தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நல்ல தரமான மற்றும் நேர்மையான ஒலி மற்றும் இசைக்காக கொண்டாடப்பட்ட ஜிப்ரானை, தற்போது லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இசைக்கான ‘கான்ஃபுல்லென்ஸ் எக்ஸலன்ஸ் விருது’ வழங்கி கவுரவிக்கிறது.
“சர்வ வல்லமையுள்ள கடவுள், இசையை உருவாக்குபவர், இசையமைக்க எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றி. இது போன்ற கௌரவத்தை பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதே வேளையில், என் மீதும், என் இசையின் மீதும் அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பு செய்ய வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கிறது” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
ஜிப்ரான் சமீப காலங்களில் அடுத்தடுத்து சார்ட்பஸ்டர் ஆல்பங்களை கொடுத்து பாராட்டுகளை பெற்று வருகிறார். நேர்த்தியான பாடல்களுக்கு மட்டுமல்லாமல், பின்னணி இசைக்கும் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.
மிகத் தீவிரமான உதாரணமாக அவரது சமீபத்திய வெளியீடான ‘ராட்சசன்’ படத்தை சொல்லலாம். சிறு குழந்தைகள் உள்ளிட்ட பல ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள் அவருடைய இசைப் படைப்புகளை மறுபடியும் செய்து பார்க்க முயற்சித்துள்ளனர்.
இது ஜிப்ரானின் தலைசிறந்த இசை, ‘பின்னணி இசை’ அமைப்பில் பலருக்கும் உத்வேகத்தை வழங்கியுள்ளது.
விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான், ஹன்சிகாவின் மகா, மாதவன் நடிக்கும் படம், ஜீவா நடிக்கும் படம், இம்சை அரசன் 24ஆம் புலிகேசி, இத் வேதாளம் சொல்லும் கதை, ஹவுஸ் ஓனர், ஹோம் மினிஸ்டர், உள்துறை மந்திரி (கன்னடம்-தெலுங்கு இருமொழிகளில்) உள்ளிட்ட பல்வேறு வகையான படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜிப்ரான்.
Ghibran Conferred With Confluence Excellence Award in Music at British Parliament