‘மின்னல் முரளி’ இயக்குனருடன் ‘ஹிருதயம்’ நாயகி இணைந்த ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மெகா ஹிட்

‘மின்னல் முரளி’ இயக்குனருடன் ‘ஹிருதயம்’ நாயகி இணைந்த ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மெகா ஹிட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cheers Entertainments சார்பில் லக்ஷ்மி வாரியர் & கணேஷ் மேனன் தயாரிப்பில், விபின் தாஸ் இயக்கத்தில், பாசில் ஜோசப் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே”.

கடந்த மாதம் 28 ஆம் தேதி கேரளா மற்றும் GCC திரையரங்குகளில் வெளியான இப்படம், பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் சமீபத்திய மலையாள சினிமாவின் சாதனைகளை தகர்த்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இயக்குனர் விபின் தாஸ், நஷித் முகமது ஃபாமியுடன் இணைந்து இப்படத்தை எழுதியுள்ளார்.

இத்திரைப்படத்தில் பாசில் ஜோசப், தர்சனா ராஜேந்திரன், ஆனந்த் மன்மதன், அஜீஸ் நெடுமங்காட், சுதீர் பரவூர் ஆகியோருடன், பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஹீரோ பாசில் ஜோசப் (Basil Joseph), மின்னல் முரளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலக அளவில் பிரபலமானவர்.

மற்றும் நாயகி தர்ஷனா ஹிருதயம் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

அனைவரும் ரசிக்கும்படியான முழுமையான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள படம் தான் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே”.

இப்படம் ராஜேஷ் & ஜெயா தம்பதியினரின் திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர்களுக்குள் நிகழும் கதையை சொல்கிறது. மிகவும் அவசியமான ஒரு சமூகப் பிரச்சினையை அசத்தலான நகைச்சுவையுடனும், அனைத்து தாக்கங்களுடனும் எடுத்துச் சென்றதில் இயக்குனர் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளார்.

இப்படம் இந்த ஆண்டில் (2022) மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறி சாதனை படைத்து வருகிறது. “ஜெய ஜெய ஜெய ஹே” திரைப்படம் கேரளா மற்றும் GCC யின் ஆரம்ப வெளியீட்டில் இருந்து மட்டும் ஏறக்குறைய 35 கோடிகளை வசூலித்துள்ளது.

தற்போது மேலும் இப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது. இந்தத் திரைப்படம் பிளாக்பஸ்டராக உருவானது மட்டுமல்லாமல், விமர்சகர்களிடமிருந்து அமோகமான விமர்சனங்களையும் பெற்றது.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே நவம்பர் 11, 2022 அன்று இந்தியாவின் பிற மாநிலங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. கேரளாவில் முதல் நாளிலேயே இப்படம் சுமார் 85 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தொழில் நுட்ப குழு
ஒளிப்பதிவு : பப்லு அஜு, இணை எழுத்தாளர்: நஷித் முகமது ஃபேமி, எடிட்டர்: ஜான்குட்டி, இசையமைப்பாளர்: அங்கித் மேனன், ஆக்சன் இயக்குனர்: பெலிக்ஸ், கலை இயக்குனர்: பாபு பிள்ளை.

‘சில்லா… சில்லா…’ சாங் சூட்டிங்.; ட்ரெண்டிங் செய்யும் அஜித் ரசிகர்கள்

‘சில்லா… சில்லா…’ சாங் சூட்டிங்.; ட்ரெண்டிங் செய்யும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘துணிவு’.

இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

நாயகியாக மஞ்சுவாரியர் நடித்து வருகிறார்.

‘துணிவு’ படத்தை அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் இன்று சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் ‘சில்லா.. சில்லா..’ என்ற பாடலை படமாக்கி வருகிறது படக்குழு.

கல்யாண் இந்த பாடலுக்கு நடனம் அமைக்க உள்ளார். அனிருத் இந்த பாடலை பாட வைஷாக் என்பவர் பாடலை எழுதியிருக்கிறார்.

இந்த பாடல் ‘ஆலுமா டோலுமா…’ என்ற பாடல் போல தர லோக்கலாக இருக்கும் என ஏற்கனவே கல்யாண் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை முதலே சில்லா சில்லா என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Ajith’s thunivu movie ‘Chilla chilla’ Song Trending

‘எல்லாம் ஓகே வா.. ‘ஓநாய்’ ஓடி வருது..; 3டி-யில் ஓட்டும் ஸ்டுடியோ கிரீன்

‘எல்லாம் ஓகே வா.. ‘ஓநாய்’ ஓடி வருது..; 3டி-யில் ஓட்டும் ஸ்டுடியோ கிரீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ (ஓநாய்) திரைப்படத்தில் இருந்து ‘எல்லாம் ஓகே வா!’ எனும் உற்சாகமூட்டும் புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

பெடியா திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகன் வருண் தவான் மற்றும் அவரது நம்பிக்கை மிகுந்த ஓநாய் நண்பர்கள் பழைமையான கார் ஒன்றில் மகிழ்ச்சியான சாலைப் பயணம் மேற்கொள்வது போன்று ‘எல்லாம் ஓகே வா!’ பாடல் அமைந்துள்ளது.

‘எல்லாம் ஓகே வா!’ பாடலை உற்சாகத்துடன் பாடிகொண்டே வருண் தவான், அபிஷேக் பானர்ஜி மற்றும் பாலின் கபக் உள்ளிட்டோர் அருணாச்சலப் பிரதேசத்தின் இயற்கை எழில் மிகு சாலைகளில் பயணிக்கின்றனர்.

மூன்று நண்பர்களுக்குள் உள்ள ஒற்றுமையையும் நட்பையும் இப்பாடல் நன்றாக பிரதிபலிக்கிறது.

அவர்கள் பயன்படுத்தும் பழைய மாருதி 800 கார் கடந்த காலத்தை கச்சிதமாக நினைவுப்படுத்துகிறது. சூழலுக்கு ஏற்ப இசையும், பாடல் வரிகளும் இரண்டற கலந்து கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்துள்ளன.

பெடியா

சச்சின்-ஜிகார் இசையில், அமிதாப் பட்டாச்சார்யா மற்றும் எஸ் சுனந்தனின் வரிகளில் உருவான பாடலை சந்தோஷ் ஹரிஹரன், வேலு மற்றும் கே ஜே ஐயனார் பாடியுள்ளனர்.

பாடலை பற்றி பேசிய இசை அமைப்பாளர்கள் சச்சின்-ஜிகார்…

“இளமை ததும்பும், உற்சாகமூட்டும் பாடலாக ‘எல்லாம் ஓகே வா!’ அமைந்துள்ளது. புதுமையான மெட்டுடனும், புத்துணர்ச்சி தரும் வரிகளுடனும் இசையின் மாயாஜலத்தை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் இருக்கிறது,” என்றனர்.

‘பெடியா’ திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், தற்போது வெளியாகி உள்ள ‘எல்லாம் ஓகே வா!’ பாடலும் வெற்றி பட்டியலில் இணைந்து பயணத்திற்கு உகந்த நண்பனாக திகழும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள ‘பெடியா’ நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஸ்டுடியோ கிரீன் வெளியிட உள்ளது.

https://bit.ly/EllamOkVa

எங்கிட்ட சொல்லுங்க, #EllamOkVa?

?’s road trip song is out now.
#Bhediya

https://bit.ly/EllamOkVa

@Varun_dvn @kritisanon @Deepakyahanhai @nowitsabhi #PaalinKabak #DineshVijan @nirenbhatt @Soulfulsachin @JIGARSARAIYA @SachinJigarLive @santoshhariharan #Velu #Kjiyenar

.@OfficialAMITABH @VijayGanguly
#SSunandhan @MaddockFilms @jiostudios @ZeeMusicCompany @StudioGreen2 @kegvraja @onlynikil

பெடியா

Bhediya tamil version will be released by studio green in tamil nadu

தனஞ்ஜெயன் மகள் திருமணம்.; திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்த சிவகுமார்

தனஞ்ஜெயன் மகள் திருமணம்.; திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்த சிவகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டாக்டர். G. தனஞ்ஜெயன் அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர். தற்போது நடிகர் விஜய் ஆண்டணியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் ஓரு பார்ட்னராக தயாரித்து வருகிறார்.

தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் பதவியில் இருக்கிறார். சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை அவரது எழுத்திற்காக வென்றிருக்கிறார்.

G. தனஞ்ஜெயனின் இரண்டு மகள்களும் தங்களது மேல் படிப்பை (M.S. in Computers) USA -வில் முடித்துவிட்டு அங்கே தற்போது முன்னனி நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

இரண்டு மகள்களது திருமணமும் இந்த வருடம் நவம்பர் – டிசம்பர் என ஒரு மாத இடைவெளியில் குடும்பத்தினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

G. தனஞ்ஜெயன் அவரது மூத்த மகளான ரேவதியின் திருமணம் நவம்பர் 20, 2022 அன்று அபிஷேக் குமாருடன் அம்பத்தூரில் உள்ள PSB கன்வென்ஷஸ் ஹாலில் நடந்தது.

இதில் தமிழ் சினிமாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகரும் பிரபல பேச்சாளருமான சிவகுமார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு திருமாங்கல்யத்தை மணமகன் அபிஷேக்கிடம் எடுத்து கொடுத்தார்.

*திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்களின் பட்டியல்:*

*முன்னணி தயாரிப்பாளர்கள்:*
கலைப்புலி எஸ். தாணு, ‘சூப்பர் குட்’ ஆர்.பி. செளத்ரி, எடிட்டர் மோகன், ஜி. என். அன்புசெழியன், அபிராமி ராமநாதன், டி.ஜி. தியாகராஜன், பிரமிட் நடராஜன், T. சிவா, K.E. ஞானவேல்ராஜா, PL. தேனப்பன், புஷ்பா கந்தசாமி, கதிரேசன், லலித்குமார், சுரேஷ் காமாட்சி, சித்ரா லக்‌ஷ்மணன், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், கமல்போஹ்ரா, பி. பிரதீப் மற்றும் பலர்.

*முன்னணி இயக்குநர்கள்*:

கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ஆர். பார்த்திபன், பாலா, ராம், மிஷ்கின், சுந்தர்.சி, வசந்த் சாய், ‘சிறுத்தை’ சிவா, ஏ.எல். விஜய், எழில், சசி, சீனு ராமசாமி, மோகன் ராஜா ஃ லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ராதாமோகன், விஜய் மில்டன், திரு, பாண்டிராஜ், கருணாகரன், எஸ்.எஸ். ஸ்டான்லி, அருண் வைத்யநாதன், பாலஜி குமார், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணா, கவுரவ் நாராயணன், ஆர். கண்ணன், மிலிந்த் ராவ், ஆண்ட்ரூ லூயிஸ், கேபிள் சங்கர் மற்றும் பலர்.

*முன்னணி நடிகர்கள்:*

விஜய் ஆண்டனி, கெளதம் கார்த்திக், சிபி சத்யராஜ், மனோபாலா, சுஹாசினி, ரோகினி, லிசி, பிரசன்னா, சிநேகா, ஆர்.கே. சுரேஷ், சச்சு, தியாகராஜன், பிரசாந்த், நகுல், சதீஷ், கணேஷ் வெங்கட்ராம், குட்டி பத்மினி, விதார்த், நட்டி, பஞ்சு சுப்பு, பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, கிகி விஜய், ஜெகன், சிதார்த்தா சங்கர், அஷ்வின் காக்குமனு, கயல் சந்திரன், ஜெயப்பிரகாஷ், சுரேஷ் ரவி, VJ ரம்யா, விச்சு மற்றும் பலர்.

இவர்கள் மட்டுமல்லாது, ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பாடகர்கள் என பல தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். மொத்தத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கூடி திருமண நிகழ்வில் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை கூறினர்.

அஜித்தின் வெறித்தனமான கேரக்டர் பெயரை டைட்டிலாக்கிய யோகி பாபு

அஜித்தின் வெறித்தனமான கேரக்டர் பெயரை டைட்டிலாக்கிய யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் சூப்பர் ஹிட் படமான ‘விஸ்வாசம்’ படத்தில் அவரது கேரக்டர் பெயர் ‘தூக்குத்துரை’.

தற்போது இந்த கேரக்டர் பெயரை புதிய படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர்.

இந்த படத்தில் யோகிபாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், செண்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா, வெற்றி பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘ட்ரிப்’ படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மூன்று விதமான காலகட்டங்களில் படத்தின் கதை நகர்வதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் இணையங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் இதோ..

இயக்கம் – டென்னிஸ் மஞ்சுநாத்,

ஒளிப்பதிவு: ரவி வர்மா.கே,

இசை – கே.எஸ்.மனோஜ்,

படத் தொகுப்பு – தீபக் எஸ் துவாரக்நாத், கலை இயக்கம் – ஜெய்முருகன், பாக்கியராஜ், சண்டைப் பயிற்சி இயக்கம் – மான்ஸர் முகேஷ், ராம்குமார், பாடல்கள் – அறிவு, மோகன்ராஜன், நடனப் பயிற்சி இயக்கம் – ஸ்ரீதர், ஆடை வடிவமைப்பாளர் – நிவேதா ஜோசப், உடைகள் – பாலாஜி, ஒப்பனை: ஏ.பி.முகமது, Effects & Logics (VFX): அரவிந்த்,

நடிகர்கள் தேர்வு (Casting): ஸ்வப்னா ராஜேஷ்வரி, படங்கள்: சாய் சந்தோஷ்,

தயாரிப்பு மேலாளர்: மனோஜ் குமார், தயாரிப்பு நிர்வாகி: பாலாஜி பாபு.எஸ், நிர்வாகத் தயாரிப்பாளர்: ஜெயசீலன், பத்திரிகை தொடர்பு – டீம் D’One,

விளம்பர வடிவமைப்பு: சபா டிசைன்ஸ், இணை-தயாரிப்பு : வினோத் குமார் தங்கராஜூ.

மீண்டும் அஜித் – விஜய்யை இயக்குவது எப்போ.? SJ. சூர்யாவின் ஆச்சர்ய பதில்

மீண்டும் அஜித் – விஜய்யை இயக்குவது எப்போ.? SJ. சூர்யாவின் ஆச்சர்ய பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நடித்த ‘கொலைகாரன்’ படத்தை இயக்கியவர் ஆண்ட்ரூ லூயிஸ்.

இவர் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘வதந்தி’. வெப் தொடராக உருவாகியுள்ள இதில் எஸ் ஜே சூர்யா நாயகனாக நடித்துள்ளார்.

அவருடன் பாலிவுட் நடிகை சஞ்சனா ஸ்மிருதி வெங்கட் லைலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் குமரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொலைகாரன் படத்திற்கு இசையமைத்த சைமன் கிங் என்பவர் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

பிரபல இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இந்த வெப் தொடரை தயாரித்துள்ளனர்.

டிசம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் பட குழுவினர் செய்தியாளர்களை சென்னையில் சந்தித்தனர்.

அப்போது எஸ்.ஜே சூர்யாவிடம் செய்தியாளர்கள் அஜித் மற்றும் விஜய் மீண்டும் இயக்குவீர்களா? என்று கேட்டோம்.

அப்போது அவர்..” என்னையே என்னால் இயக்க முடியாமல் நான் இருக்கிறேன். தொடர்ந்து நிறைய படங்களில் வாய்ப்புகள் வருவதால் நடித்து கொண்டிருப்பதால் படங்களை இயக்க முடியவில்லை.” என்றார் சூர்யா

More Articles
Follows