அவர் அதை சரி செய்து தருவார்.
இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் அருமையான இசையை தந்திருக்கிறார், அவரை நிறைய கஷ்டப்படுத்தியுள்ளோம். இந்த ஆறு வருடத்தில் நான் அதிகம் பேசியது சந்தீப் உடன் தான். நிறைய சண்டை போட்டிருக்கிறோம், எப்போதும் ஒரு சிறந்த நண்பனாக இருந்திருக்கிறார்.

எனக்காக ஒரு மிகச் சிறந்த பாத்திரத்தை இந்த படத்தில் உருவாக்கி தந்திருக்கிறார். எல்லா நடிகருக்கும் இந்த மாதிரியான பாத்திரம் கிடைத்து விடாது, ஆனால் எனக்கு முதல் படத்தில் கிடைத்திருக்கிறது.

சந்தீப் மிகச்சிறந்த திறமையாளர் அதை இந்த படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். நாயகி உபாசனா யாரும் நடிக்க தயங்கும் பாத்திரத்தில் ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறார். அவருக்கு நன்றி. இந்த படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. ஒரு புதுமையான ஹாரர் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளோம் ஆதரவு தாருங்கள் நன்றி

No one will believe this story Yaaro movie director opens talk

ஜிப்ரான் இசையில் பிரபுதேவா ஆடப்போகும் ‘ரேக்ளா’

ஜிப்ரான் இசையில் பிரபுதேவா ஆடப்போகும் ‘ரேக்ளா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘ரேக்ளா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

‘வால்டர்’ படத்தை இயக்கிய இயக்குநர் அன்பு இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படம் ‘ரேக்ளா’. இதில் கதையின் நாயகனாக பிரபுதேவா நடிக்கிறார்.
படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இதன் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த படத்தில் பணியாற்றும் நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள்
விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் ‘ரேக்ளா’ படத்தின் டைட்டில் லுக், இணையவாசிகளிடமும், ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Prabhu Devas 58th film is titled Rekla

More Articles
Follows