தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வெளிவரவுள்ள படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’.
இப்படத்தின் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு பாடலையும் ஒவ்பொரு நாட்டில் வெளியிட உள்ளனர்.
அதாவது சென்னையில் ஆரம்பித்து பூட்டான், மியான்மார், தாய்லாந்து, மலேசியா வழியாக சிங்கப்பூர் செல்கின்றனர் இப்படக்குழுவினர்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை சூர்யா கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார்.
இவ்விழாவில் இயக்குனர் அப்பாஸ் அக்பர், இசையமைப்பாளர் ஜிப்ரான், கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் பாலச்சந்திரன், எம்சி ஜீஸ், ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து, படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷபீர் ஆகியோர் பங்குபெற்றனர்.
இதுகுறித்து ஜிப்ரான் கூறுகையில்….
ஆறு நாடுகளை கடந்து செல்லவிருக்கிறோம். இது ரிஸ்க்கான பயணம் என்பதை அறிந்தாலும் ஒரு புது முயற்சியாக செய்கிறோம்.
எங்கள் பயணம் இனிமையாக அமைய எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்துக்காகவும் நீங்கள் கடவுளை வேண்டுங்கள்” என கேட்டுக்கொண்டார்.